ஏழை மாணவர்களுக்கு உதவும் முன்னாள் ராணுவ வீரர்

 







மதுரையைச் சேர்ந்தவர் ஜிஎம் ராமச்சந்திரன். இவர் தேனி பெரியகுளத்தில் தங்கி இளைஞர்களுக்கு உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ராமச்சந்திரன்,  ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பிறகு, வருவாய்த்துறையில் வேலை செய்துள்ளார். பின்னாளில்தான் பழனிக்கு இடம் மாறி வாழ்ந்துகொண்டிருந்தார். அப்போது காலையில் ஜாக்கிங் பயிற்சிக்கு சென்றார். சாலையில் இவரைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆன சிலர், ஃபிட்னெஸ் பற்றிய அறிவுரைகளைக் கேட்டிருக்கின்றனர். ஆகா, என  புளகாங்கிதம் அடைந்த ராமசந்திரன் உலகத்திற்கு ஏதாவது சொல்ல நினைத்தார். அதை ஆரோக்கியம் தொடர்பாக அமைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறார். 

ராமச்சந்திரனுக்கு விளையாட்டில்தான் தொடக்கம் முதலே ஆர்வம். இதனால் படிப்பில் சுமாராகவே இருந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இதை வைத்துத்தான் 1976ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 

ராமச்சந்திரன் தடகளப் பயிற்சி கொடுப்பவர்கள் எல்லோருமே வறுமையான பின்புலத்தைக் கொண்டவர்கள். இவர்களுக்கு ஓடுவதற்கும், கயிற்றைப் பிடித்து ஏறுவதற்கும், நீளம் தாண்டுவதற்கும் பயிற்சி அளிக்கிறார். இப்படி பயிற்சி கொடுத்து 15 பேரில் 12 பேர்களை காவல்துறை, பாராமிலிட்டரிக்கு அனுப்பி வைத்துள்ளார். 

தனது வீட்டுக்கு அருகிலேயே இருந்த இடத்தை அதன் உரிமையாளரிடம் பேசி பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்துள்ளார். மேற்படி செலவுகளுக்கு ராமச்சந்திரனின் குடும்பத்தினர் உதவியுள்ளனர். பெரும்பாலானோர் ஏழைகள் என்பதால், பயிற்சி செய்யும் முன்னரே அம்மா உணவகத்தில் கிடைக்கும் உணவைப் பெற்று வந்துவிடுவது வழக்கம். அவர்களின் நிதிநிலையைப் பார்த்துவிட்டு ராமச்சந்திரனே அவர்களுக்கு உடை, ஷூக்கள், ஊட்டச்சத்தான உணவுகளை வாங்கி கொடுத்திருக்கிறார். தனது இலவசப் பயிற்சிகளை தொடரும்போது நிறைய ஏழை மாணவர்கள் காவல்துறை, ராணுவத்தில் சேர அதிக வாய்ப்புள்ளது. 

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்




கருத்துகள்