இடுகைகள்

தீ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவு என்னவாகும்?

படம்
  இந்தியாவின் ஆப்கானிஸ்தான் முதலீடு என்னவாகும்? தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டனர். இங்கிலாந்து, ரஷ்யா வரிசையில் அமெரிக்காவும் அங்கிருந்து வெளியேறிவிட்டது. ஆனால் இருபது ஆண்டுகளாக அங்கு முதலீடு செய்த இந்தியா அப்படி வெளியே ற முடியுமா என்று தெரியவில்லை. அணைகள், சாலைகள், வணிக ஆதார அமைப்புகள் என 3 பில்லியன் டாலர்களை இந்தியா ஆப்கனில் முதலீடு செய்துள்ளது. தலிபான்கள் தலைதூக்கத் தொடங்கிவிட்டால் அரசு ரீதியான உறவும் இருக்காது. இருபது ஆண்டுகளாக பராமரித்து வளர்த்த நட்பு நாடு. சார்க் நாடுகளில் இந்தியா மீது பாசம் காட்டும் ஒரே நாடு ஆப்கன்தான்.  அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறி விட்டதால் அவர்களுக்கு இனி ஆப்கனோடு அரசியல் உறவுகள் இருக்காது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு ஆப்கனில் அமெரிக்க படைகளின்  உதவியுடன் இந்தியா மேம்பாட்டுத் திட்டங்களை செய்து வந்தது. சாலைகளை, அணைகள், மின்சாரம், மின்நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என பல்வேறு வசதிகளை இந்தியா உருவாக்கிக் கொடுத்தது. ஆப்கானிஸ்தானில் இந்தியா முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் கூட ஒப்பந்தம் வழியாக உருவானது. இந்த ஒ