இந்திய சிறைகளுக்குள் நூல்களுக்கு தடை!

 
ஜிஎன் சாய்பாபா, மனித உரிமை செயல்பாட்டாளர்

கடந்த மாதம் எல்கர் பரிஷத் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கௌதம் நவ்லகா, பிஜி வுட்ஹவுஸ் என்ற எழுத்தாளரின் நூல்களை வாசிக்க கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது.  மும்பையிலுள்ள தலோஜா சிறை நிர்வாகம் இதற்கு அளித்த பதில், பாதுகாப்பு அச்சுறுத்தல் என்று. 

சிறைத்துறை அதிகாரிகள் நூல்களை, காகிதங்களை, நோட்டுகளை ஏன் அகராதிகளை கூட கைதிகளுக்கு கொடுக்காமல் இருப்பதும், பிறகு வழக்குரைஞர்கள் இதை சுட்டிக்காட்டி நீதிமன்றத்திற்கு செல்வதும் புதிதல்ல. இப்படி சமூக செயல்பாட்டாளர் ஜோதி ஜக்தாப் என்பவருக்கு நூல்கள் மறுக்கப்பட்ட, என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. அந்த உத்தரவு வந்து சேர்ந்தும் கூட இரண்டு மாதங்கள் ஆனபிறகே நூல்கள் ஜோதிக்கு வழங்கப்பட்டன என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அதிகாரிகளுக்கு நூல்கள் மேல் உள்ள வெறுப்பை  இதிலிருந்தே அறிந்துகொள்ளலாம். 

2020ஆம் ஆண்டு நாக்பூர் சிறையில் ஜிஎன் சாய்பாபா அடைக்கப்பட்டிருந்தார். இவர் தெலுங்கு மொழி நூல்களை வாசிக்க கேட்டிருந்தார். ஆனால் சிறைத்துறை அதிகாரிகள் அதை காதில் போட்டுக்கொள்ளவில்லை. சாய்பாபாவின் மனைவி, அவரது வழக்குரைஞர்கள் சிறை அதிகாரிகளிடம் பேசியபிறகும் கூட நிலை மாறவில்லை. பிறகு சாய்பாபா, பத்து நாட்கள் உண்ணாநோன்பு போராட்டம் நடத்தியிருக்கிறார். பிறகுதான் சிறை நிர்வாகம் மனமிரங்கி வந்திருக்கிறது. 


கோபத் காண்டி

கௌதம் நவ்லகா, மனித உரிமை செயல்பாட்டாளர்
அதுவும் எப்படி? காலனி கால ஆட்சியைப் போல, அவசரநிலையைப் போல நூல்களை நிதானமாக தணிக்கை செய்து சாய்பாபாவுக்கு மார்ச் 2021 அன்று வழங்கியிருக்கிறார்கள். அனைத்து நூல்களுக்கும் நூல்களைக் கொடுத்து இரண்டு மாதங்கள் தாமதத்தில் அவை சிறை கைதிகளுக்கு சென்று சேர்கின்றன. 

சிறை அதிகாரிகள், கைதிகளுக்கு நூல்களை வழங்குவது சிறப்பு சலுகையாக நினைக்கிறார்கள். சிறைக்குள் இருப்பவர்களை மாற்றுவது கல்வியும் வாசிப்பு பழக்கமும்தான். இதை அவர்கள் புரிந்துகொள்ள மறுத்து வருகிறார்கள். 2016ஆம் ஆண்டு சிறைத்துறைக்கான விதிகளில், கைதிகள் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை உருவாக்குவது பற்றி கூறப்பட்டிருக்கிறது. கைதிகளுக்கு இரண்டு நூல்களை வாசிக்க கொடுக்கலாம். இதனை எந்த தணிக்கையுமின்றி செய்யலாம் என மனித உரிமை செயல்பாட்டாளர் மாதுரிமா தனுகா கூறுகிறார். 

காந்தியின் சத்திய சோதனை, நேருவின் டிஸ்கவரி ஆஃப் இந்தியா,  ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிரீசன் டைரி - சிறைக்குறிப்புகள் ஆகிய நூல்கள் சிறையில் தான் எழுதப்பட்டன. 

கம்யூனிய செயல்பாட்டாளரான கோபத் காண்டி, பல பத்தாண்டுகளை டில்லி, ஹைதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் செலவிட்டார். இவர் நக்சல் என்பதால் திகார் சிறையில் கைதிகள் படிப்பதற்கான திட்டங்கள் இருந்தாலும் கூட சிறை சூப்பரிடெண்ட் அதற்கான அனுமதியைத் தரவில்லை. ஆறு மாத டிப்ளமோ படிப்பிற்கு விண்ணப்பித்த கோபட் காண்டே, அதற்கும் அனுமதிக்கப்படவில்லை. ஹைதராபாத், விசாகப்பட்டினத்தில் நூலக வாசிப்புக்கு அனுமதி கிடைத்திருக்கிறது.ஆனால் திகாரில் நூலக வாசிப்புக்கு இவரை அனுமதிக்கவே இல்லை. 

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் உமர் காலித்திற்கு இந்த வகையில் அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. சிறையில் இருந்தவருக்கு வழக்குரைஞர்கள் நீதிமன்றத்தில் மனுபோட நூலகத்தில் கட்டுரைகள், நாவல்களை படிக்க அனுமதி கிடைத்திருக்கிறது. அனுமதியைப் பயன்படுத்தி அவரும் 105 நூல்களைப் படித்து தள்ளியிருக்கிறார். மார்க்கரேட் அட்வுட், நக்குயிப் மக்ஃபோஸ் ஆகிய எழுத்தாளர்களின் படைப்புகளை படித்திருக்கிறார். நாம் வாழும் காலத்தின் அருமையை உணர்த்துபவை இத்தகையோரின் படைப்புகள் என்று தனது நண்பரிடம் காலித் கூறியிருக்கிறார். 

சஷாங் ரிடெம்ஷன் திரைப்படம் போல, நூலகத்தில் உள்ள நூல்களைப் படித்து சுரங்கம் தோண்டி கைதிகள் தப்பித்து விடுவார்கள் என்ற பயம் சிறை அதிகாரிகளுக்கு உள்ளது. இதனால் 2017ஆம் ஆண்டு, சிறை நிர்வாகம் கர்நாடக கட்டுமானத்துறை மாணவர் ஒருவருக்கு நூல்களை அணுக அனுமதி அளிக்கவில்லை. அவர் நீதிமன்றத்தில் மனு போட்டதற்கும், பாதுகாப்பு சார்ந்த சிக்கலை அதிகாரிகள் காரணமாக சொல்லியிருக்கிறார்கள். 

டைம்ஸ் ஆஃப் இந்தியா

ஹிமான்ஷி தவான்

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்