சொத்துக்காக நடக்கும் கொடூர கொலைகள்! - யுவர் சீக்ரெட்
யுவர் சீக்ரெட்
சீன டிவி தொடர்
யூட்யூப்
லூ பே சான், காவல்துறையில் தடயவியல் துறையில் பேராசிரியராக உள்ளார். டிடெக்டிவ் லாவோ கண்டுபிடிக்கும் கொலைகளுக்கான பிரேத பரிசோதனைகளை லூதான் சோதனை செய்து கண்டுபிடிக்கிறார். இருவருமே வேலை காரணமாக நெருக்கமான நண்பர்களாகிவிட்டனர். இந்த நிலையில் அங்கு தடயவியல் படிப்பின் இன்டர்ன்ஷிப்புக்காக கூ சூ என்ற இளம்பெண் வருகிறார். அவரைப் பார்த்ததும் லூ பே சான், இந்த பெண் எனக்கு தேவையில்லை என்று சொல்லுகிறார். ஆனால் அதற்கு அந்த பெண் குற்றவுணர்ச்சியுடன் பேசினாலும் நான் உங்களிடம்தான் வேலையைக் கற்றுக்கொள்வேன் எனக் கூறுகிறாள். உண்மையில் லூ பே சான், கூ சூ என்ற இருவரின் உறவு என்ன, லூ பே சான் எதற்கு அந்த பெண்ணை வெறுக்கிறார், அவமானப்படுத்துகிறார் என்பதுதான் 37 அத்தியாயங்களைக் கொண்ட டிவி தொடரின் மையம்.
குடும்ப ஆதிக்கம், சொத்துரிமை, போதைப்பொருட்கள் வியாபாரம் என ஏராளமான விஷயங்களில் கதை நகருகிறது. அடிப்படையான கதை என்பது லூ குடும்பத்திற்கும், கூ சூ குடும்பத்திற்குமான பிரச்னைதான்.
லூ குடும்பத்தில் பே சென் என்பவர் கார் விபத்தில் இறந்துவிட, அதில் இரட்டையரான லூ பே சான் என்பவர் மட்டுமே மிச்சமிருக்கிறார். இவரும் அப்பாவின் பேச்சுக்கு மறுப்பாக தடயவியல் துறையில் வேலையில் இருக்கிறார். குடும்பம் சார்ந்த சொத்துகளும் இவருக்கு கிடையாது. ஏன் அப்படி என்றால் அது தொடரில் வரும் முக்கியமான ஃபிளாஷ்பேக் கதை.
தொடரில் முக்கியமான அம்சம், பலரும் நல்லவர் என நினைக்கும் லூ பே சான் எந்தளவு சுயநலமானவர், தனது வாழ்க்கைக்காக அவர் செய்யும் சின்ன விஷயம் அவரது தம்பி பே சென் வாழ்க்கையை எப்படி மாற்றிப் போடுகிறது என்பதை பார்க்கும்போது பீதியடைவீர்கள்.
கூ சூ முதலில் பார்த்து பேசுவது பே சென்னைத்தான். ஆனால் லூ பே சானுக்கு சூவைப் பிடித்துவிட அவளை தனது தம்பி பெயரில் காதலிப்பார். தம்பிக்கு பெண்தோழி வேறு உண்டு என்றால் ட்வின்ஸ்களுக்கு இடையில் பொறாமைகளுக்கு கேட்க வேண்டுமா? தொடரில் இந்த காட்சிகளுக்கு இடம் குறைவு.
கதையில் பெரும்பகுதி தடயவியல் ஆய்வுகள் எப்படி நடக்கின்றன. இறந்தவரின் உடலில், கொலை நடந்த இடத்தில் கிடைக்கும் விஷயங்களை வைத்து எப்படி உண்மைகளைக் கண்டுபிடிப்பது என்பதை தொடர் நெடுக பேசுகிறார்கள். அறிவுப்பூர்வமான தகவல்களை வைத்து டிடெக்டிவ்கள் உளவியல் பூர்வமான முறையில் சந்தேகப்படுபவர்களை விசாரிக்கிறார்கள். இதில் உண்மை எப்படி வெளிப்படுகிறது என்பதுதான் ஆச்சரியமான பகுதி.
தடயவியல் என்றாலும் மனிதர்களின் மனம் எப்படி குற்றத்தின் போது செயல்படுகிறது, கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்துகிறது என்பதை பல்வேறு வழக்குகள் வழியாக பார்க்க முடிகிறது. நேரடியான களத்தில் கதை பெரும்பாலும் பயணிப்பதை விட பெரும்பாலும் ஆய்வகம் சார்ந்தே இயங்குகிறது. இது தொடரைப் பார்ப்பதில் சோர்வை உண்டாக்குகிறது.
லூ பே சானின் புத்திசாலித்தனம்தான் தொடரை பார்க்க வைக்க முக்கியமான அம்சம். தனது தம்பியின் வாழ்க்கை கெட்டதற்கு தான்தான் காரணம் என்பதை உணர்ந்தவர், தான் இறப்பதை முன்னரே அடையாளம் கண்டுவிடுகிறார். தனது காதலியிடம் நான் இறந்தாலும் என்னை தைரியமாக உடலை வெட்ட வேண்டும் என்று சொல்லுகிறார். இவரின் முடிவு சற்றே ட்விஸ்டுகளை கொண்டதாக முடிகிறது.
பே சென் தாமதாக கதையில் வந்தாலும் இறுதிப்பகுதியை தன் கையில் வைத்திருப்பது இவர்தான்.
மூளை விளையாட்டு
கோமாளிமேடை டீம்
இயக்குநர்கள்
யாங் ஷின் யூ, மூ ஷியாபோ ஜீ
திரைக்கதை எழுத்தாளர்கள்
யே ஷின், காய் ஷின், ஜியாங் குவாங் யூ, ஸாங் வூ ஸூவாவோ
https://mydramalist.com/31125-your-secret
கருத்துகள்
கருத்துரையிடுக