இடுகைகள்

மொழிபெய்ரப்பு நேர்காணல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனதில் எழும் எண்ணங்களை கட்டுப்படுத்துவதுதான் கஷ்டம்! - ஈஷா சிங்

படம்
ஈஷா சிங் , துப்பாக்கி சுடும் வீராங்கனை ஆங்கிலத்தில் - சித்தார்த் சக்சேனா ஈஷா சிங் , பதிமூன்று வயதிலேயே தேசிய அளவிலான பத்து மீட்டர் ஏர் பிஸ்டல் பிரவில் பதக்கம் வென்றிருக்கிறார் . அவரது வெற்றி , போட்டி தயாரிப்பு , அவர் தவறவிட்ட விஷயங்கள் என பேசினோம் . துப்பாக்கி சுடும் வீரராக இல்லாமல் ஈஷா சிங்காக தினசரி நாள் எப்படி தொடங்கும் ? நான் சிறுவயதிலிருந்து துப்பாக்கிக்கான பயிற்சிகளை எடுத்து வருகிறேன் . இதனால் பள்ளிகளில் விளையாட்டு விழா , ஆண்டுவிழா , சுற்றுலா போன்ற விஷயங்களில் பங்கேற்க முடியாது . துப்பாக்கி சுடுதலில் வென்றது சந்தோஷம்தான் . ஆனால் என் பள்ளி தோழிகள் பள்ளிவிழாவில் தாம் பங்கு பெற்ற புகைப்படங்களை எனக்கு அனுப்பும்போது கஷ்டமாக இருக்கும் . ஏனெனில் நான் அந்த நேரத்தில் போட்டிகளில் பங்கேற்று இருப்பேன் . அல்லது பயிற்சிகளில் இருப்பேன் . போட்டிகளுக்கு சென்றுவிட்டு பள்ளிக்கு செல்லும்போது அனைவரின் கண்களும் என்னைக் கண்காணித்துக்கொண்டிருக்கும் . இது எனக்கு கடுமையான மன அழுத்தத்தை தருகிறது . ஆனால் என்ன , நான் என் வாழ்க்கையை தேர்ந்தெடுத்துவிட்டேன் . அதை நோக்கிச் செல்கிறே