ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க நான் தயாராக இல்லை! - அதிதி பாலன்

 








அதிதிபாலன் 


திரைப்பட நடிகை


அருவி படத்திற்கு பிறகு இப்போதுதான் நீங்கள் கோல்ட்கேஸ் படத்தில் நடித்திருக்கிறீர்கள் இல்லையா?

அருவி படத்திற்கு பிறகு நான் சிறிய பாத்திரங்களில் நடிக்க மாட்டேன் என பலரும் நினைத்தார்கள். ஆனால் அது தவறு. நான் கதையை மட்டுமே முக்கியமாக கருதினேன். அதில் முக்கியத்துவத்தை எதிர்பார்த்தேன். கோல்ட் கேஸ் படம் அப்படிக் கிடைத்தது. இதில் பிரித்விராஜூக்கு தனி டிராக் உள்ளது. எனக்கு கதையும் பாத்திரமும் பிடித்திருந்ததால் இதில் நடித்தேன். 


நீங்கள் நடித்துள்ள பாத்திரம் அமானுஷ்யங்களை நம்பி பயப்படும்படியாக உள்ளது. இதனை எப்படி நடித்தீர்கள்?


எனக்கு அமானுஷ்யங்களின் மீது நம்பிக்கை கிடையாது. எனவே இந்த பாத்திரம் எனக்கு சவாலாக இருக்கும் என நினைத்தேன். அமானுஷ்யங்களை நம்பாத பெண் என்பதால் பயப்படும் காட்சிகள் எப்படி வரும் என்று கவலைப்பட்டேன். ஏனெனில் எனக்கு பயமே வரவில்லை. ஒருவகையில் நடிகையாக எனக்கு இது புதிய அனுபவமாக இருந்தது. 


உங்களிடம் வரும் கதைகளை நிராகரிக்கிறீர்கள் என்று கூறுகிறார்களே?


நான் ஒரே மாதிரியான பாத்திரங்களை செய்ய விரும்பவில்லை என்பதுதான் இதற்கு காரணம். இதுபோல வதந்திகளை பரப்புவது தொழில்வாழ்க்கைக்கு பிரச்னைதான். 




புகழ்பெற்ற படத்தில் நடித்துவிட்டு பிறகு படங்களில் நடிக்காமல் இருப்பது எப்படி இருந்தது?


எனக்கு நிறைய அழுத்தங்கள் இருந்தது உண்மைதான். எனக்கு திரைப்பட உலகம் எப்படி இயங்குகிறது என்பது தெரியாது. முதல்படம் எனக்கு அதிக புகழைக் கொடுத்துவிட்டதால் முதலில் தடுமாற்றமாக இருந்தது. அந்தபடம் கொடுத்த பொறுப்புணர்வில் அடுத்த படங்களை நடிக்கவேண்டும் என நினைத்தேன். 


பல்வேறு மொழி திரைப்படங்களில் நடிப்பது ஒரே மாதிரியான பாத்திரங்களை தவிர்ப்பதற்குத்தானா?

நிச்சயமாக நான் ஒரே மாதிரியான பாத்திரங்களில் நடிக்க விரும்பவிலை. அதற்காகத்தான் கோல்ட்கேஸ் படத்திற்கு பிறகு படவெட்டு என்ற மலையாளப் படத்தில் நடிக்கிறேன். அதற்குப் பிறகு தெலுங்கில் சாகுந்தலம் என்ற படம் இருக்கிறது. பேசும் வசன உச்சரிப்பில் சிறிய மாற்றம் கூட ஒருவரின் பாத்திரத்தை முக்கியமானதாக மாற்றும் என நினைக்கிறேன். 

உங்களுக்கு கிடைக்கும் பாத்திரங்கள் மிகவும் ஆழமாகவும் சிக்கலானதாகவும் இருக்கிறதே?


உண்மையில் நான் நகைச்சுவையான ஆள்தான். ஜாலியாக  கிண்டலடித்து சிரிப்பவள். நகைச்சுவையான பாத்திரங்கள் இருந்தால் தாராளமாக இயக்குநர்கள் என்னைத் தேடி வரலாம். அப்படத்தில் நடிக்க தயாராக இருக்கிறேன். 

avinash ramachandran

TNIE

photos behindwoods

கருத்துகள்