அலாஸ்காவில் தனியே வாழ்ந்த மனிதர்!
இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, டிக் புரோனெக்கே அலாஸ்காவுக்கு வந்தார். அங்கு தனது கையால் தானே கேபின் போன்ற அளவில் வீட்டைக் கட்டினார். அதோடு இல்லாமல் அங்கேயே முப்பது ஆண்டுகளாக தங்கிவிட்டார். 50 வயதில் பார்த்துக்கொண்டிருந்த மெக்கானிக் வேலையைக் கைவிட்டார்.
அலாஸ்காவின் இயற்கை அழகைப் பார்த்துவிட்டு இங்கேயே வந்து தங்கிவிட்டார். 1916ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஐயோவாவில் பிறந்தவரின் தந்தை தச்சுவேலைகளை செய்பவர், அம்மா தோட்ட வேலைகளில் நிபுணர். இந்த இரண்டு அம்சங்களுமே அலாஸ்காவில் வீட்டைக் கட்டுவதற்கு டிம்முக்கு உதவியது. டிம்மின் பெற்றோருக்கு பிறந்த நான்கு பிள்ளைகளில் இவர் இரண்டாவது பிள்ளை.
பள்ளிக்கு பெற்றோர் ஆசையாக அனுப்பினாலும் இரண்டே ஆண்டுகளில் பள்ளி வேண்டாம் என்று திரும்பி வந்தவர், தங்களது பண்ணையில் வேலை செய்யத் தொடங்கினார். வேலை நேரம் போக ஹார்ட்லி டேவிட்சன் பைக்கை எடுத்துக்கொண்டு நகரத்திற்கு சென்று சுற்றிக்கொண்டிருப்பார். பியர்ல் துறைமுகம் தாக்குதலால் அமெரிக்க கடற்படையில் சேர்ந்து ஜப்பானுக்கு எதிராக போரிட்டார். பிறகு சான் பிரான்சிஸ்கோ வந்தவருக்கு உடல்நலம் கெட்டது. மருத்துவமனை சிகிச்சை முடித்தபின் தனது வாழ்கையை மாற்றிக்கொள்ள முடிவு செய்தார்.
அலாஸ்காவை அதற்காக அவர் தேர்ந்தெடுத்தார். அழகு என்றால் ஆபத்து இல்லாமலா? பொருட்களை வாங்குவதற்கு அதிக தூரம் செல்லவேண்டும். உறைந்துள்ள ஆறுகளில் விழுந்தால் நொடியில் உறைந்துபோய் மரணம் ஏற்படும். அலோன் இன் தி வைல்டர்னெஸ் என்ற ஆவணப்படம் டிம்மினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. டிம் முப்பது ஆண்டுகளாக வாழ்ந்த வாழ்க்கையை அவரே நாட்குறிப்பு, கேமரா என பதிவு செய்து வைத்திருந்தார்.
இப்போது டிம் இறந்துவிட்டாலும் அவரது நண்பர்கள் அவரது வீட்டை நினைவு இல்லமாக்கி பராமரித்து வருகின்றனர். 2004ஆம் ஆண்டு வெளியான ஆவணப்படத்திற்கு பிறகு ஓராண்டு கழித்து டிம் இறந்துபோனார். தனது 81 வயதில் கலிபோர்னியாவில் சகோதரர் வீட்டில் வாழ்ந்துதான் இறந்துபோனார். அலாஸ்காவில் டிம்முக்கு சொந்தமில்லாத இடத்தில் கட்டிய வீடு இன்று அங்கு பார்வையிட வரும் மக்களுக்கு உதவியாக இருக்கிறது.
கோடை மழை பெய்தபிறகு ப்ளூபெர்ரியை பறித்து சாப்பிட்டிருக்கிறீர்களா? விறகுகளை எரித்து நடுங்கும் வெளிப்புற குளிரில் உங்களை கதகதப்பு செய்துகொண்டிருக்கிறீர்களா? என தனது நாட்குறிப்புகளில் எழுதியிருக்கிறார் டிம். அனுபவங்கள் புதுமைதான் அல்லவா?
மூலம்
https://allthatsinteresting.com/dick-proenneke?utm_source=newsletter&utm_medium=email&utm_campaign=atinewsletter
கருத்துகள்
கருத்துரையிடுக