இடுகைகள்

புதின் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ரஷ்யாவின் கிரெம்ளினுக்கு பணிந்து மக்களைக் காட்டிக்கொடுக்கும் டெலிகிராம் ஆப்!

படம்
  டெலிகிராம் ஆப் - ரஷ்யா அரசின் உறவு டெலிகிராமை வளைக்கும் ரஷ்யா ரஷ்யாவுக்கு பணிந்துபோகும் டெலிகிராம் நிறுவனம்! டெலிகிராம் என்றில்லை. எந்த ஒரு டெக் நிறுவனமும் குறிப்பிட்ட நிலப்பரப்பிலுள்ள அரசுகளின் விருப்பத்திற்கு, விதிகளுக்கு பணிய வில்லை என்றால் சுதந்திரமாக செயல்பட முடியாது. அதை தடை செய்வார்கள். வருமான இழப்பை டெக் நிறுவனத்தை நிலைகுலைய வைக்கும். இந்த நிலையில் நிறுவனம் அரசுடன் பரஸ்பர சகாய ஒப்பந்தத்திற்கு வந்தே ஆக வேண்டும். டெலிகிராம் கூட பரவாயில்லை. நெருக்கடி கொடுத்து அதை கீழே வீழ்த்தினார்கள். ஆனால், மெட்டாவின் குறுஞ்செய்தி, சமூக வலைத்தள நிறுவனங்கள் உலகமெங்கும் சர்வாதிகார அரசுகளிடம் மண்டியிட்டு காசு வாங்கிக்கொண்டு இயங்கி வருகிறார்கள். மெட்டா அதிக பயனர்களைக் கொண்டுள்ள நாடுகளில் கலவரம், போராட்டம், இனவெறி என அமைதி இல்லாத நிலையே நிலவுகிறது. இதை எந்த ஊடகங்களும் வெளிப்படையாக பேச மாட்டார்கள்.   ரஷ்யாவில் உள்ள அரசியல் சமநிலை குலைவைப் பற்றிய செய்திகளை நாளிதழில் படித்திருப்பீர்கள். டிவி சேனல்களில் செய்தித்தொகுப்புகளையும் பார்த்திருப்பீர்கள். அங்குள்ள தனியார் கூ லிப்படை ராணுவமே, அரசி...

மணம் செய்துகொண்டு தனித்தனியாக வாழ்ந்து உளவு பார்த்த ரஷ்ய உளவாளிகள்!

படம்
  உலக நாடுகளில் சட்டவிரோதமாக நுழைந்து ஒற்றறியும் ரஷ்ய உளவாளிகள்! அண்மையில் பிரேசில் நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் திடீரென காணாமல் போயுள்ளனர். இவர்களைப் பற்றி இரு நாட்டு காவல்துறையும், உளவு அமைப்பும் துப்பு துலக்கியதில் ரஷ்ய நாட்டின் உளவு அமைப்பால் பயிற்சி வழங்கப்பட்டவர்கள் எனவும், ஆண், பெண் என இருவருமே மணமாகி பிரிந்து தனித்தனி நாடுகளில் வாழ்ந்து வந்தவர்கள் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. ஜெரார்ட் டேனியல் காம்போஸ் விட்டிச், இவர் பிரேசில் நாட்டில் இருந்து மலேசியாவிற்கு சென்றார். போகும் வரை தனது பெண் தோழிக்கு குறுஞ்செய்தி அனுப்பியவர், திடீரென மாயமானார். அவரைப் பற்றிய எந்த செய்தியும் தெரியவில்லை. இதனால், பதட்டமான பெண்தோழி, விட்டிச் பற்றி காணவில்லை என்று புகார் கொடுத்து தேடத் தொடங்கினார். காவல்துறையோடு, சமூக வலைத்தளத்திலும் தேடுதல் நடைபெற்றது. ஆஸ்திரிய – பிரேசிலிய பாரம்பரியத்தைக் கொண்ட விட்டிச், 3 டி பிரிண்டிங் நிறுவனத்தை நடத்தி வந்தார். பிரேசிலிய ராணுவத்திற்கு பல்வேறு கருவிகளை செய்து கொடுத்து ஆயுத வடிவமைப்பில் உதவி வந்தார். இவரது பெண்தோழி, பிரேசில் அரசின்...

புத்தகம் புதுசு - புதினின் மனதில் என்ன இருக்கிறது?

படம்
  ஆஃப்டர் ஸ்டீவ் டிரிப் மிக்கில் ஹார்ப்பர் கோலின்ஸ் 599 ஸ்டீவ் ஜாப்ஸ் இருந்தபோது ஆப்பிளின் மதிப்பே வேறு. புதிய கண்டுபிடிப்புகள் வந்தன. பழைய பொருட்கள் தூக்கியெறியப்பட்டன. ஆனால் இப்போது நிறுவனம் தனது ஆன்மாவை இழந்துவிட்டது. புதிய கண்டுபிடிப்புகள் ஏதும் இல்லை. பழைய பொருட்களையே அப்டேட் செய்து விற்று வருகிறார்கள். நூலை ஆசிரியர் 200 முன்னாள், இந்நாள் ஊழியர்களிடம் பேசி ஆப்பிள் எப்படி செயல்படுகிறது என அடையாளம் கண்டு எழுதி உள்ளார்.  புதின்  பிலிப் ஷார்ட்  பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  புதிதின் புதிய ரஷ்யாவைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். அது உக்ரைனை அழித்துக்கொண்டிருக்கிறது. 2000இல் ரஷ்ய அதிபராக பதவியில் உட்கார்ந்தார் புதின். பிறகுதான் சோவியத் ரஷ்யா கால அதிகாரத்தை கொண்டு வர நினைத்து பல்வேறு வேலைகளை செய்யத் தொடங்கினார். பனிப்போர், சைபர் போர், பிரிந்துசென்ற நாடுகளை மிரட்டி ரஷ்யாவுடன் இணைப்பது என புதினின் மனதில் மூளையில் என்னதான் உள்ளது என விளக்கமளிக்க முயல்கிறது இந்த நூல்.  தி மிஸ்ஸிங் கிரிப்டோகுயின் ஜேமி பார்ட்லெட் பெங்குவின் ராண்டம் ஹவுஸ் இக்னாடோவா என்ற பெண்மணி மற்றிய கதை...

ரஷ்யாவை முடக்கும் ஊடக சர்வாதிகாரி!

படம்
ரஷ்யாவைக் கட்டுப்படுத்தும் சர்வாதிகாரி! 2017 ஆம் ஆண்டு வசந்தகாலத்தில் ரஷ்யாவில் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்களை உங்களுக்கு நினைவிருக்கிறதா? நூறுபேர்களுக்கு மேல் ஊழலுக்கு எதிராக மாஸ்கோ வீதிகளில் போராடத் தொடங்க, அதற்கு மக்கள் ஆதரவு கிடைத்தது. உடனே அரசுப்படைகள் மக்களை அடித்து விரட்டத் தொடங்கினர். 2 ஆயிரம் மக்களுக்கு மேல் போராடிய இந்த போராட்டங்களை வாய்ப்பு கிடைத்த தென மேற்கத்திய ஊடகங்கள் ஒளிபரப்பு செய்ய அலைபாய்ந்தனர். ரஷ்ய ஊடகங்களும் இதனை செய்தியாக்கினர். ஆனால் மக்களுக்கு இந்த செய்தி மி க குறைவாகவே கிடைத்தது. மார்ச் 26 தொடங்கிய போராட்டம் அப்படியே வலிமை குன்றிப் போனது. ஊடகங்களை அடித்து மிரட்டி கட்டுப்படுத்தியதில் முக்கியமானவர், அலெக்ஸி கிரமோவ். புதினின் அரசைக் கட்டுப்படுத்திக் காப்பாற்றுவதில் இருபது ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளவர் அலெக்ஸி.  வேறுமாதிரி சொல்வது என்றால் புதின் சொல்லும் சரி, தவறு விஷயங்களை ஊடகங்களுக்கு வழங்குவது இவர்தான். முக்கியமான சமாச்சாரம், ரஷ்யா டுடே டிவியின் இணை நிறுவனர் வேறு யாருமில்லை, அலெக்ஸிதான். 70 களில் மாஸ்கோ மாநில பல்கலையில் வரலாறு படித்தவர். கால...