இரு அதிநாயகர்களை ஆட்டுவிக்கும் புத்திசாலி! - தி கிளாஸ் - மனோஜ் நைட் சியாமளன்
தி கிளாஸ் இயக்கம் - மனோஜ் நைட் சியாமளன் நடிப்பு – சாமுவேல் ஜாக்சன், ப்ரூஸ் வில்லிஸ், ஜேம்ஸ் மெக் அவோய், அன்யா டெய்லர் ஜாய் எழுத்து, இயக்கம், தயாரிப்பு – எம்.நைட் சியாமளன் கிளாஸ் படம் பார்க்கும் முன்னர் அன்பிரேக்கபிள், ஸ்பிளிட் ஆகிய படங்களைப் பார்ப்பது நல்லது. அப்போதுதான் படத்தை நன்றாக புரிந்துகொள்ள முடியும். தி கிளாஸ் படத்தில் மூன்று பாத்திரங்கள் சந்திக்கிறார்கள். இவர்கள் யார், இவர்களில் யார் அதிக சக்தி வாய்ந்தவர் என்பதற்கான போட்டி நடைபெறுகிறது. கெவின் என்ற நபர் நான்கு கல்லூரி மாணவிகளை கடத்தி வைத்திருக்கிறார். இதை காவல்துறை அறிந்தாலும் யார் கடத்தியது என்பதை அறியமுடியவில்லை. இதற்கு இடையில் பாதுகாப்பு உபகரணங்களை விற்கும் கடையை நடத்தும் டுன் என்பவர், இந்த விவகாரத்தில் உள்ளே வருகிறார். இவர் தனது உள்ளுணர்வு மூலம் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து அவர்களை அடி வெளுக்கிறார். காவல்துறையில் பிடித்துக் கொடுக்கிறார். ஆனால் காவல்துறை டுன்னை அடையாளம் கண்டுபிடிக்க முடியாமல் தடுமாறுகிறது. மேலும் அவரை பல்வேறு பட்டப் பெயர்கள் வைத்து ஊடகங்கள் அழைக்கின்றன. காவல்துறைக்கு உள்ள நல்லப்பெயர், மரி...