இந்தியா - ஆப்கானிஸ்தான் உறவு என்னவாகும்?

 








இந்தியாவின் ஆப்கானிஸ்தான் முதலீடு என்னவாகும்?


தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி விட்டனர். இங்கிலாந்து, ரஷ்யா வரிசையில் அமெரிக்காவும் அங்கிருந்து வெளியேறிவிட்டது. ஆனால் இருபது ஆண்டுகளாக அங்கு முதலீடு செய்த இந்தியா அப்படி வெளியே ற முடியுமா என்று தெரியவில்லை. அணைகள், சாலைகள், வணிக ஆதார அமைப்புகள் என 3 பில்லியன் டாலர்களை இந்தியா ஆப்கனில் முதலீடு செய்துள்ளது. தலிபான்கள் தலைதூக்கத் தொடங்கிவிட்டால் அரசு ரீதியான உறவும் இருக்காது. இருபது ஆண்டுகளாக பராமரித்து வளர்த்த நட்பு நாடு. சார்க் நாடுகளில் இந்தியா மீது பாசம் காட்டும் ஒரே நாடு ஆப்கன்தான். 

அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறி விட்டதால் அவர்களுக்கு இனி ஆப்கனோடு அரசியல் உறவுகள் இருக்காது. அமெரிக்காவில் நடைபெற்ற தீவிரவாத தாக்குதல்களுக்குப் பிறகு ஆப்கனில் அமெரிக்க படைகளின்  உதவியுடன் இந்தியா மேம்பாட்டுத் திட்டங்களை செய்து வந்தது. சாலைகளை, அணைகள், மின்சாரம், மின்நிலையங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள் என பல்வேறு வசதிகளை இந்தியா உருவாக்கிக் கொடுத்தது. ஆப்கானிஸ்தானில் இந்தியா முதலீடு செய்வதற்கான வாய்ப்பும் கூட ஒப்பந்தம் வழியாக உருவானது. இந்த ஒப்பந்த மதிப்பு 1 பில்லியன் ஆகும். அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குதவற்கான ஒப்பந்தம் 2011ஆம் ஆண்டு உருவானது. 

இப்படி உருவான சில திட்டங்களைப் பார்ப்போம். 

சல்வா அணை

இதற்கு அருகில் தலிபான்கள் வலுவான நிலையில் உள்ளனர். இங்கு பாதுகாப்பு படையினர் பலரையும் தலிபான்கள் கொன்றுவிட்டனர். சல்வா அணையை ஆப்கன், இந்தியா நட்பு அணை என்று அழைத்து வந்தனர். எதிர்காலத்தில் இந்த அணை இருக்குமா செயல்படுமா என்று தெரியவில்லை. 

ஸராங் டெலராம் நெடுஞ்சாலை

இதில் இந்திய பொறியாளர்கள் 300 பேர் பணியாற்றியுள்ளனர். இவர்கள் ஆப்கனில் தங்கி 218 கி.மீ சாலையை உருவாக்கினர்.இதற்கு 150 மில்லியன் டாலர்கள் செலவானது. 11 இந்தியர்கள், 129 ஆப்கானியர்கள் இப்பணியால் உயிரிழந்தனர். பாகிஸ்தான், இந்தியாவின் சாலைப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் இந்தியா தனது பணிகளைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. இறந்தவர்களில் சிலர் தீவிரவாத தாக்குதலுக்கு பலியானார்கள். 


நாடாளுமன்றம்

2015இல் திறக்கப்பட்ட நாடாளுமன்றக் கட்டிடம், முழுக்க இந்தியாவின்  90 மில்லியன்  பணத்தில் உருவாக்கப்பட்டது. ஆப்கானிஸ்தானின் ஜனநாயகத்தை காக்கும் முயற்சிக்கவே என பிரதமர் மோடி சொன்னார். கட்டிடத்தின் ஒரு பகுதிக்கு முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

பள்ளிகள், கல்லூரிகளுக்கான நிதியுதவி மற்றும் மாணவர்களுக்கான ஊக்கத்தொகைகளையும் இந்திய அரசு வழங்கிவருகிறது. மேலும் அரசு தேர்வுகளுக்கான பல்வேறு பயிற்சிகளையும் மையங்கள் தொடங்கி அளித்து வருகிறது. 

400 பஸ்கள், 200 மினி பஸ்கள். ஆம்புலன்ஸ்கள், ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை இந்திய அரசு ஆப்கானிஸ்தானுக்கு வழங்கியுள்ளது. அரியானா எனும் ஆப்கன் நாட்டு விமான சேவைக்கு ஏர் இந்தியா மூன்று விமானங்களை அளித்துள்ளது. 

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு இடையிலான பரஸ்பர வியாபார ஒப்பந்த மதிப்பு 1.3 பில்லியன் ஆகும். ஆப்கன் இந்தியாவுக்கு புதிய மற்றும் உலர்ந்த பழங்களை ஏற்றுமதி செய்கிறது. இவையல்லாமல் மருத்துவம் சார்ந்த கருவிகள், கணினிகள், சிமெண்ட், சர்க்கரை, மருந்துகள்  ஆகியவற்றை பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. 

இந்தியன் எக்ஸ்பிரஸ் 

நிருபமா சுப்பிரமணியன்













கருத்துகள்

பிரபலமான இடுகைகள்