குஜராத்தில் சிறுபான்மையினரின் குரல்! - ஜிக்னேஷ் மேவானி
மத்திய அரசின் தேசதுரோக குற்றச்சாட்டுக்காக குஜராத்தின் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி அசாம் காவல்துறையால் கைது செய்யப்பட்டு அலைகழிக்கப்பட்டவதை அறிவீர்கள். ஜிக்னேஷ் பற்றி சில விஷயங்களைப் பார்ப்போம்.
அவனுக்கு புரட்சியில் ஆர்வமிருக்கிறது. எப்போதும் அதை துடிப்பாக பேசிக்கொண்டிருப்பான். நான் புரட்சி என்பது நடந்தால் 1947க்கு முன் நடந்திருக்கவேண்டும் என்று கூறுவேன். ஆனால் அவன் புரட்சி காரணமாக சிறைக்கு போவதற்கும் தயார் என்றுதான் கூறுவான் என்றார் ஜிக்னேஷ் மேவானியின் தந்தை நட்வார்பாய் பார்மர்.
பிரதமர் மோடி பற்றி ஒரே ஒரு ட்வீட் பதிவை எழுதியதற்காக எம்எல்ஏவான ஜிக்னேஷை காவல்துறை அலைக்கழித்தது. அதுவும் மாநிலம் விட்டு மாநிலம் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். இப்படி மாநிலம் விட்டு மாநிலம் வந்து கைது செய்வது கொலை, கொள்ளை குற்றங்கள் என்றே இதுவரை இருந்தது. பாஜக அரசின் கைங்கர்யத்தில் இது அரசியல்வாதிகளுக்கும் மாறியுள்ளது. ட்வீட் குற்றம் மட்டும் சிறையில் அடைக்க பத்தாதோ என நினைத்த காவல்துறை பெண் காவலரைத் தாக்கினார் என மற்றொரு குற்றச்சாட்டையும் பதிவு செய்தது. ஆனால் நீதிமன்றத்தில், வழக்குப்பதிவு பல் இளித்துவிட்டது. நீதிமன்றம் மட்டம் சட்டத்தை தவறாக பயன்படுத்தியுள்ளனர் என அசாம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அடுத்த தலைமுறை அரசியல்வாதிகளில் கன்னையா குமார், ஹர்திக் படேல், ஜிக்னேஷ் மேவானி ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்களை பாஜகவுக்கு எதிரான குழுவாக அரசியல் பார்வையாளர்கள் நினைக்கிறார்கள்.
ஹர்திக் படேல் இப்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியில் இணைந்தது தவறு என அதிலிருந்து விலகியிருக்கிறார். மேவானி, அக்கட்சியில் இணையக்கூடாது என முதலிலேயே நினைத்து செயல்பட்டு வந்தவர். புரட்சி என்ற வார்த்தையைக் கேட்டவுடன் அனைவரும் தெரிந்திருக்கும் இவர் கம்யூனிச கொள்கை கொண்டவர் என. அதேதான் காங்கிரஸ் கட்சியில் இணையாமலிருக்கவும் முக்கியமான காரணம்.
2
ஹர்திக் படேல், ஜிக்னேஷை காங்கிரஸ் கட்சியில் இணைத்து அவரை தலில் முகமாக காட்ட நினைத்திருக்கிறார். ஆனால் அதற்கு ஜிக்னேஷ் இசையவில்லை.
அகமதாபாத்தில் 1980ஆம் ஆண்டு ஜிக்னஷ் பார்மர் என்ற பெயரில் பிறந்தார். மேயூ என்ற கிராமத்திலிருந்து அகமதாபாத் நகருக்கு வந்தவர் ஜிக்னேஷின் தந்தை. ஊரை மறக்காமலிருக்க மேவானியை பின்னாளில் சேர்த்திருக்கிறார்.
பள்ளிப்படிப்பு முடிந்தவுடன் ஹெச் கே ஆர்ட்ஸ் கல்லூரியில் படிக்க சேர்ந்திருக்கிறார். ஜிக்னேஷை ஈர்த்தவர்களில் கல்வியாளர் செயல்பாட்டாளர் சஞ்சய் பாவே, கவிஞர், நாடக கலைஞரான சௌம்யா ஜோஷி ஆகியோர் முக்கியமானவர்கள்.
ஜர்னலிசம் படிப்பை டிப்ளமோவாக படித்து முடித்தார். பிறகு, மும்பை சென்றவர் அங்கு அபியான் என்ற குஜராத்தி இதழில் வேலை செய்தார். இரண்டு ஆண்டுகள் இப்படி வேலை செய்தவர், குஜராத் கவிஞரான மரீஸ் என்பவரது வாழ்க்கை, கவிதை மீது ஆர்வம் பிறக்க அதைப்பற்றி படிக்கத் தொடங்கினார். இவருக்கு காலிப் ஆஃப் குஜராத் என்ற பெயரும் உண்டு.
பிறகு, மும்பைக்கு திரும்பிய ஜிக்னேஷ் சங்கர்ஷ் மன்ச் என்ற குடிமக்களுக்கான உரிமைகளைக் கோரும் அமைப்பில் இணைந்தார். இதனை மறைந்த வழக்குரைஞர் முகுல் சின்கா உருவாக்கினார். இவர் குஜராத்தின் 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற கோத்ரா கலவர வழக்குகளை எடுத்து நீதிமன்றத்தில் வாதாடியவர். இந்த அமைப்பின் உந்துதலால் அகமதாபாத்தில் டிடி சட்டக்கல்லூரியில் படித்துவிட்டு குஜராத் உயர்நீதிமன்றத்தில் பயிற்சி செய்தார். அரசின் உபரி நிலங்களை ஏழை தலித் மக்களுக்கு வழங்க குஜராத்தின் விவசாய சட்டத்தை பயன்படுத்த முடியுமா என்று செயல்பட்டார். அரசியல் சட்டம் சார்ந்து கிரிஷ் படேல், காந்தியவாதியான சுனிபாய் வைத்யா ஆகியோருடனான உறவு ஜிக்னேஷை இடதுசாரி கொள்கையில் ஆழமாக போக வைத்தது.
3
ஜிக்னேஷ் அதிகாரமிக்க தலைவர்களுக்கு எதிராக நிற்பது அவரது அம்மா சந்திராபென்னுக்கே சற்று பீதியளித்திருக்கிறது. 2016ஆம் ஆண்டு மோடா சமாத்தியாலா என்ற கிராமத்தைச் சேர்ந்த தலித் குடும்பத்தை பசு பாதுகாப்பு என்ற பெயரில் குண்டர்கள் தாக்கியுள்ளனர். இதை எதிர்த்து ஜிக்னேஷ் பேரணி ஒன்றை நடத்தினார்.இ தில் இந்தியக்கொடி இடம்பெற்றது. மாட்டில் வாலை நீங்கள் பிடித்துக்கொள்ளுங்கள், எங்கள் நிலத்தை எங்களுக்கு கொடுங்கள் என்பதே போராட்ட கோஷம். அதுவரை சிறு செயல்பாடுகளுக்காக அலைந்து திரிந்த வழக்குரைஞரான ஜிக்னேஷை இந்திய அளவில் பிரபலப்படுத்தியது இந்த பேரணி சம்பவம்தான்.
முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியும் வழக்குரைஞருமான ராகுல் சர்மா, ஜிக்னேஷ் மேவானியுடன் பேரணியில் ஈடுபட்டவர். நாங்கள் பேரணிக்கு பெரிய தலைவர்கள் யாரையும் அழைக்கவில்லை. ஜிக்னேஷ் மக்களை ஈர்க்குமளவு பேசுகிறவராக இருந்தார். வெறும் பேச்சோடு செயல்படுகிற ஆர்வமும் அவருக்கு இருந்தது என்றார்.
உனா சம்பவத்திற்கு பிறகு ஜிக்னேஷ் மேவானி, ராஷ்டிரிய தலித் அதிகார் மன்ச் என்ற அமைப்பைத் தொடங்கினார். சிறுபான்மையினருக்கு எதிரான அநீதிகளை எதிர்த்து போராடும் அமைப்பு இது. பின்னாளில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த ஜிக்னேஷ், விரைவில் அக்கட்சியிலிருந்து விலகிக்கொண்டார். 2021ஆம் ஆண்டு செப்.28 அன்று பகத் சிங்கின் பிறந்த தின கொண்டாட்டதில் ஜிக்னேஷ் காங்கிரஸை ஆதரிப்பதாக சொன்னார்.
குஜராத்தில் பாஜகவை எதிர்த்து செயல்பட்டாலும் அந்த கட்சியினர் ஜிக்னேஷை பெரிதாக எதிர்க்கவில்லை. காரணம், அங்கு தலித்துகளுக்கு இருக்கும் வாக்கு சதவீதம் 7 தான். ஒருவகையில் அவர் மீது தேசதுரோக வழக்கு போட்டது, ஜிக்னேஷை மேலும் பலப்படுத்தியிருக்கிறது எனலாம். முஸ்லீம், தலித்துகளின் குரலாக ஒலிப்பது ஜிக்னேஷ் மேவானி என்ற அடையாளம் பலருக்கும் தெரிந்திருக்கிறது.
எம்எல்ஏவாகவும் சிறப்பாகவே வேலை செய்திருக்கிறார். வல்கம் தாலூக்காவில் உள்ள வக்டா கிராமத்தின் விவசாயிகள் இதைக் கூறுகின்றனர். முக்தேஷ்வரர் அணையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 19 கோடியை வாங்கிக்கொடுத்துள்ளதோடு, நர்மதா அணையிலிருந்து நீர் கிடைக்கவும் ஏற்பாடு செய்திருக்கிறார். இதனை காங்கிரஸ், பாஜக என வேறு எந்த கட்சியினரும் செய்யவில்லை.
4
ஜிக்னேஷின் குடும்பம் அடிக்கடி பீதியடைந்தாலும் அவரது செயல்பாட்டில் முழுக்க பங்கேற்று ஆதரவு தந்து வருகிறது. அவரது தந்தை பார்மர், 2017 வட்கம் தேர்தல் வேலைகள் தொடங்கி பேரணி வரை கூடவே வருகிறார். தற்போது ட்வீட் பாதிப்பு வரையிலான போராட்டங்களிலும் கூட பார்மர் பங்கேற்றுள்ளார்.
மத்திய அரசு ஜிக்னேஷின வீடு, காந்தி நகரிலுள்ள எம்எல்ஏ குவார்டர்ஸ் என பல்வேறு இடங்களை ரெய்டு நடத்தியுள்ளது. கணினிகளை பறிமுதல் செய்துள்ளனர். ஜிக்னேஷின் எம்எல்ஏ அறை என்பது பொதுவான இடம்தான். அங்கு பெற்றோர் சம்மதமின்றி திருமணம் செய்வோர், போட்டித்தேர்வுக்கு படிப்போர் என பல்வேறு தரப்பினர் இருக்கிறார்கள்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்
லீனா மிஸ்ரா பரிமள் தாபி
கருத்துகள்
கருத்துரையிடுக