இடுகைகள்

வைக்கோல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயக் கழிவுகளில் வருமானம் கிடைக்கும்!

படம்
  விவசாயக் கழிவில் வருமானம்! டில்லியைச் சேர்ந்த டகாசர் நிறுவனத்தின் துணை நிறுவனர், வித்யுத் மோகன். இவர் விவசாயிகள் அறுவடைக்குப் பிறகு நிலத்தில் தேங்கும் கழிவுகளை எரிபொருளாக, உரமாக மாற்றலாம் என்கிறார். இதன் காரணமாக விவசாயிகள் விவசாயக் கழிவுகளை எரிக்க வேண்டியிருக்காது. மேலும் கழிவுகள் உரமானால் அதனை  எளிதாக நல்ல தொகைக்கு விற்கமுடியும். இந்த வகையில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கிறது. கழிவுகளை உரமாக்கும், எரிபொருளாக்கும் எந்திரங்களை மலிவான விலையில் தயாரித்து வழங்குவதுதான் மோகனின் பணி. கடந்த ஆண்டில் சிறந்த சூழல் கண்டுபிடிப்புக்காக எர்த்ஷாட் பரிசு பெற்ற ஐந்து கண்டுபிடிப்பாளர்களில் இவரும் ஒருவர். தனது இயந்திரத்தை ஆப்பிரிக்கா, இந்தியாவின் ஹரியாணா  ஆகிய இடங்களில் சோதனை செய்துள்ளார். நெதர்லாந்தில் டெல்ஃப்ட்  தொழில்நுட்ப கழகத்தில் முதுகலை ஆய்வு செய்தபோது, எந்திரத்தை உருவாக்கும் ஐடியா கிடைத்துள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துடன் இணைந்து இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரிக்க உள்ளார். ”வைக்கோல், உமி, தேங்காய் ஓடு ஆகியவற்றையும் எந்திரத்தின் வழியாக உரமாக மாற்றலாம் ”என தன்னம்பிக்கையோட

விவசாயிகளின் மீது காற்று மாசுக்கு குறை சொல்வது தவறு1 - வித்யுத் மோகன், கண்டுபிடிப்பாளர்

படம்
    வித்யுத் மோகன் - டகாசார் 1280 × 960   வித்யுத் மோகன் கண்டுபிடிப்பாளர் அண்மையில் விவசாய கழிவுப்பொருட்களை உரமாகவும் , எரிபொருளாகவும் மாற்றும் கருவியைக் கண்டுபிடித்திருக்கிறார் . இதற்காக இவருக்கு எர்த்ஷாட் பரிசு வழங்கப்பட்டுள்ளது . அவரின் கண்டுபிடிப்பு பற்றியும் சூழல் பற்றியும் பேசினோம் . நீங்கள் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்துவிட்டு சூழல் தொழில்நுட்பம் பற்றி படித்துள்ளீர்கள் காற்று மாசுபாடு பற்றிய கவனம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது ? நான் டெல்லியில்தான் பிறந்து வளர்ந்தேன் . அங்கு காற்று மாசுபாடு அதிகரித்தபோது , அதனால் நானும் எனது குடும்பமும் , நண்பர்களின் குடும்பமும் பாதிக்கப்பட்டோம் . 2015-16 காலகட்டத்தில் காற்று மாசுபாடு கடுமையாக இருந்தது . இதில் பட்டாசுகளின் பங்கும் இருந்தது . குறிப்பாகவ விவசாய கழிவுகளை அதிகம் எரிப்பதால் 30 சதவீதம் காற்று மாசுபாடு அதிகரிக்கிறது . எனவே நான் கல்லூரியில் இதுபற்றி படித்தேன் . அப்போதே விவசாய கழிவுகளிலிருந்து வரும் கார்பன் அளவை கட்டுப்படுத்த்தவேண்டும் . கிராம மக்களுக்காக வாய்ப்புகளை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணம் உருவாகியத

ரோலர்கோஸ்டரில் செல்லும்போது கீழே விழ வாய்ப்புள்ளதா?

படம்
      ரியலா ? ரீலா ?   1. ஒருவர் தும்மினால் அவருக்கு மற்றவர்கள் , காட் பிளெஸ் யூ சொல்லவேண்டும் . ரியல் : மதம் சார்ந்த இரண்டு கருத்துகள் இதன் பின்னே இருக்கின்றன . ரோமில் பிளேக் நோய் பரவிக்கொண்டிருந்த காலகட்டம் . போப் கிரிகோரி ( கிரிகோரி தி கிரேட் ), யாராவது தும்மினால் அவர் பிளேக் நோயால் பாதிக்கப்பட்டிருக்கக் கூடும் . எனவே அவர் அந்நோயிலிருந்து குணமாக காட் பிளெஸ் யூ சொல்லி பிரார்த்தியுங்கள் என்று மக்களைக் கேட்டுக்கொண்டார் . அடுத்து , தும்மலின்போது இறைவனின் ஆசி பெற்ற மனித ஆன்மா உடலிலிருந்து வெளியேறுகிறது . எனவே அதைத் தடுக்கவும் , வெளியிலுள்ள தீய சக்திகள் பிறரைத் தாக்காமல் இருக்கவும் மக்கள் காட் பிளெஸ் யூ சொல்லத் தொடங்கினர் என்கிறது வரலாறு . 2. வைக்கோலைப் பயன்படுத்தி வீடு கட்ட முடியும் ரியல் : மண் , சுண்ணாம்பு , கற்கள் கொண்டு நம் முன்னோர்கள் வீடு கட்டினர் . பின்னாளில் சிமெண்ட் , மணல் , செங்கற்கள் என புழக்கத்திற்கு வந்தன . இன்று உலகில் பசுமை வீடுகள் என்றழைக்கப்படும் கட்டட வகைகளில் வைக்கோல் கட்டடங்களும் ஒன்று . உலர்ந்த இறுக்கமாக பின்னப்பட்ட வைக்கோல்களைப் பயன்படுத்தி வீட

வைக்கோலில் இருந்து மின்சாரம்

படம்
வைக்கோலில் இருந்து மின்சாரம் சாத்தியமா? வைக்கோல்களை எதற்கு பயன்படுத்துவார்கள். மாடு திங்க அல்லது காட்டில் தீ வைத்துவிட்டு அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். ஆனால் அமிட்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரதீப் அகர்வால், அனு பிரசாந்த் ஆகியோர் கொண்ட குழு, பயோ எத்தனால் அல்லது மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறுகிறது. பனிரெண்டு மெகாவாட் மின்நிலையத்திற்கு வைக்கோல்களை மிகச்சிறந்த எரிபொருளாக பயன்படுத்தமுடியும் என்கிறது பிரதீப், பிரசாந்த் ஜோடி. நம் கண்முன் இதற்கு உதாரணமாக சீனா உள்ளது. அங்கு வைக்கோல்களை மின் நிலையத்திற்கு எரிபொருளாக பயன்படுத்துகிறார்கள். நன்றி: பிசிக்ஸ். ஆர்க்