இடுகைகள்

வரிவிகிதம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பிஸ்கெட் விற்பனையிலும் சுணக்கமா? தடுமாறும் பிரிட்டானியா, பார்லே!

படம்
better india பிஸ்கெட் வாங்கத் தயங்கும் மக்கள்! பொருளாதாரத்துறை மந்த நிலை என்பது இந்திய வாகனத்துறையை மட்டுமல்ல; நொறுக்குத்தீனி வகைகளையும் பாதித்துள்ளது. நுகர்வுப்பொருட்களின் வளர்ச்சியும் ஒற்றை இலக்கமாக உள்ளதை நாளிதழ்கள் வாயிலாக அறிந்திருப்பீர்கள். வேலையைக் காப்பாற்றிக்கொள்ளவே போராடும் நிலை வந்துவிட்டது. எனவே, நொறுக்குத்தீனி வாங்குவதற்குக் கூட கிராம, நகர தொழிலாளர்கள் குறைவான காசை செலவழித்து வருகின்றனர். இந்தியாவின் முதன்மை பிஸ்கெட் தயாரிப்பு நிறுவனமான பிரிட்டானியா உள்நாட்டு விற்பனை தேக்கம் பற்றி அறிவித்துவிட்டது. இதன் போட்டியாளரான பார்லே, பத்தாயிரம் ஊழியர்களை பணியிலிருந்து நீக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் பார்லே இதனை மறுத்துள்ளது.  இதற்கு முக்கியமான காரணமாக கூறுவது 2016ஆம் ஆண்டு அமலான பணமதிப்பு நீக்கம், 2017ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி வரி என்கின்றது பார்லே நிறுவன வட்டாரம். இந்தியா ரேட்டிங்க்ஸ் நிறுவனம், இந்தியாவிலுள்ள 33.2 சதவீத தொழிலாளர்கள் நுகர்வுப்பொருட்களை வாங்கும் முக்கியமான சக்தியாக இருந்தனர். தற்போது அந்த பகுதியும் பலவீனமடைந்துள்ளது. ரூ.5