இடுகைகள்

நேர்காணல்!- டிஎன் ஜா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவேகானந்தர் இஸலாமியர்களை பற்றி கூறியது என்ன?

படம்
முத்தாரம் நேர்காணல் டி . என் . ஜா , வரலாற்று ஆய்வாளர் தமிழில் : ச . அன்பரசு வரலாற்றை ஒற்றைத்தன்மையுடையதாக மாற்றும் இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து பேசிவரும் ஆய்வாளர் டி . என் . ஜா , பசுவின் புனித தன்மை , பாரதமாதா கோஷம் , ஜெய் ஹிந்த் ஆகியவை அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற சமத்துவத்தை உடைக்க துடிக்கும் செயல்பாடுகளைப் பற்றியும் உரையாடுகிறார் . அண்மையில் Against the Grain எனும் டி . என் . ஜாவின் நூல் வெளியாகியுள்ளது . அரசியலமைப்புச்சட்டம் இந்தியா என்பது பாரதம் என்று கூறுகிறது . பாரதம் என்ற நாடு இல்லை என்ற நிலையில் தேசிய உணர்ச்சியை தூண்டும் பாரத மாதா கீ ஜே என்ற சுலோகன் உண்மையா ? வேத எழுத்துக்களில் பாரதம் என்ற நாடு பற்றிய தகவல்கள் உள்ளன . முதல் நூற்றாண்டில் கலிங்க அரசர் கரவேலா காலத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது . பின் பத்தொன்பதாம் நூற்றாண்டில் இப்பதம் பேச்சு வழக்குக்கு திரும்பியது . இன்று தாயைப் போல மரியாதை அளிக்கப்படுகிறது . த்விஜேந்திர லால்ராய் (1853-1913) என்பவரின் பாடலில் பாரதமாதா என்ற சொல் வருகிறது . 1904 ஆம் ஆண்டு விக்டோரியா ராணியை பாரத மாதா