வணிக நிறுவனங்களுக்கு சமூக பொறுப்புணர்வு உண்டு என்பதை நிரூபித்தவர்! - தி பாடி ஷாப் - அனிதா ரோடிக்

 

 

 

 

 

Anita Roddick, dona da rede The Body Shop, foi roubada ...

 

 

 

சூப்பர் பிஸினஸ்மேன்


அனிதா ரோடிக்

 

 

#40Forward, Day 15: Dame Anita Roddick | Lemonade Day

அனிதா, தனது வணிக வெற்றியை விட அதனைப் பெற எந்த வழியில் சென்றார், எப்படிப்பட்ட விளைவுகளை ஏற்படுத்தினார் என்பதற்காக அவரை பலரும் வியந்து போற்றுகின்றனர். 2007ஆம் ஆண்டு அனிதா காலமானார். வணிகம் சார்ந்து சூழலை பாதிக்காமல் வணிகம் செய்வது பேச்சாக இருந்த காலகட்டத்தில் அதனை செயலாக மாற்றியவர் அனிதா.


இவர் வெஸ்ட் சசெக்ஸ் பகுதியில 1942ஆம் ஆண்டு அக்டோபர் 23 அன்று பிறந்தார். இத்தாலியைச் சேர்ந்த அகதிகளாக இவரது பெற்றோர் இங்கிலாந்தில் குடியேறியவர்கள். இவர்கள் இங்கிலாந்தில் கஃபே நடத்திக் கொண்டிருந்தார்கள். அனிதாவின் அம்மா, அவரது அப்பாவின் தம்பி ஒருவரையே பின்னாளில் திருமணம் செய்துகொண்டார். ஹென்றி என்ற இவர், சில ஆண்டுகளிலேயே காலமானார். கல்வி கற்று இஸ்ரேலில் பணிபுரிந்தார் அனிதா. பிறகு, இவரது அம்மா மூலம் கோடன் ரோடிக் என்பவர் அறிமுகமானார். அனிதாவுக்கும் ரோடிக்கும் பழக்க வழக்கங்கள் ஒன்றாக இருக்க சில நாட்களிலேயே அவரது வீட்டில் தங்கி ஒன்றாக வாழத் தொடங்கினார் இவர்களது வாழ்க்கை அதன் பிறகு நாற்பது ஆண்டுகள் ஒன்றாகவே கழிந்த்து. அதாவது, அனிதா ரோடிக் இறக்கும்வரை.

அனிதாவின் 26 வயதில், இத்தம்பதிகளுக்கு ஜஸ்டின் என்ற பெண்குழந்தை பிறந்தது. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சாம் என்ற ஆண் குழந்தை பிறந்தது. இவன்தான், பின்னாளில் சூழலுக்கு உகந்த மரத்தில் செய்யப்பட்ட செக்ஸ் பொம்மைகளை விற்கும் கடைகளை நடத்தத் தொடங்கினான். அனிதாவும் அவரது கணவரும் 1970இல் முறையாக திருமணம் செய்துகொண்டனர். பிறகுதான் பாடி ஷாப் என்ற கடையைத் தொடங்கினார். 1984ஆ்ம் ஆண்டு வாக்கில் அனிதாவின் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படத் தொடங்கின. இதனால், இ்ங்கிலாந்தில் பணக்காரப் பெண்மணியாக உயரத் தொடங்கினார்.. தொண்ணூறுகளில் இவரது நிறுவனத்தின் மதிப்பு 800 பவுண்டுகளாக உயர்ந்திருந்தது.


தொழிலை சமூக அக்கறை கொண்டதாக மாற்றிக்கொண்டதாக மாற்றிக்கொண்டார் அனிதா. திமிங்கலங்களைக் காப்பாற்றுவது, மழைக்காடுகளின் அழிவு, விலங்குகளை சோதனைகளுக்குப் பயன்படுத்துவதை தடுப்பது, மனித உரிமைகளைப் பாதுகாப்பது என தனது செயல்பாடுகளை மாற்றிக்கொண்டது அனைவரையும் கவர்ந்தது. கோகோ தயாரிப்பவர்களை நேரடியாக அனிதாவின் நிறுவனம் சந்தித்து அவர்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. . தொண்ணூறுகளில் பாடி ஷாப் பவுண்டேஷன் தொடங்கப்பட்டது.


வீடற்றவர்களுக்கான குரலாகவும், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிராகவும் திட்டங்களை உருவாக்கி செயல்படத் தொடங்கினார். இன்று பன்னாட்டு நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு தொடர்பான விஷய்ங்களை அனிதாதான் உருவாக்கினார். இவர் அன்றே, தனது நிறுவனங்கள் மூலமாக பல்வேறு சமூகத்தின் அக்கறை சார்ந்த விஷயங்களை உருவாக்கினார். கல்லீரல் அழற்சி தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டு, மூளையில் பாதிப்பு ஏற்பட்டு இறந்துபோனார். அனிதா தொடங்கிவைத்த பெருநிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு என்பதை பல்வேறு நிறுவனங்கள் இன்றும் தொடர்ந்து வருகின்றன. அந்தவகையில் அனிதா ரோடிக் முக்கியமான தொழிலதிபர் ஆவார்.

#MondayMotivation with Anita Roddick - Innevation, powered ...

28 பிசிஸ்ஸ் திங்கர்ஸ் ஹூ சேஞ்ச்டு தி வேர்ல்ட் தி மேனேஜ்மென்ட் குருஸ் அண்ட் மேவரிக் ஹூ சேஞ்ச்டு தி வே வி சேஞ்ச்ட் தி வே வி திங்க் அபவு்ட் பிசினஸ் நூலிலிருந்து…


கா.சி.வின்சென்ட்




கருத்துகள்