உலகளவில் சிறந்த முக்கியமான நகைச்சுவை நடிகர்கள்!

 










மே மாதத்தின் முதல் ஞாயிறு, உலக சிரிப்பு தினம். இந்த தினத்தில் சமூக கருத்தோ, வார்த்தை நகைச்சுவையோ நம்மை சிரிக்க வைக்கும் கலைஞர்களில் சிலரை நினைத்துப் பார்க்கலாம். இங்கே சிலரைப் பார்ப்போம். 

சார்லி சாப்ளின்

ஆங்கில நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர். 75 ஆண்டு கால வாழ்க்கையில் சாப்ளின் சந்திக்காத சிக்கல்களே கிடையாது. மௌனமொழி படங்களில் ஆட்சி செலுத்தியவர். இவர் உருவாக்கிய வேலையில்லாத ட்ராம்ப் என்ற பாத்திரம் இன்றைக்கும் இவரது பெயரைச் சொல்லுவது. சிறுவயதில் அம்மாவை மனநல காப்பகத்தில் சேர்க்கும் நிலை. அப்பா, பிரிந்துசென்றுவிட குடும்பத்தைக் காப்பாற்ற வேலைக்கு சென்று வந்தார். படங்களின் வழியே பல்வேறு சமூக கருத்துகளை திறம்பட விவரித்த கலைஞன். 

ரோவன் அட்கின்சன்

தொண்ணூறுகளில் வந்த மிஸ்டர் பீன் டிவி தொடர் மறக்கமுடியாதது. அதுதான் ரோவனை உலகம் முழுக்க பிரபலப்படுத்தியது. பிறகு ஜானி இங்கிலீஷ், நெவர் சே நெவர் அகெய்ன், ஃபோர் வெட்டிங்க்ஸ் அண்ட் எ ஃபியூனரல், லவ் ஆக்சுவலி என சில படங்களில் நடித்தார். 

மிஸ்டர் பீன் தொடரை இணைந்து எழுதி, நடித்து உலகப் புகழ்பெற்றார். தொடரில் இவரது உடல்மொழி அபாரமான சிரிப்பை யாருக்கும் வரவைக்க கூடியது. எங்கு சென்றாலும் அங்குள்ள மனிதர்களை நக்கல் அடிக்கும் மனிதர் தான் மிஸ்டர் பீன். இதனால் அவருக்கு நேரும் விளைவுகள்தான் தொடர் அத்தியாயங்களின் சுவாரசியமே. இவரது உடல்மொழியை நகைச்சுவை நடிகர் பஸ்டர் கீட்டனை ஒத்தது என்கிறார்கள். இதை நீங்களே யூட்யூப் பார்த்து உறுதிபடுத்திக் கொள்ளுங்கள். 

லாரல் ஹார்டி

மௌனமொழி படங்களின்போது தங்களது நகைச்சுவை நடிப்பை தொடங்கினர்.  1920- 1950 காலகட்டத்தில் லாரல் ஹார்டியின் ராஜாங்கம்தான். பௌலர் வடிவ தொப்பி இரு நடிகர்களின் முக்கியமான அடையாளம்.  இருவரும் சேர்ந்து 107 படங்களில் நடித்திருக்கிறார்கள். பழிக்கப்பழி வாங்கும் செயல்தான் இவர்களது நகைச்சுவையில்  பிரதான அம்சம். 


பஸ்டர் கீட்டன்

மௌனமொழி பட காலத்தில் உடல் மொழியில் நகைச்சுவை செய்வதில் இவர் கில்லாடி.  தி கிரேட் ஸ்டோன் ஃபேஸ் என இவரது முக உணர்ச்சியைப் பற்றி கூறுவார்கள். தி கேமராமேன், தி நேவிகேட்டர், த்ரீ ஏஜஸ், ஒன் வீக், கோ வெஸ்ட், காலேஜ் ஆகிய படங்களை முக்கியமான படங்களாக கூறலாம். 

பினான்சியல் எக்ஸ்பிரஸ் 

ரியா மல்ஹோத்ரா





 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்