இன்பமாக மகிழ்ந்திருக்க வாசிக்கலாம்! - லுங்கி - யுவகிருஷ்ணா - கட்டுரைகள்
லுங்கி
யுவகிருஷ்ணா
யுவகிருஷ்ணா, தனது லக்கிலுக் ஆன்லைன் தளத்தில் முன்னர் எழுதிய கட்டுரைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார். நூலில் மொத்தம் பதினான்கு கட்டுரைகள்.
இதனை வாசிக்கும் யாரும் புன்னகைக்காமல் படிக்கவே முடியாது. அந்தளவு வரிக்குவரி பகடி, நையாண்டி என தனது சிறுவயது வாழ்க்கை, சினிமா அனுபவங்கள், காதலர்தினத்தில் ஆர்எஸ்எஸ் கூட்டம் செய்யும் கோமாளித்தனங்கள், கண்ணில் பட்ட செய்திகள் என அனைத்தையும் ஜாலியாக கேலி செய்து எழுதியிருக்கிறார்.
உல்லாசம் கட்டுரையில் செய்தியை எப்படி எழுதுவது என தந்தி நிருபர்களின் திறமையை போற்றுவது போல தோன்றும் ஆனால் படித்த பிறகுதான் அந்த கதையில் உள்ள ஓட்டைகள் பெரிதாக தெரியும். அந்தளவு நக்கலும் நையாண்டியுமாக எழுதியிருக்கிறார். ராமசாமியை இனி யாரும் ஊர் உலகத்தில் மறக்கவே முடியாது. அவர் தனது மனைவி மற்றும் என்ஜினியரிடம் அப்படியொரு சோதனையை செய்து பார்த்திருக்கிறார்.
தாலியக் கட்டு கட்டுரையைக் கூட நாம் சிரித்தபடியே வாசிக்கமுடியும். அதன் இறுதி வரியை நிச்சயம் படிப்பவர்கள் புன்னகைக்காமல் கடக்க முடியாது. வலைப்பதிவராக இருந்து பத்திரிக்கையாளராக மாறிய யுவகிருஷ்ணா, நையாண்டி செய்வதில் உள்ள நுட்பத்தை நூலில் அத்தனை கட்டுரைகளிலும் காட்டியிருக்கிறார்.
எனவே கட்டுரை என்றால் சீரியசாக முகத்தை வைத்துக்கொள்ளாமல் சந்தோஷமாக வாசிக்க யுவகிருஷ்ணாவின் இந்த நூலை தேர்ந்தெடுக்கலாம்.
கோமாளிமேடை
கருத்துகள்
கருத்துரையிடுக