ஹெவி மெட்டல் இசை வன்முறையைத் தூண்டுகிறதா? - பதில் சொல்லுங்க ப்ரோ?
பதில் சொல்லுங்க ப்ரோ?
மிஸ்டர் ரோனி
ஹெவி மெட்டல் இசை ஒருவரின் மனநலத்தை பாதித்து வன்முறையாளராக மாற்றுமா?
ஒருவரின் மனநிலை மாறி அவர் வன்முறையாளராக மாற இசை காரணமாக இருந்தது கிடையாது. இசை என்பதை சிலர் காரணமாக காட்டினாலும் அது தவறானதே. இசை என்பது பல்வேறு நினைவுகளின் தோரணமாக சிலரை இணைத்துக்கொண்டு வரலாம். ஹெவிமெட்டல் இசையில் பாடுவதும், இசைப்பதும் அதிவேகமாக நடக்கும். ஆனால் அதற்காக வன்முறையைத் தூண்டுகிறது என்று கூறுவது ஆதாரங்களே இல்லாத வாதம்.
குடும்ப சிக்கல்கள், போதைமருந்து பழக்கம், தனிமையில் இருப்பது ஆகியவையே ஒருவரின் மனதில் வன்முறையை உருவாக்குகிறது. 2018ஆம் ஆண்டு சவுத் வேல்ஸிலுள்ள மக்கியூரா என்ற பல்கலைக்கழகம் இதுதொடர்பான ஆய்வை செய்து மெட்டல் இசை, வன்முறையை ரசிகர்கள் மனதில் உருவாக்குவதில்லை என்று நிரூபித்தது. அதற்கு முன்னர் இந்த இசைக்கலைஞர்களை சிறிது ஆபத்தானவர்களாகவே பலரும் பார்த்தனர். 1996ஆம் ஆண்டு ஸ்லேயர் என்ற ஹெவி மெட்டல் குழுவின் மீது சிறுமியின் பெற்றோர் வழக்கு தொடர்ந்தனர். அவர்களது மகள் செய்த கொலைகளுக்கு குழுவினரின் இசைதான் காரணம் என்பதுதான் அவர்களது முரட்டுத்தனமான வாதம். ஆனால் வழக்கு தள்ளுபடி ஆகிவிட்டது.
பாடலில் கத்துவதும், இசைக்கருவிகளின் அபரிமித ஒலிகளும் பார்க்கும்போது ஒருவருக்கு வன்முறைத் தன்மை தெரியலாம், உண்மையில் ஒருவர் இந்த இசையைக் கேட்டு தனது கோபத்தை வெளியே கொண்டு வர முடியும். இதன்மூலம் தற்கொலை , விரக்தி, சோகம் போன்ற உணர்வுகளிலிருந்து விடுதலை ஆகலாம் என்கிறார்கள். இந்த ஆய்வை குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் செய்தது.
சயின்ஸ்போகஸ்
கருத்துகள்
கருத்துரையிடுக