இடுகைகள்

போலி நிறுவனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

9. வெளிநாட்டு போலி நிறுவனங்கள் மூலமாக நடந்த நிதி முறைகேடு - மோசடி மன்னன் அதானி

படம்
  வினோத் அதானி, தான் உருவாக்கிய போலி நிறுவனங்களைப் பற்றிய கவனம் கொள்ளாமல் இல்லை. வரி விலக்கு கொண்ட நாடுகளில் போலி நிறுவனங்களை உருவாக்கியவர், அதன் மீது பிறருக்கு சந்தேகம் வராமல் இருக்கவே அவற்றுக்கென தனியாக வலைத்தளங்களை உருவாக்கி வைத்தார். அந்த வலைத்தளங்களில் காணப்படும் சில அம்சங்களைப் பார்ப்போம்.   பெரும்பாலான வலைத்தள பெயர்கள் அனைத்தும் ஒரே நாளில் தனித்தனி வணிக நிறுவனங்கள் போல உருவாக்கப்பட்டவை. எ.டு. ஹிண்டன்பர்க் அமைப்பு செய்த ஆராய்ச்சியில் ஐந்து நிறுவனங்கள் 2017ஆம் ஆண்டு மே 4ஆம் தேதி தொடங்கப்பட்டவை என தெரிய வந்தது. மீதி ஐந்து நிறுவனங்கள் 2016 ஜூன் 1ஆம் தேதி தொடங்கப்பட்டவை. அனைத்து வலைத்தளங்களின் பக்கங்களின் தலைப்புகளும் ஒன்று போலவே அமைந்திருந்தன. முகப்பு, நிறுவனம் பற்றி, சேவைகள், கேலரி (விலை கொடுத்து வாங்கிய புகைப்படங்கள்), தொடர்புகொள்ள என தலைப்புகள் அப்படியே மாறாமல் இருந்தன. தொடர்பு முகவரியில் உள்ள முகவரி, வணிக முகவர் ஒருவரின் முகவரியைக் கொண்டிருந்தது. உண்மையான வணிக நிறுவனத்தின் பெயரில் முகவரி இல்லை. நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள், குழுக்கள் பற்றி எந்த தகவல்களும் இல்லை