வேகமாக பரவி வரும் மங்கிஃபாக்ஸ் தொற்றுநோய்!

 







சின்னம்மை ஏற்படுத்தும் வைரஸை ஒத்துள்ள வைரஸ்தான், மங்கிஃபாக்ஸை ஏற்படுத்துகிறது. இதன் பாதிப்பு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ள குரங்குகளில் தொடங்கியது. கடந்த 7 ஆம் தேதி இங்கிலாந்து அரசு மங்கிஃபாக்ஸ் நோய் பாதிப்பை முதன்முறையாக அறிவித்தது. அண்மையல் அங்கு நைஜீரியாவிற்கு சென்று வந்த பயணி, மங்கி ஃபாக்ஸ் தாக்குதலுக்கு ஆளாகியிருக்கிறார். அவர் இங்கிலாந்திற்கு வந்ததும் தோலில் அலர்ஜி போன்ற பாதிப்பு ஏற்பட மருத்துவமனையில் சேர்ந்துவிட்டார். இவரிடமிருந்து இன்னும் எத்தனை பேருக்கு பரவியுள்ளது என்ற தகவல் இதுவரை கிடைக்கவில்லை. இதுவரை இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸால் தாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3. 

2018ஆம் ஆண்டு இங்கிலாந்தில் மங்கிஃபாக்ஸ் தாக்குதல் அறியப்பட்டது. அப்போதும் நைஜீரியா சென்று வந்த பயணிகளால் தான் பாதிப்பு ஏற்பட்டது. 

மங்கி ஃபாக்ஸ் பாதிக்கப்பட்டவர்களின் இறப்பு சதவீதம் 1 முதல் 10 சதவீதம்தான். பெரும்பாலும் குழந்தைகள் பாதிக்கப்பட்டால் இறந்துவிடுவார்கள். அதுதான் இதில் ஆபத்தான பயப்படும் அம்சம். 

எப்படி பரவுகிறது?

நோய் பாதிக்கப்பட்ட விலங்கின் இறைச்சியை சரியாக சமைக்காமல் சாப்பிடுவதால். இன்னொன்று, நோய் பாதிக்கப்பட்ட விலங்கின் நீர்மங்கள் பிறரின் உடலில் பட்டால் நோய்த்தொற்று ஏற்படும். மங்கிஃபாக்ஸ் பாதிக்கப்பட்ட ஒருவரது பொருட்களை பயன்படுத்துவதும் ஆபத்தானது. அதுவும் நோய்த்தொற்றை அதிகரிக்கும். 

நியூ சயின்டிஸ்ட்

கருத்துகள்