ஆண்களே பிடிக்காத காதலியின் தாயாரின் மனதை மாற்றும் காதலனின் மெகா குடும்பம்! - ஆடவாலு மீக்கு ஜோகார்லு - சர்வானந்த், ராஷ்மிகா
ஆடவாலு மீக்கு ஜோகார்லு இயக்கம் கிஷோர் திருமலா இசை டிஎஸ்பி சர்வானந்த், ராஷ்மிகா மற்றும் உங்கள் அபிமான நட்சத்திரங்கள் கணவரால் ஏமாற்றப்பட்டு ஆண்களே ஏமாற்றுக்கார ர்கள் என தள்ளிப்போகும் காதலியின் தாயின் மனதை மாற்றும் காதலனின் கதை.. சிரஞ்சீவியின் குடும்பம் கூட்டு குடும்பமாக வாழ்கிறது. தாய் ஆதி லட்சுமியின் தங்கைகள் அனைவருமே ஒன்றாக கூடி வாழ்கிறார்கள். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே ஆண் வாரிசு என்றால் அது சிரஞ்சீவிதான். இதில் பத்மாவதி என்ற சித்திக்கு மட்டும் குழந்தைகள் கிடையாது. அவளுக்கு சிரஞ்சீவி தான் எல்லாமே. ஏனென்றால் அனைவருமே தங்கள் குடும்பத்தின் ஆண் வாரிசான சிரஞ்சீவி மேல் அன்பை பொழிகிறார்கள். இப்படி வளருபவனுக்கு திருமணம் என்று வரும்போது இந்த பெண்களே அதை பல்வேறு குறைகள் சொல்லி தட்டிக்கழிக்கிறார்கள். முதலில் பரவாயில்லை என நினைக்கும் சிரஞ்சீவி பிறகு வருத்தப்பட ஆரம்பிக்கிறான். பிறகு இவர்கள் பெண்களை வேண்டாம் என்று சொன்ன நிலை மாறி அவர்கள் சிரஞ்சீவியை மறுக்கும் நிலை உருவாகிறது. கூடுதலாக சிரஞ்சீவி சில பெண்களைச் சென்று பார்த்தால் அவர்களுக்கு நல்ல வரன்கள் குதிர்கிறது என பேச்சும் ஊருக்குள் க