காமத்துப்பாலை எப்படி புரிந்துகொள்ளவேண்டும் என அடையாளம் காட்டும் பாட்காஸ்ட்!

 






ஜியோ சாவன் ஆப்பைத் திறந்து பாஸ்வேர்டு பஞ்சாயத்துகளை முடித்துவிட்டால், அடுத்து பாட்காஸ்டை திறங்கள். அதில்தான் வள்ளுவம் பேசும் காமம் என்ற பாட்காஸ்ட் உள்ளது. கட்டுமானக்கலைஞரான ஆதவன் சுந்தரமூர்த்தி திருக்குறளில் உள்ள காமத்துப்பால் குறள்களை விளக்கிப் பேசுகிறார். 

ஆரம்பமே அதிரடிதான். தன்னை பாட்காஸ்ட் தொடரில் ஆய்த எழுத்து என்றே அறிமுகப்படுத்திக் கொள்கிறார். பொதுவாக போர், வன்முறை, கோபம் என பலவற்றையும் பேசும் நாம்  அன்பைப் பேசும் இடங்களில் மௌனமே சாதிக்கிறோம். பள்ளிகளில் இதனை பலரும் நினைவுகூரமுடியும். ஆண், பெண் உடல் வேறுபாடுகளை அறிவியலில் நூலில் பார்த்து கூச்சப்படுவது, தமிழில் காமத்துப்பாலை ஜஸ்ட் லைக் தட் மனப்பாடம் செய்துவிடுங்கள் என சொல்லிவிட்டு தமிழ் ஆசிரியர், ஆசிரியை நகர்ந்து விடுவதன் காரணம் என்னவென்று இன்றுவரை யாருக்கும் புரியாது. 




பவா செல்லத்துரை மூலம் ஊக்கம் பெற்று பாட்காஸ்டை உருவாக்கியுள்ள ஆதவன், பகிர்ந்துகொள்ளும் முதல் எபிசோட் விஷயங்களும் இதுதான். சிம்பிளான இன்ட்ரோவாக அமைகிறது. டிசம்பர் 2020இல் வள்ளுவம் பேசும் காமத்தைத் தொடங்கியிருக்கிறார். காமத்துப்பாலில் காதல், காமம், அன்பு, பிரிவு, தனிமை என பல்வேறு விஷயங்கள் இதில் உள்ளன. இதனை வள்ளுவர் அளவுக்கு அழகாக யாரும் பேசவில்லை என்கிறார் ஆதவன். 

ஆதவனின் தாத்தா , கவிஞர், அவரும், அவரது தந்தையும் காமத்துப்பாலை படிக்க ஊக்கப்படுத்தியுள்ளனர். முதலில் இதனை படித்துப் பார்த்தவருக்கு எதுவும் புரியவில்லை. ஆனால் பின்வரும் ஆண்டுகளில் குறள்களை தனது வாழ்க்கையை இணைத்து வைத்து புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளார். ஒன்றை விளக்கி அடுத்தவருக்கு புரியவைப்பவர்கள் அதில் எந்தளவு காதல் கொண்டிருப்பார்கள் என்பதை நாம் புரிந்துகொள்ள முடியாது. 




பெண்களிடம் எப்படி நடந்துகொள்வது, அவர்களிடம் பழகுவது என காதலைப் பற்றி ஆதவனும் தெளிவாக தெரிந்துகொண்டேன் என்று கூறுகிறார். மாற்றுப்பாலினத்தவர்களுக்காகவே தனி எபிசோட் ஒன்றை உருவாகிக்கியுள்ளார். “சமூகத்தில்  காமம் தொடர்பான நமது பார்வைகள் மாறவேண்டும். இதுதொடர்பாக விவாதங்கள் நடைபெறவேண்டும். அதற்காகத்தான் எனது பாட்காஸ்ட் முயற்சியைத் தொடங்கினேன். இந்தவகையில் சரி, தவறு என்று இதனைப் பார்க்க கூடாது. நான் ஒவ்வொரு முறையும் இதனை படிக்கும்போது, புதிதாக ஏதேனும் ஒன்றைக் கற்கிறேன். ” என பரவசமாகிறார் ஆதவன். திருக்குறளை ஆங்கிலத்திலும் பேசி பாட்காஸ்டை உருவாக்கி வருகிறார். தமிழ் பாட்காஸ்டின் ஒவ்வொரு அத்தியாயத்திற்குமான கவர் ஆர்ட் அசத்தலாக இருக்கிறது. 


தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 

பாட்காஸ்டைக் கேட்க ...

https://www.jiosaavn.com/shows/valluvam-pesum-kamam---tamil-podcast/1/3s2hiPP2amk_








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்