பெருந்தொற்றை சமாளிக்க வந்துவிட்டது புதிய பேக்! - சந்தைக்குப் புதுசு
சந்தைக்குப் புதுசு!
சாம்சங் கேலக்ஸி புரோ
லேப்டாப்
போனிலிருந்து லேப்டாப் சந்தை பக்கம் சாம்சங் தனது கவனத்தை திரும்பியிருக்கிறது. இன்டெலின் பதினோராவது தலைமுறை சிப்பைக் கொண்டுள்ளது. அமோல்டு திரையை போனிலிருந்து எடுத்து லேப்டாப்பிலும் கொண்டு வந்திருக்கிறார்கள். போட்டி நிறுவனமாக எல்ஜியை விட மொத்த எடையில் நூறு கிராம் குறைந்துள்ளது. சாம்சங் போனை சற்று அப்டேட் செய்து லேப்டாப் செய்தது போன்ற உணர்வு பயனர்களுக்கு ஏற்படலாம். காரணம், போனிலிருந்த பல அம்சங்களை லேப்டாப்பிற்கு சாம்சங் மாற்றியுள்ளது.
சிங் செல் ஆல்பா
ஸ்பீக்கர்
வடிவமைப்பாளர் கிரிஸ்டோபர் ஸ்ட்ரிங்கர் உருவாக்கியுள்ள ஸ்பீக்கர் இது. இவர் ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றிய அனுபவசாலி. 3டி வடிவில் இசை கேட்கும் அனுபவம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். இதிலிருந்து வரும் இசையை டிரைபோனிக் சவுண்ட் என்று கூறுகிறார்கள். இதனால் இதனை டிராமா முதல் திரைப்படம் வரை இணைத்து கேட்கலாம். இதனுடன் கட்டுப்படுத்த தனி ஆப்பும் உள்ளது.
கெனான் இஓஎஸ் ஆர்3
விளையாட்டு, வனம் சார்ந்த சம்பவங்களை வேகமாக படமெடுக்க உதவும் கெனானின் படைப்பு இது. கண்ணாடி இல்லாத கேமரா. விலை கூடுதல்தான் என்றாலும் வேகமாக படமெடுக்கவேண்டும் என்ற காரணத்திற்காகவே இதனை உருவாக்கியுள்ளனர். சிமோஸ் சென்சார், டிஜிக் எக்ஸ் புரோசசர் என புதிய அம்சங்களும் உள்ளன. தே்வையான ஆர்எப் லென்ஸ்களை தேர்ந்தெடுத்தால் உடனே கிளம்பி படங்களை கிளிக் செய்யவேண்டியதுதான்.
டெல் லாட்டிடியூட்
டிடாச்சபிள்
ஹெச்பி மைக்ரோசாப்ட், லெனோவா, ஆப்பிளுக்கு அடுத்து டேப்லெட்டையும், லேப்டாப்பையும் டெல் நிறுவனம் இணைத்து கணினியை வெளியிட்டுள்ளது. ஹைபிரிட் கணினியான இதில் பதிமூன்று இன்ச் 16.10 அளவில் திரை உள்ளது. ஐ7 சிப் பொருத்தப்பட்டுள்ளது. வெப்கேம் சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு முன்னரே சர்பேஸ் கணினியை பயன்படுத்தியிருந்தால் டெல்லை வாங்கவேண்டாம். மற்றபடி டெல்லின் தரத்திற்காக இதனை வாங்கலாம்.
ரியூட்பேக் பிளஸ்
தார்பாலின், பிவிசி பொருட்களைப் பயன்படுத்தி இந்த பேக்கை தயாரித்திருக்கிறார்கள். இதில் சானிட்டைசரை தனியாக வைத்துக்கொள்ள ஹோல்டர் ஒன்றுள்ளது. எனவே, பேக்கில் ஒட்டியுள்ள நுண்ணுயிரிகளை எளிதாக அழித்துவிட்டு பேக்கைத் தொட்டு ஜிப்பை சரக்கென திறக்கலாம். பதினைந்து இன்ச் கொண்ட லேப்டாப்பை உள்ளே வைத்துக்கொண்டு ஆபீஸ் செல்லலாம். இதன் கொள்ளளவு இருபது லிட்டர். நவீன பெருந்தொற்று காலத்தை கடக்க ஏற்ற பேக் இது. பேக்கில் என்ன பொருட்களைக் கொட்டினாலும் எளிதாக சுத்தப்படுத்த முடியும். ஆபீஸ் அல்லது வேறு இடங்களுக்கு சென்றாலும் கூட ரியூட்பேக் அதற்கும் ஈடுகொடுக்கிறது.
கருத்துகள்
கருத்துரையிடுக