உத்தரப்பிரதேசத்தில் மக்கள்தொகை கொள்கை 2021-2030 ஏற்படுத்தும் விளைவுகள்!




UP Population Control Bill 2021: यूपी में जनसंख्या नियंत्रण का ड्राफ्ट तैयार



 உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரில் பழைய ஜெயில் ரோட்டில் சட்ட கமிஷன் அலுவலகம் அமைந்துள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.என்.மிட்டல் தலைமையிலான மூன்று பேர் மக்கள்தொகை கட்டுப்பாட்டு கொள்கையை உருவாக்கியுள்ளனர். இதனை இணையத்தில் மாநில அரசு வெளியிட்டுள்ளது. 

மாநில அரசின் புதிய மக்கள் தொகை கட்டுப்பாட்டு சட்டப்படி, அரசின் கொள்கையை மீறுபவர்களுக்கு அரசின் எந்த சலுகைகளும் கிடைக்காது. உள்ளூர் தேர்தலிலும் அவர்கள் நிற்க முடியாது. அரசு வேலைக்குக் கூட மூன்று குழந்தைகள் கொண்டவர்களை தடுக்கிறது புதிய சட்டம். 

மாற்றுத்திறனாளிகளை வைத்துள்ள பெற்றோர், ட்வின்ஸ்களுக்கு புதிய சட்டத்தில் சலுகைகள் உண்டு. 

தனியார் நிறுவன ஊழியர்களுக்கு அரசின் கொள்கைகளை கடைப்பிடித்தால் தண்ணீர், மின்சாரம் ஆகியவற்றில் கட்டண சலுகை உண்டு. பி.எப் விஷயத்திலும் கூட உபகாரம் உண்டு. 

அரசு ஊழியர்கள் அரசின் குழந்தை பிறப்பு கட்டுப்பாட்டை கடைபிடிக்காதபோது பதவி உயர்வு, பிஎஃப் ஆகிய விஷயங்கள் கிடைக்காது. அரசின் வீடுகள் ஒதுக்குவதிலும் சிக்கல் ஏற்படும். 

குடும்ப அட்டையில் நான்கு பேருக்கு மட்டுமே இடமுண்டு. 


மக்கள் தொகை கட்டுப்பாடு என யோகி கூறியபோதே உ.பியில் வாழும் முஸ்லீம்கள் பயப்படத் தொடங்கிவிட்டனர். நம்மை கட்டம் கட்டத் தொடங்கிவிட்டனர் என அவர்களுக்கு தெளிவாக புரிந்துவிட்டது. அடுத்த ஆண்டில் நடக்கவிருக்கும் தேர்தலுக்கான சட்டம் இது என அந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் பேசத் தொடங்கியுள்ளனர். 

அசாம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் கூட மக்கள்தொகையை கட்டுப்படுத்த மசோதாக்களை தயாரித்து வருகின்றனர். மக்கள் தொகை கட்டுப்பாடு இல்லாதபோது, வேலைவாய்ப்பு,வறுமை ஆகிய பிரச்னைகள் அதிகரிக்கும் என  கமிஷன் செயலாளர் சப்னா திரிபாதி கூறியுள்ளார். 

தந்தைக்கு பல்வேறு மணங்கள் நடந்தாலும் இரண்டு பிள்ளைகள் மட்டும  இருக்கவேண்டும். பெண்ணுக்கும் இதே விதிதான. ஏறத்தாழ இந்த விதியைப் படித்தாலே இது யாரைக் குறிவைக்கிறது என்பதை அறிந்தகொள்ள முடியும்.  “இந்த சட்டம் தனி மனித உரிமைகளை பறிக்கும் விதமாக உள்ளது. இது மக்களின் பயன்பாட்டிற்கு வரும்போது இதனை எதிர்த்து ஏராளமான புகார் மனுக்கள் நீதிமன்றத்தில் குவியும்”’ என்றார் அலகாபாத் உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் அபய் குமார். 

உ.பி அரசுக்கு மசோதா தொடர்பாக 4500 மனுக்கள் வந்துள்ளன. ஆனால அரசு முஸ்லீம் அமைப்புகள் மனு தொடர்பாக பேசிய விஷயங்களை புறக்கணித்துள்ளது. நவம்பர் 2021 அன்று, கார்ப்பரேஷன் தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதில் தேர்வாகி பதவி வகிப்பவர்கள் பலரும் இரண்டு குழந்தைகளுக்கும் அதிகமாக பெற்றவர்கள்தான். மசோதா சட்டமானால், முன்னர் தேர்தலில் வென்றவர்கள் அனைவரும் தகுதியிழப்பார்கள். 


இந்தியா டுடே 

ஆசிஷ் மிஸ்ரா 









கருத்துகள்

பிரபலமான இடுகைகள்