டிராகன்களை மீட்டு தீயசக்தியை வேரறுக்க நெடும்பயணம்! - ராயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்

 









ராயா அண்ட் தி லாஸ்ட் டிராகன்

டிஸ்னி அனிமேஷன் 


ராயா  ஒரு குகைக்குள் தனது செல்ல வண்டுடன் சென்று கிரிஸ்டல் கல் ஒன்றை எடுக்க முயல்கிறாள். அதனை வாளேந்திய பாதுகாவலர்  வாளை உறையிலீருந்து உருவாமலேயே எளிதாக தடுக்கிறார். இதுதான் ராயாவின் கதை. ராயா எதிர்த்து சண்டை போட்டது அவளது அப்பாவிடம்தான். 

இவர்கள் இருவரும்தான் டிராகன் கிரிஸ்டலை பாதுகாக்கிறார்கள். இந்த கிரிஸ்டல் உடையாமல் பாதுகாக்கப்படும் வரை மட்டுமே ராயாவின் பேங் உள்பட ஐந்து நாடுகளும் நலமுடன் இருக்கும். இல்லையென்றால் தீய சக்திகள் வந்து அனைத்து மக்களையும் உயிருடன் சிலைகளாக்கிவிட்டு போய்விடும். 

இயற்கை எப்போதும்போலத்தான் இருக்கிறது. ஆனால் மனிதர்களின் மனம் அப்படியில்லையே, அப்படித்தான் ராயாவின் அப்பாவை அவர்களது நாட்டை சுற்றிலும் வாழும் பல்வேறு குறுநாட்டு அரசர்கள் எதிர்க்கிறார்கள். எல்லாம் டிராகன் கிரிஸ்டலை தங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளத்தான்.  அவர்க்ள அனைவரும் ஒன்றாக ராயாவின் நாட்டிற்கு விருந்து ஒன்றுக்கு வரும்போது ராயாவின் தோழிபோல நடித்து அவளை ஏமாற்றும் சிறுபெண் செய்த சதியால்  கிரிஸ்டல் உடைபட்டு அனைத்து குறுநாடுகளின் அரசர்களும் அதனைக் கைப்பற்றுகிறார்கள். இதன் விளைவாக ராயாவின் நாடு அழிகிறது. தீயசக்தியின் தாக்குதலில் ராயாவின் அப்பா உட்பட அனைவருமே கற்சிலையாக மாறுகிறார்கள். ராயா மட்டுமே ஆற்றில் தள்ளப்பட்டு உயிர்பிழைக்கிறாள். 

அவளுக்கு அவளது அப்பாவை மீட்க ஒரே வாய்ப்பு, கிரிஸ்டல் கற்களை ஒன்றாக சேர்ப்பதுதான். அதற்கு முயல்கிறாள். அப்போது அவளது நாட்டிற்கு சென்று நீரை ஏந்தி டிராகன் கடவுளை வணங்குகிறாள். அப்போது ஆச்சரியமாக நீர் டிராகன் அங்கு உருவாகிறது. இருவரும் சேர்ந்து பல்வேறு நாடுகளுக்கு சென்று எப்படி டிராகன் கற்களை மீட்கிறார்கள் என்பதுதான்  மீதிக்கதை. 

டிஸ்னி இப்போது பெரும்பாலும் தனது கவனத்தை ஆசியா பக்கம் திருப்பி ஏராளமான புராண கதைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. படம் முழுக்க பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணம் அழகாக உள்ளது. நீர் டிராகனின் உடல், கண்கள், தீயசக்தியின் கருப்பும், கத்தரிப்பூவும் சேர்ந்த நிறம், நாடுகளின் வினோதமான இயற்கை அமைப்புகள் என அனிமேஷன் படத்தை ஒரே மூச்சில் பார்க்க வைக்கின்றன. 

மனிதர்களின் பேராசை எப்படி இயற்கையை அழிக்கிறது  என்பதைத்தான் அடிப்படையாக கூறியிருக்கிறார்கள். நீர் டிராகன் தனது கண்முன்னே கொல்லப்படுவதும், அதனால் கோபமுற்று ராயா சண்டையிடும் காட்சியும், அந்த நேரத்தில் தீய சக்தி மக்களை தாக்குவதும் பிரமாதமாக  எடுக்கப்பட்டுள்ளது. இறுதியில் ராயா, கல்லை த ரமாட்டேன் என அடம்பிடிக்கும் துரோக தோழியை நம்பி கல்லைக் கொடுத்துவிட்டு கற்சிலையாக மாற்றிக்கொள்வது நெகிழ்ச்சியான காட்சியாக  உள்ளது. 

அனைத்து விலங்குகளுக்கும் உலகில் வாழ உரிமையுண்டு என்பதை படத்தின் செய்தியாக நாம் கொள்ளலாம். படத்தை நேர்த்தியாக எடுத்திருக்கிறார்கள். 

உலகம் அனைவருக்குமானது

கோமாளிமேடை டீம் 


Directed by 

Don Hall...(directed by)
Carlos López Estrada...(directed by)
Paul Briggs...(co-director) (co-directed by)
John Ripa...(co-director) (co-directed by)

Writing Credits  

Qui Nguyen...(screenplay by) &
Adele Lim...(screenplay by)
 
Paul Briggs...(story by) &
Don Hall...(story by) &
Adele Lim...(story by) &
Carlos López Estrada...(story by) &
Kiel Murray...(story by) &
Qui Nguyen...(story by) &
John Ripa...(story by) &
Dean Wellins...(story by)









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்