தூய ஆற்றலை நோக்கி நகரும் இந்திய அரசு!
இந்தியாவின் மின்சாரத் தேவை, 2020ஆம் ஆண்டிலிருந்து இருமடங்காகி உள்ளதாக உலக ஆற்றல் முகமை (IEA) தகவல் தெரிவித்துள்ளது. இந்தியா, இன்றுவரையும் கூட மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் நிலக்கரியின் பங்களிப்பு 80 சதவீதமாக உள்ளது. பெருந்தொற்று காரணமாக முடங்கிய நிலக்கரி சுரங்கப்பணிகள் இயங்கத் தொடங்கிவிட்டன. தொழில்துறையினரும் முழுவீச்சில் இயங்கத் தொடங்கிவிட்டனர். இதனால் மின்னாற்றலின் தேவை அதிகரித்துள்ளது. 2040ஆம் ஆண்டில் இந்தியாவின் மின்சாரத் தேவை, 5 சதவீதமாக உயரும் என உலக ஆற்றல் முகமை மதிப்பிட்டுள்ளது.
பிற ஆற்றல் ஆதாரங்களை விட நிலக்கரி சுரங்கங்களை அமைக்க குறைந்த முதலீடு போதுமானது. தூய ஆற்றல் ஆதாரங்களான சோலார், நீர், அணுசக்தி ஆகியவை அதிக நிர்மாண முதலீடுகளைக் கொண்டவை. எனவே, மலிவான நிலக்கரித் தொழிலில் தொழிலதிபர்களின் முதலீடுகளும் அதிகம்.
மத்திய அரசு, 2021-22 காலகட்டத்தில் 3,793 கோடி ரூபாயை (மார்ச் 14 ) தூய ஆற்றல் ஆதாரங்களை மேம்படுத்த முதலீடு செய்துள்ளது. 2029 -30 காலகட்டத்தில் இந்தியாவின் தூய ஆற்றல் பங்களிப்பு 40 சதவீதமாக இருக்கும் என மத்திய மின்துறை ஆணையத்தின் அறிக்கை தகவல் தெரிவிக்கிறது. தூய ஆற்றல் ஆதாரங்களின் மூலம் கிடைத்த மின்சாரத்தின் பங்கு, தற்போது 21.5 சதவீதமாக (2020-2021) உள்ளது.
கரிம எரிபொருட்கள், தூய ஆற்றல் ஆதாரங்கள் என எவற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்தாலும் அதில், கையாள்வதிலும் பிற இடங்களுக்கு அனுப்புவதிலும் சிறிது சேதாரம் ஏற்படுகிறது. இவையன்றி சூரிய ஆற்றல், காற்று ஆற்றல்களை உத்தேசித்து அதற்கேற்ப சாதனங்களை நிறுவுவது தூய ஆற்றலுக்கு முக்கியம். எடு. கடற்புரங்களுக்கு அருகிலுள்ள குஜராத் (காற்று ஆற்றல்), வறண்ட நிலப்பரப்பு கொண்ட ராஜஸ்தான் (சூரிய ஆற்றல்). மத்திய அரசிலிருந்து, மாநில அரசுகளுக்கு மின்சாரத்தை கொண்டு செல்வதும், அதனை சேமிப்பதும் முக்கியமான சவால். இதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவது மத்திய அரசின் பணி. உற்பத்தி, தேவைக்கான இடைவெளியை அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள, தூய ஆற்றல் கட்டமைப்புகளில் அரசும், தனியாரும் பங்களிப்பது அவசியம்.
தகவல்
How quickly can india move india move away from coal
saptaparno ghosh
Hindu apr 24,2022
the national thermal plant dadri
கருத்துகள்
கருத்துரையிடுக