மருத்துவச் சேவையில் சாதனை படைத்த பெண்கள்!
மேரி க்யூரி
கதிர்வீச்சு அறிவியலாளர்
அறிவியல் மற்றும் மருத்துவத்திற்காக கதிர்வீச்சு முறை பெரிதும் பயன்படுகிறது. அந்த ஆய்வில் மகத்தான சாதனைகளை செய்தவர் மேரி க்யூரி.
இவர் செய்த ஆய்வுகளை குறித்து வைத்த காகிதங்கள் கூட கதிர்வீச்சு தன்மை கொண்டவை்யாக இருந்தன. இவற்றை பாதுகாப்பான இடத்தில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
அணுக்கள் அதிக சக்தி வாய்ந்த துகள்களை உமிழுகின்றன என்பதை க்யூரி கண்டுபிடித்தார். அதில் ஒன்று போலோனியம், மற்றது ரேடியம். போலாந்தில்தான் க்யூரி பிறந்தார். ரேடியத்திற்கு ரே என்ற வார்த்தைதான் காரணம். இவரது கண்டுபிடிப்பு புற்றுநோய் மருத்துவத்தில் பயன்படுகிறது.
1867இல் போலந்தில் பிறந்தார். பெற்றோர்கள் ஆசிரியர்கள். அவர்களின் தூண்டுதலால்தான் படிப்பில் ஆர்வம் காட்டினார். இயற்பியல் மற்றும கணிதம் படிக்க பிரான்சின் பாரிசுக்கு சென்றார். அங்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு இயற்பியலாளர் பியரி க்யூரியை மணந்தார்.
1903ஆம் ஆண்டு மேரியும் பியரியும் இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பியரி விபத்து ஒன்றில் இறந்துபோனார். மேரி, சோர்பன் பல்கலையில் முதல் பெண் பேராசிரியராக பணியாற்றினார். 1911இல் இவரது ஆராய்ச்சியால் வேதியியல் துறையில் நோபல் பரிசு கிடைத்தது.
நோபல் பரிசு வென்ற முதல் பெண், வெவ்வேறு அறிவியல் துறையில் பரிசு வென்ற முதல் பெண் என்ற சாதனையும் இவருக்கு உண்டு.
முதல் உலகப்போரில் காயமான வீர ர்களை சோதிக்க மேரி எக்ஸ்ரே மெஷினை உருவாக்கி பயன்படுத்தினார். வீர ர்களை பிழைக்க வைத்தாலும் கதிர்வீச்சு காரணமாக 1934இல் மேரி இறந்துபோனார். 1948ஆம் ஆண்டில் மேரி க்யூரி அமைப்பு குணப்படுத்த முடியாத நோய்களைக் கொண்ட நோயாளிகளை பராமரிக்கும் பணியைத் தொடங்கியது.
ஆண்கள் மட்டுமே கோலோச்சிய துறையில் தனியாக நின்று கதிர்வீச்சு சோதனைகளை நடத்தியதோடு, அதற்கு விலையாக தனது உயிரையே கொடுத்த தியாகம் மேரியையே சாரும். இவரது கண்டுபிடிப்பு மருத்துவத்தில் முக்கியமானது.
ஐரின் ஜூவோட் க்யூரி என்பவர் மேரியின் மகள். இவர் 1935ஆம் ஆண்டு வேதியியல் துறையில் நோபல் பரிசு வென்றார்.
சுகாதாரத்துறையில் பெண்களின் பங்களிப்பு முக்கியமானது. அவர்கள் செவிலியராக பணியாற்ற தடை இருந்தபோதும் கூட அத்துறையில் மருத்துவர்களாகவும் செவிலியர்களாகவும் சிறப்பாக பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் முக்கியமானவர்களைப் பார்ப்போம்.
மேரி சீகோல்
ஜமைக்கா ஸ்காட்லாந்து இனத்தை தனது மரபணுவில் கொண்ட செவிலியர். இதன் காரணமாக கிரிமிய போரில் 1853இல் சிகிச்சை செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் அவராகவே கிரிமியாவுக்கு சென்று பிரிட்டிஷ் ஹோட்டல் என்ற பெயரில் மரம், இரும்பு கண்ணாடிகளைக் கொண்டு அறை ஒன்றை கட்டினார். அதில் காயமுற்ற வீர ர்களுக்கு சிகிச்சை செய்தார்.
போருக்குப் பிறகு இங்கிலாந்து திரும்பியவரிடம் சல்லிக்காசு பையில் இல்லை. எனவே இவருக்கு நிதியளித்து உதவ விழா ஒன்றை நடத்தினர்.
புளோரன்ஸ் நைட்டிங்கேல்
இவரும் கிரிமியா போரில் பங்கேற்று வீர ர்களுக்கு உதவிகளை செய்தவர்தான். இங்கிலாந்து நாட்டைச் சே்ரந்த சமூக செயல்பாட்டாளர். இவரது பணிகளால்தான் நோயாளிகளை கவனிக்கும் அறைகளின் தூய்மை மேம்பட்டது. லண்டனில் செவிலியர்ளளுக்கான கல்லூரியை உருவாக்கியது இவரது முக்கியமான சாதனை. இவர் புள்ளியியல் மற்றும் கிராப்களை வரைந்து சுகாதாரம், உடல்நலம் சார்ந்த பிரச்னைகளை அணுகினார்.
எடித் காவெல்
1914இல் முதல் உலகப்போர் நடந்தபோது பெல்ஜியத்தில் தனது செவிலியப்பணிகளை எடித் தொடங்கியிருந்தார். இவர் எதிரிகள், தாய்நாட்டு வீர ர்கள் என்று பார்க்காமல் காயம்பட்ட அனைவருக்குமே உதவிகளை செய்தார். வெளிநாட்டு வீர ர்கள் ஜெர்மனி ஆக்கிரமித்த பெல்ஜியத்திலிருந்து தப்பிக்க உதவினார். இதனால் இவரை சுட்டுக்கொன்றனர். இவரது பணிகளைப் பாராட்டி வெஸ்ட்மினிஸ்டர் அபேயில் அரசு இறுதிச்சடங்கை பிரமாண்டமாக நடத்தியது. தேசிய நாயகராக கொண்டாடப்பட்ட பெருமையும் பெற்றார்.
ஆக்னஸ் ஹன்ட்
இடுப்பு பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவுவதை ஆக்னஸ் கைவிடவில்லை. இங்கிலாந்தின் ஸ்ரூஸ்பரி எனும் இடத்தில் குழந்தைகளுக்கான இல்லத்தை உருவாக்கினார். அறுவை சிகிச்சை நிபுணர் ராபர்ட் ஜோன்ஸ் என்பவருடன் இணைந்து மருத்துவமனை ஒன்றைத் தொடங்கினார். எலும்பு, இணைப்பு தொடர்பான குறைபாடுகளை இந்த மருத்துவமனை கவனித்தது.
அவெரில் மேன்ஸ்பீல்ட்
வாதம் வருவதை தடுக்கும் அறுவை சிகிச்சை செய்வதில் வல்லுநராக இருந்தார். 1993இல் இங்கிலாந்தில் அறுவை சிகிச்சை பேராசிரியராக சாதனை படைத்தார். ஆராய்ச்சி, கல்வி கற்றுக்கொடுப்பது என இரண்டையும் இவர் செய்தார். 2009 முத்ல 2010 வரையில் இங்கிலாந்து மருத்துவ சங்கத்தில் தலைவராக இருந்தார்.
கருத்துகள்
கருத்துரையிடுக