மக்களின் பிரச்னை பற்றி பேசி படம் எடுத்தால் வழக்கு போட்டு மிரட்டுகிறார்கள்! - திவ்யபாரதி, ஆவணப்பட இயக்குநர்

 

 

 

 

``திருநங்கையாக ஓர் ஆண் நடிப்பது அயோக்கியத்தனம்!" - சீறும் இயக்குநர் ...

 

 

 

படைப்புகளை எதிர்த்து வழக்குகளை போடுகிறார்கள்!


கக்கூஸ் படம் எடுத்த திவ்யபாரதியை பற்றி படித்திரூப்பீர்கள். அவர் இப்போது கீட்டோ நிறுவனத்தின் உதவியுடன் நிதி திரட்டி மாற்று திறானிகளை மையமாக வைத்து சாட்லா என்ற ஆவணப்படத்தை எடுத்து வருகிறார். வரவர ராவ், சுதா பரத்வாஜ், ஸ்டேன்சாமி ஆகியோர மக்கள் பிரச்னைக்காக போராடினாலும் அவர்களை அரசு எதிரிகளாகவே கருதுகிறது. பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தி விடுகிறது என ஆவேசப்படுகிறார். க க்கூஸ் என்ற தனது ஆவணப்படுத்தில் மலமள்ளும் தொழிலாளர்களைப் பற்றிய விமர்சனத்தைப் பதிவு செய்தார். அடுத்து ஒருத்தரும் வரலே என்ற படத்தில் ஓக்கி புயலில் அரசு எப்படி செயல்பட்டது, சாகர் மாலா திட்டத்தால் ஏற்படும் அபாயம் பற்றியும் விளக்கியிருந்தார்.


2017இல் இவரின் க க்கூஸ் படம் வெளியானபோது, அரசு இவர் மீது சைபர் டெரரிசம் என்று வழக்குகளை பதிவு செய்த்து. அது மோசமான காலகட்டமாக இருந்தது. வெறும் டீசர் வெளியிட்டாலே வழக்கு போட்டுவிடுகிறார்கள் என்று கூறுகிறார். அம்பேத்கர், பெரியார், கார்ல் மார்க்ஸ் ஆகியோரின் கருத்தியல்களின் மீது நம்பிக்கை கொண்ட இயக்குநர் இவர். எனவே நான் விட்டுக்கொடுக்கப் போவதில்லை என்று உறுதியாக பேசுகிறார். வழக்குகள் தள்ளுபடியாக, இவரது படங்களை யூட்யூபில் வெளியிட பல லட்சம் மக்கள் அதனை பார்வையிட்டுள்ளனர். எனது படங்களை மக்கள் பார்த்து பார்வையிட்டு விமர்சனங்களைச் சொல்லுவது நன்றாக இருந்தாலும் இதுபோன்ற படங்கள் இன்னும் அதிகம் பேரை சென்று சேரவேண்டும். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று பேசுகிறார்.


சாட்லாவை முதல் படமாக எடுக்க நினைத்தாலும் அன்றிருந்த சூழல்கள் அதற்கு கைகொடுக்கவில்லை. எனவே, தற்போது முழுமுயற்சியில் இறங்கி டாக்கு பிலிம்மாக அதனை எடுத்திருக்கிறார். 2019இல் இதற்கான ஆராய்ச்சிகளை தொடங்கிவிட்டேன். ஜமாத்தில் சென்று தங்கி அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்களை பற்றி பேசி, கதைகளைக் கேட்டுத்தான் படம் பிடித்தேன். இதற்குமுன்னர் செய்த படங்களுக்கு ஆவணப்பட வடிவம் சரியாக இருந்தது. ஆனால் பாலியல் தொழில், பிச்சை எடுப்பது, கரகாட்டம் ஆடுவது என செயல்படும் மாற்றுப் பாலினத்தவர்களை எப்படி படத்தில் காட்டி அவர்களின் வலியை உணர வைப்பது? அதற்காகத்தான் டாக்கு பிலிம் வடிவம் தேவைப்பட்டது.

'கக்கூஸ்' ஒரு சமூகத்தை இழிவுபடுத்துகிறது.. திவ்யபாரதி மீது புதிய ...

புதிய படத்திற்கு ஓக்கி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் சமூகம் நிதியுதவியை வழங்கியுள்ளது. அவர்களைப் பற்றி ஆவணப்படடம் எடுத்ததால் இந்த உதவீயை அவர்கள் திவயபாரதிக்கு செய்திருக்கிறார்கள். பெரும்பாலானா ஆவணப்படங்களை பாரதி, தனது சொந்த பணத்திலும் நண்பர்கள் வழங்கும் நிதியிலும்தான் எடுத்திருக்கிறார். இதில் கடன்களும் உண்டு. நான் முழுமையான திரைப்படம் எடுக்கும் அளவுக்கு திறமை கொண்டவள் அல்ல. ஆனாலும் மக்கள் என்மீது நம்பிக்கை வைத்து நிதியுதவி செய்தார்கள். ஒலியை பதிவு செயயும் கருவியுடன் உள்ள கேமராவைத்தான் நான் பயன்படுத்துகிறேன். இதில் இன்னும் மேம்பட்ட படப்பதிவு கருவிகை பயன்படுத்த அதிக நிதி தேவைப்படுகிறது. அடிப்படையாக எனக்கு என்ன கிடைக்கிறதோ அதை வைத்துதான் படம் எடுக்கிறேன். எப்படி எடுத்தாலும் சரி. நான் எடுக்கும் படத்தில் ஆன்மா இருக்கும் என்பவர், அடுத்து நாட்டுப்புற கலைஞர்கள் பற்றிய ஆவணப்படத்திற்கு ரெடியாகி விட்டார்.


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்


ரோஷ்னி பாலசுப்பிரமணியன்



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்