இடுகைகள்

வைரஸ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வேகமாக பரவி வரும் மங்கிஃபாக்ஸ் தொற்றுநோய்!

படம்
  சின்னம்மை ஏற்படுத்தும் வைரஸை ஒத்துள்ள வைரஸ்தான், மங்கிஃபாக்ஸை ஏற்படுத்துகிறது. இதன் பாதிப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள குரங்குகளில் தொடங்கியது. கடந்த 7 ஆம் தேதி இங்கிலாந்து அரசு மங்கிஃபாக்ஸ் நோய் பாதிப்பை முதன்முறையாக அறிவித்தது. அண்மையல் அங்கு நைஜீரியாவிற்கு சென்று வந்த பயணி, மங்கி ஃபாக்ஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் இங்கிலாந்திற்கு வந்ததும் தோலில் அலர்ஜி போன்ற பாதிப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார். இவரிடமிருந்து இன்னும் எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3.  2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸ் தாக்குதல் அறியப்பட்டது. அப்போதும் நைஜீரியா சென்று வந்த பயணிகளால் தான் பாதிப்பு ஏற்பட்டது.  மங்கி ஃபாக்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதம் 1 முதல் 10 சதவீதம்தான். பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் இறந்துவிடுவார்கள். அதுதான் இதில் ஆபத்தான பயப்படும் அம்சம்.  எப்படி பரவுகிறது? நோய் பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவதால். இன்னொன்று, நோய் பாதிக

பூச்சிகளின் ரத்த வேறுபாடு? - பதில் சொல்லுங்க ப்ரோ?

படம்
  pixabay-  பதில் சொல்லுங்க ப்ரோ? பூச்சிகளின் ரத்தம் மனிதர்களின் ரத்தம் மாதிரி இருப்பதில்லையே ஏன்? வேறுபாட்டிற்கு காரணம், நமது உடலில் உள்ள  சிவப்பணுக்கள்தான். பூச்சிகளின் உடலில் ஹீமோலிம்ப் எனும் திரவம் உள்ளது. இந்த திரவம்தான் அந்த உயிரிகளின் உடலிலுள்ள செல்களை பாதுகாக்கிறது. பூச்சிகளின் ரத்தத்தில் பெரும்பாலும் நீர்தான். கூடவே அயனிகள், கார்போஹைட்ரேட், கிளிசரால், அமினோ அமிலங்கள், நிறமிகள், செல்கள் ஆகியவை இருக்கும்.  பூச்சிகளின் உடலிலிருந்து சிவப்பு நிற திரவம் வந்தால் அது அதன் கண்களில் உள்ள சிவப்புநிறத்திலிருந்து வந்ததாக இருக்கும்.  பூச்சிகளின் ரத்தம் பொதுவாகவே வெள்ளை அல்லது பச்சையாக இருக்கும். பாலூட்டிகளின் உடலில் சிவப்பணுக்கள் மூலமாக செல்கள் உயிரோடு இருக்கின்றன. இவைதான் செல்கள் அனைத்திற்கும் ஆக்சிஜன் கிடைக்கிறது. பூச்சிகளுக்கு இப்பணியை ட்ரிச்சல் ட்யூப் என்ற உறுப்பு இப்பணியை செய்கிறது.  பூச்சிகளுக்கு என்னவிதமான நோய்கள் ஏற்படும்? அனைத்து உயிரினங்களுக்குமே பாக்டீரியம் மற்றும் வைரஸ், பூஞ்சைகள் எப்போதும் நோய்களை ஏற்படுத்துகின்றன. பூச்சிகளுக்கு கூடுதலாக ஒட்டுண்ணிகள் மூலம் பாதிப்பு ஏற்படுகிறது.

கொரோனாவால் குரலை இழந்தேன்!

படம்
  கொரோனாவால் குரலை இழந்தேன்! இங்கிலாந்தைச் சேர்ந்த கானர்  ரீட் (Connor Reed) கொரோனா வைரஸ் தாக்கி மீண்டுள்ளார். கடந்த ஆண்டு சீனாவில் பணியாற்றியவர், வைரஸால் தாக்கப்பட்டு உயிர்மீண்டதே மறுபிறப்பு போலத்தான்.  இங்கிலாந்தின் நார்த்வேல்ஸ் பகுதியிலுள்ள லாலன்டுட்னோவைச் சேர்ந்த கானர் ரீட். இவர் சீனாவிலுள்ள வூஹானில் உள்ள பள்ளியொன்றில் பணியாற்றி வந்தார். 2019 நவம்பர் 25 அன்று, சளித் தொந்தரவால் பாதிக்கப்பட்டார். முதலில் அதனை அவர் சாதாரணமாக எடுத்துக்கொண்டார்.   ஏழு நாளில் சளி, மூக்கடைப்பு சரியாகிவிடும் என்று தன் தினசரி வேலைகளை செய்து வந்திருக்கிறார். ஆனால் , திடீரென ஒருநாள் காலையில் அவரால் படுக்கையிலிருந்து எழமுடியவில்லை. உடல்வலியோடு, இடைவிடாத இருமல் தொல்லை வேறு. பல்வேறு கைவைத்தியங்களை செய்தும் பயனில்லை.  “ நுரையீரல் பாதிக்கப்பட்டதால் எனக்கு மூச்சுவிடுதல் சிரமமாகி வந்தது. முழுக்க குரலை இழந்து விட்டிருந்தேன். பேச முயற்சித்தால் கர், புர் என்ற ஒலிதான் வந்தது” என்றார் கானர். உடல்நிலை தேறாததால் உடனே அங்குள்ள மருத்துவமனையில் சேர்ந்தார். அங்கு எடுக்கப்பட்ட பல்வேறு சோதனைகளின் அடிப்படையில் அவருக்கு நிம்மோனியா