இடுகைகள்

மாற்றுப்பாலினத்தவர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டெக் உலகில் மாற்றுப்பாலினத்தவர்கள் காலூன்ற உதவுபவர்! - ஆஞ்செலிகா ரோஸ்

படம்
  john hope bryant அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள காம்டனில் பிறந்தவர். அன்றைய நாளில் அங்கு போதைப்பொருட்கள் விற்பனை கொடிகட்டி பறந்தது. அதுதான் பெரும்பான்மையானவர்களுக்கு சம்பாதிக்கும் வழிமுறையும் கூட. ஜானுக்கு பத்து வயதாகும்போது, அவர் படிக்கும் பள்ளிக்கு தொழிலதிபர் ஒருவர் வந்தார். நேர்மையான தொழில் செய்து சம்பாதிப்பதை அவர் மூலமே ஜான் அறிந்து நம்பிக்கை கொண்டார். இன்று 57 வயதானாலும் கூட அந்நாளை நினைவுகூர்ந்து பேசினார். வறுமையான நிலையில் உள்ள மக்கள், தங்களது தொழில் ஐடியாவை நிஜமாக்க நடைமுறையில் சாத்தியப்படுத்த முதலீட்டை ஈர்க்க முடியும். வாய்ப்புகளைப் பெறமுடியும். அதற்கு ஜான் உதவுகிறார்.  1992ஆம் ஆண்டு, ஜான் ஆபரேஷன் ஹோப் என்ற தன்னார்வ அமைப்பைத் தொடங்கினார். இந்த அமைப்பு, ஏழை மக்களுக்கு நிதி சார்ந்த கல்வியை இலவசமாக வழங்குகிறது. வறுமையில் வாடும் இனக்குழுவுக்கு தொழில் மூலம் முன்னேறுவது எப்படி என வழிமுறைகளை ஹோப் அமைப்பு கூறுகிறது. அமெரிக்காவில் உள்ள ஆயிரம் இடங்களில், 300 அலுவலகங்களில் ஹோப் அமைப்பு தனது பயிற்சிகளை வழங்கியுள்ளது. 2020ஆம் ஆண்டில் ஷாப்பிஃபை அமைப்புடன் இணைந்து கருப்பின தொழிலதிபர்கள

அமினின் கதையில் மகிழ்ச்சியான தருணங்களும் உண்டு! - ஃப்ளீ (2021) - அனிமேஷன் டாக்குமெண்டரி

படம்
  ஜோனாஸ் போகெர் ராஸ்முசென் டென்மார்க் இயக்குநர் இவர், ஃப்ளீ(2021) எனும் அனிமேஷன் டாக்குமெண்டரி படத்தை எடுத்துள்ளார். இப்படம், அமின் நவாபி என்ற ஒருவர் ஆப்கானிஸ்தானின் காபூலில் இருந்து தப்பித்து ரஷ்யாவின் மாஸ்கோவுக்கு வந்து அங்கிருந்து டென்மார்க் நாட்டுக்கு செல்லும் பயணத்தை விவரிக்கிறது. படம் ஆஸ்கர் விருதுக்கு அனுப்பப்பட்ட பெருமையுடையது. இயக்குநரிடம் பேசினோம்.  உங்களுக்கு நவாபி இளம் வயதிலேயே தெரியும். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து படம் இயக்கலாம் என்று எப்படி எப்போது தோன்றியது? டென்மார்க் நாட்டின் கிராம பகுதியில் வளர்ந்தவன். அப்போதுதான் ஆப்கானிஸ்தானில் இருந்து சிறுவன் பதினைந்து வயதில் அங்கு வாழ்வதை அறிந்தேன். அவனது கதையை தெரிந்துகொள்ள ஆர்வம் கொண்டேன். ஆனால் முதலில் அவன் தன் கதையைக் கூற விரும்பவில்லை. நாங்கள் நண்பர்களாக இருந்தாலும் அவனது இறந்தகாலம் மர்மமாகவே இருந்தது. பதினைந்து ஆண்டுகள் கழிந்தபிறகு அவனது கதையை தெரிந்துகொள்ள மீண்டும் கேட்டேன். ஆனால் அவன் கூற முடியாது என மறுத்துவிட்டான். ஆனால் அப்போதே அவன் நான் அதைக்கூற தயாரானதும் உன்னிடம் கூறுகிறேன் என்று சொன்னான். பிறகு நான் அனிமேஷன் டாக்

2022இல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் புதிய நூல்கள்!

படம்
  டிரேஸி ஃபிளிக் கேனாட் வின் டாம் பெரட்டா டிரேஸி ஃபிளிக்  என்ற பாத்திரம் எப்படி பாலின வேறுபாடுகளைத் தாண்டி தனது துறையில் வெல்கிறார் என்பதே கதை. எலக்சன் என்ற நூலை எழுதியபிறகு 25 ஆண்டுகள் கழித்து டிரேஸி ஃபிளிக் என்ற பாத்திரத்துடன் வாசகர்களை எழுத்தாளர் டாம் பெரட்டா சந்திக்க வந்துள்ளார். உயர்நிலைப்பள்ளி துணை முதல்வராக உள்ள டிரேசி பல்வேறு சவால்களை எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் கதை.  தி கிரேன் வைஃப் சிஜே ஹாசர் ஆய்வுக்காக செல்லும் பயணத்தில் காதல், அன்பு, திருமணம் ஆகியவற்றை புரிந்துகொள்கிறார் எழுத்தாளர் ஹாசர். இதன் விளைவாக நடக்கவிருந்த தனது திருமணத்தைக் கூட நிறுத்திவிடுகிறார். இப்படி செய்ய என்ன காரணம் என்பதை நூலில் ஹாசர் வாசகர்களுக்கு கூறுகிறார்.  ரெயின்போ ரெயின்போ லிடியா கான்கிளின் நூல் முழுக்க மாற்றுப்பாலினத்தவர்களின் கதைகள் நிரம்பி வழிகின்றன. ஓரினச்சேர்கைத் தம்பதிகள், சமூகத்தோடு இணைந்து வாழ விரும்பும் மாற்றுப்பாலினத்தவர்கள் சந்திக்கும் அனுபவங்கள், இதில் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புபவர்கள் என பல்வேறு உணர்வுகளை சொல்லும் கதைகளாக உள்ளன. விரும்புபவர்கள் இதனை வாங்கி வாசிக்கலாம்.  எய்தர் ஆர்

அரசுத்தேர்வில் வேலைவாய்ப்பு பெற்ற மாற்றுப்பாலினத்தவர்!

படம்
இந்தியாவைப் பொறுத்தவரை அறிவு இருந்தாலும் கூட அவர் என்ன பாலினம், என்ன சாதி என்பதைப் பொறுத்தே அவர் வாழ்க்கை முடிவு செய்யப்படுகிறது. இந்த தடைகளை தாண்டி சாதிக்க உங்களுக்கு முதுகெலும்பு எஃகால் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் கேலி, கிண்டல், வசைகளை கடந்து வெல்ல முடியும். குறைந்தபட்சம் தற்கொலை எண்ணங்களை தவிர்த்துவிட்டு வாழ முடியும். சமூக அழுத்தம் அந்தளவு மோசமாக மாறியிருக்கிறது. அதிலும் மாற்றுப்பாலினத்தவர் என்றால் நிலைமையை சொல்லவே முடியாது. அந்தளவு சிக்கலாக இருக்கும். அமிர்தாவுக்கு வயது 38. தற்போது திருவண்ணாமலையில் தட்டச்சராக இருக்கிறார். தனியார் நிறுவனத்தில் 14 ஆண்டுகள் வேலை பார்த்தவர் எதிர்கொண்ட சிக்கல்கள் ஏராளம். அரசு தேர்வெழுதி இப்போது தட்டச்சராக தேர்வு பெற்று வேலை பார்த்து வருகிறார். இவரது குடும்பம் தினக்கூலிதான். குடும்பத்தில் மொத்தம் ஏழுபேர். அத்தனை பேரும் வறுமையால் கிடைத்த வேலைக்கு சென்றுவிட்டார்கள். இதில் அமிர்தா மட்டுமே பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு பாலிடெக்னிக்கில் டிப்ளமோ படிப்பு படித்தவர். இதற்கும் அவர் வேலை செய்துதான் கல்வி கட்டணங்களை கட்டியிருக்கிறார். முக்கியமான

ஒலிம்பிக்கில் சாதித்த மாற்றுப்பாலினத்தவர்கள்!

படம்
  ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் மொத்தம் 183 மாற்றுப்பாலினத்தவர்கள் போட்டியிட்டனர். இது உண்மையில் முக்கியமான சாதனை. முப்பது நாடுகளிலிருந்து விளையாட்டு வீரர்களில் இதில் பங்கேற்றனர்.  சூ பேர்ட் - டயானா டாரசி பேஸ்கட் பால் விளையாட்டு வீரர்கள். அமெரிக்க அணியைச் சேர்ந்த இருவரும் ஐந்தாவது தங்கத்தை ஒலிம்பிக் போட்டியில் வென்றனர். இவர்களின் வெற்றியோடு அணியின் வெற்றியும் 55ஆக கூடியது. இந்த அணி கடைசியாக தோற்றது 1992ஆம் ஆண்டு .  நெஸ்தி பெடாசியோ குத்துச்சண்டை வீரர். வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். பிலிப்பைன்ஸ் நாட்டுக்காக பதக்கம் வென்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றார். தங்கப்பதக்கத்திற்கான போட்டியில் தோற்றபிறகு பத்திரிகையாளர்களிடம் இது மாற்றுப்பாலினத்தவர்களுக்கான போட்டியும் கூடத்தான் என்று சொன்னார். லட்சியம் தப்பாது நெஸ்தி.  டாம் டாலே  இங்கிலாந்தைச் சேர்ந்த நீச்சல் வீரர். தன்னை வெளிப்படையாக தன்பாலினத்தவர் என்று அறிவித்துக்கொண்ட துணிச்சல்கார ர். பத்து மீட்டர் டைவிங் போட்டியில் பங்கேற்று பதக்கம் வென்றார். போட்டிகளுக்கு இடையிலேயே தனது பதக்கத்தை வைத்து நாட்டிற்கு கொண்டு செல்வதற்கான பவுச

மாற்றுப் பாலினத்தவர்கள் ஒன்றாக திரண்டால் மட்டுமே அவர்களுக்கான உரிமைகளைப் பெற முடியும்!

படம்
                  ராமசுவாமி   ஈக்குவலி ஸ்டோரிஸ் பை பிரண்ட்ஸ் ஆப் தி க்யுர் வேர்ல்டு என்ற பெயரில் நூல் வெளியாகியுள்ளது . இதனை ஶ்ரீனி ராமசுவாமி , ராமகிருஷ்ண சின்கா ஆகியோர் இணை ஆசிரியர்களாக பணியாற்றி தொகுத்துள்ளனர் . இதில் 45 பேரின் கதைகள் உள்ளன . நூலைப்பற்றி அவர்களிடம் பேசினோம் . கூட்டணி என்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? மாற்றுப்பாலினத்தவர்கள் ஒன்றாக இணைந்து பல்வேறு சவால்களை எதிர்கொண்டால்தான் அவர்கள் இ்ங்கு வாழ முடியும் . இதைத்தான் நாங்கள் எழுதியுள்ள நூலில் குறிப்பிட்டுள்ளோம் . ஒருவர் தனது வாழ்க்கை அனுபவத்திலிருந்து பிறரை புரிந்துகொள்ள முடியும் . இதற்கு அவர்கள் ஒன்றாக இணைவது முக்கியமானது . நீங்கள் வெளியே வருவது பற்றி கூறுகிறீர்கள் . அதைப்பற்றி விளக்குங்களேன் . வெளியே வருவது என்று நான் கூறியது , தங்களது விருப்பம் பற்றி மாற்றுப் பாலினத்தவர்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதுதான் . பெற்றோர்கள் , ஆசிரியர்கள் , நிறுவனங்கள் என அனைவரும் மாற்றுப்பாலினத்தவரின் கொள்கை உருவாக்கத்தில் பங்களிக்க கூடியவர்கள் . இவர்கள் அனைவருமே ஒரு கூட்டணியாக திரண்டால் தங்களுக்கான கோரிக்கைகளை எளி

மாற்றுப்பாலினத்தவரின் குறியீடுகள், அடையாளங்கள்!

படம்
                மாற்றுப்பாலினத்தவர் குறியீடுகள் மாற்றுப்பாலினத்தவரை குறிப்பிட நிறைய அடையாளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன . அனைத்தையும் விட வானவில் அடையாளம்தான் அனைவருக்கும் எளிதாக புரியும்படி உள்ளது . இதனை கில்பர்ட் பேக்கர் என்பவர் உருவாக்கினார் . இதுதான் இறுதி என்று கூறமுடியாது . ஒரினச்சேர்க்கையாளர் தொடங்கி மாற்றுப்பாலினத்தவருக்காக ஏராளமான லோகோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன அவற்றைப் பார்ப்போம் . வெள்ளி , செவ்வாய் வெள்ளி அடையாளம் பெண்களைக் குறிக்க பயன்படுகிறது . லெஸ்பியன் பெண்கள் இரண்டு அடையாளங்கள் ஒன்றன்மீது ஒன்று இருப்பதாக வடிவமைத்து இருக்கிறார்கள் . இது காதல் கொண்ட இரு பெண்களைக் குறிக்கிறது . இதேபோல அமைந்துள்ள செவ்வாய் அடையாளம் ஆண்களை அடையாளப்படுத்துகிறது . இரண்டுபுறமும் கத்திகளைக் கொண்ட கோடரி , லெஸ்பியன்களை குறிக்கிறது . இந்த அடையாளம் தொன்மைக்கால அமேஸான் , கிரேக்க கடவுள் டெமட்டர் ஆகியோரைக் குறிக்கிறது . இரண்டு முக்கோணங்கள் ( பைஆங்கிள்ஸ் ) நீலமும் , பிங்க் நிறமும் கொண்ட முக்கோணங்கள் உள்ளன . இதில் பிங்க் நிறம் பெண்கள் மீதான காதலையும் , நீலம் ஆண்கள் மீதான கா

பெண் கல்வியாளர்களுக்காக பதிப்பகம்! - பார்பரா ஸ்மித்!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் பார்பரா ஸ்மித் அறிமுகம் தனது 72 ஆண்டு கால வாழ்க்கையில் கறுப்பினத்தவர்களுக்கான உரிமைகளைப் பேசுபவராக இருந்தார் பார்பரா.  காம்பாகி ஆற்றுப் பாதுகாப்பு மையத்தையும் உருவாக்கி, கறுப்பினத்தவரின் உரிமைகளைப் பேசினார். நான் என்னால் முடிந்த அனைத்து விஷயங்களையும் செய்ய முயற்சித்துள்ளேன் என்கிறார் பார்பரா. போராட்டம்தான் வாழ்க்கை!  1970 ஆம் ஆண்டு தொடங்கி, பார்பரா ஸ்மித் கறுப்பின மக்களுக்காக உழைத்து வருகிறார். மாற்றுப்பாலினத்தவர்களின் உரிமை, செயற்பாட்டாளர், பதிப்பாளர் என பல்வேறு விஷயங்களிலும் ஈடுபட்டு முத்திரை பதித்த பெண்மணி இவர்.  1946 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஓஹியோவில் பிறந்தார். 1960 ஆம் ஆண்டிலிருந்து பள்ளியில் போராட்டம் என்றால் முன்னாடி நிற்பார். புறக்கணிப்பு, மறியல் என அனைத்து வகை போராட்டத்திலும் பங்கேற்பது பார்பராவின் முக்கியப் பணி. இவரது அம்மாவுக்கு கல்வியின் முக்கியத்துவம் புரிந்தது. குடும்பத்தில் பார்பரா படிக்கும்போது அவர்தான் முதல் பட்டதாரியாவார் என ஹில்டா நம்பினார். ஒன்பதுவயதில் அவர் மறைந்து விட, பார்பராவின் பாட்டி மற்றும் அத்தை படிப்பு ப

சினிமாவில் சாதித்த மாற்றுப்பாலின பெண்கள்! - வாசோவ்ஸ்கிஸ்!

படம்
மாற்றுப் பாலின சாதனையாளர்கள் லில்லி - லானா வாசோவ்ஸ்கி 21 ஆம் நூற்றாண்டில் புகழ்பெற்ற திரைப்பட பெண் இயக்குநர்கள். எழுத்தாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமை  கொண்டவர்களாக இருந்தனர். தி மேட்ரிக்ஸ், வி ஃபார் வென்டெட்டா, க்ளவுட் அட்லஸ்,  சென்ஸ் எய்ட் என இவர்கள் உருவாக்கிய படைப்புகள் இவர்களை யார் என கேட்க வைத்தன. அமெரிக்காவில் பிறந்த இரு பெண்கள்தான் தி மேட்ரிக்ஸ் என்ற திரைப்பட இயக்குநர்கள் என்றால் நம்புவீர்களா? கிராபிக் நாவல், காமிக்ஸ் ஆகியவற்றிலிருந்து ஊக்கம் பெற்று படங்களை உருவாக்கினர்; உருவாக்கி வருகின்றனர். வாசோவ்ஸ்கி சகோதரிகள் என்ற  பெயரில் அழைக்கப்படுகின்றனர். மாற்றுப் பாலினத்தவராக தம்மை அழைத்துக் கொண்ட பெண்கள் இவர்கள். தற்போது நெட்பிளிக்சில் சென்ஸ் 8 என்ற தொடரை உருவாக்கி வருகின்றனர். இத்தொடர் மாற்றுப்பாலினத்தவர் சார்ந்த கதை. ஆங்கில கவிஞர் எழுத்தாளரான ரொனால்டு டோல்க்கியனின் தாக்கம் பெற்றவர்கள் இவர்கள். இவர்தான் ஹாபிட், லார்டு ஆப் தி ரிங்க்ஸ் ஆகிய கதைகளை எழுதியவர். நாங்கள் சினிமாவை புரிந்துகொள்ளக்கூடியதாக கணிக்க கூடியதாக உருவாக்குவதில்லை. அதனை முழுமை அடைந்

ஓரினச்சேர்க்கை அரசியல்வாதி! - துயரமான படுகொலை!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஹார்வி மில்க் அமெரிக்காவின் வுட்மேர் நகரில் யூதப் பெற்றோருக்கு மகனாகப்பிறந்தார் ஹார்வி. அமெரிக்காவில் ஓரினச்சேர்க்கையாளர் என்று அறிவிக்கப்பட்டு அரசியலில் வென்றவர் இவர். கலிஃபோர்னியா மாநிலத்தில் மேற்பார்வையாளராக பணிபுரிந்தார். அன்று இவர்தான் ஒரே ஒரு ஓரினச்சேர்க்கை அரசியல்வாதி. சிறுவயதில் காதுகள், கால்கள் பெரிதாக இருந்த தால் வகுப்பறையில் கடுமையாக கேலி செய்யப்பட்டார். வகுப்பில் கோமாளி என்றால் ஹார்வியைக் கூறுகிறார்கள் என்று பொருள். அப்போதே தன் உடலில் பாலின மாற்றங்களை உணர்ந்தார் ஹார்வி. அன்று என்னால் பெற்றோரிடம் அதைப்பற்றி கூற முடியவில்லை. காரணம் எனக்கு பயமாக இருந்தது என்று பின்னால் கூறினார். கேலிகளைச் சமாளித்து கணித பட்டதாரியானார். அப்போது கொரியப்போர் வர, அமெரிக்க கப்பற்படையில் பணியாற்றினார். இப்பணி முடித்து வெளியே வரும்போது ஆண் நண்பர் இவருக்கு கிடைத்தார். அவருடன் வசிக்கத் தொடங்கினார். அப்போது நியூயார்க்கில் அவருக்கு வேலை கிடைத்தது. பின்னர் மெல்ல நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். இவை அரசியலில் அவர் முகம் மக்களுக்கு தெரிய உதவின. இதன்விளைவாக தேர்

ஃபேஷன் உலகில் சாதித்த திறமைசாலி - மிஸ் ஜே

படம்
மாற்றுப்பாலினச் சாதனையாளர்கள் ஜே.அலெக்ஸாண்டர் அலெக்ஸாண்டர் ஜென்கின்ஸ், ஃபேஷன் உலகில் வெகு பிரபலமான ஆள். மிஸ் ஜே என்று அழைக்கப்படுவர், 1958 ஆம் ஆண்டு பிறந்தவர். அமெரிக்காவின் டிவி உலகில் பல்வேறு மாடல் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் ஆலோசகராகவும் பணிபுரிந்து வருகிறார். அமெரிக்காவில் நியூயார்க்கிலுள்ள பிராங்க்ஸில் பிறந்தவருக்கு, ஃபேஷன் வழிகாட்டுதலை வழங்கியது யாரோ அல்ல; அவரது அம்மாதான். பின்னர் எலைட் மேனேஜ்மெண்ட நிறுவனத்தைச் சேர்ந்த மோனிக் பில்லார்டு ஜேவைப் பார்த்தார். அவரின் தோற்றத்தைப் பார்த்ததும் மாடலுக்கு சரியான ஆள் என முடிவு செய்தார். உடனே அக்ரிமெண்டை ரெடி செய்து கையில் கொடுத்துவிட்டார். அதன்பின் படிப்பை தூக்கிப்போட்டு மாடலிங்கில் குதித்தார் ஜே. வெற்றியும் பெற்றார். பின்னர்தான் டைரா பேங்க்ஸ் என்ற நடிகையின் நிகழ்ச்சியில் ஆலோசகரானார். அவருக்கு நிகழ்ச்சி பற்றிய பல்வேறு ஆலோசனைகளை கட்டண சேவையில் வழங்கினார். மேலும் டைரா ஷோ என்று நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். வெறும் ஆலோசனைகள் மட்டுமன்றி அமெரிக்கா நெக்ஸ்ட் மாடல் எனும் நிகழ்ச்சிக்காக பல்வேறு ஆடைகளையும்  உருவாக்கினார். இவர் இ

உங்கள் உரிமைக்காக கல்வி பெறுங்கள்! - மிஸ் மேஜர் கிரேசி!

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் மிஸ் மேஜர் கிரிஃபின் கிரேசி அமெரிக்காவில் பிறந்த மனித உரிமைப் போராளி. ஸ்டோன்வால் கலவரம் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஆர்வமாக கலந்துகொண்டவர். மாற்றுப்பாலினவருக்கான அங்கீகாரத்திற்காக பல்வேறு பேரணிகளை நடத்தியிருக்கிறார். நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று இருக்கிறார். சிகாகோவின் தெற்குப்பகுதியில் 1940 ஆம் ஆண்டு பிறந்தார். பிறப்பால் ஆணாக இருந்தவர், இளம் வயதிலேயே தன்னை பெண்ணாக உணரத்தொடங்கினார். 1950களில் அவரின் பாலினத்தை அறிவிப்பதை நினைத்துப் பாருங்கள். அமெரிக்காவில் தன் கருத்துகளை வெளியிட்டு கடுமையான விமர்சனங்களைச் சந்தித்தார். மேலும் பல சம்பவங்களில் மாற்றுக்கருத்து கொண்டவர்களால் தாக்கவும் பட்டிருக்கிறார். தன் உடலை பெண்ணாக மாற்ற ஹார்மோன் மருந்துகள் தேவை என்பதை உணர்ந்தார். அதற்கு காசு சேர்க்க, விபசாரத்தை நாடினார். திருட்டுகளில் ஈடுபட்டார். பிற சட்டவிரோத செயல்களையும் செய்தார். ஏனெனில் வாழ அப்போது வேறுவழி இருக்கவில்லை.  நாம் நம்மைப் பற்றிய விளக்கங்களைக் கொடுத்துக்கொண்டிருக்க வேண்டாம். நமக்கென இருக்கும் இடத்திற்கு செல்லலாம் என்று தன் மனதில் தோன்றிய கர

மாற்றுப்பாலினத்தவரின் அம்மா இவர் - பிரெண்டா ஹோவர்டு

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள்! பிரெண்டா ஹோவார்டு அமெரிக்காவின் வடக்குப்பகுதியிலுள்ள பிரான்க்ஸ் பகுதியில் பிறந்தார். 1946 ஆம் ஆண்டு யூதக்குடும்பத்தில் பிறந்தார். இவரை இங்கு ஏன் குறிப்பிடுகிறோம் என்றால், நவீன மாற்றுப்பாலினத்தவருக்கான உரிமைகளுக்கு குரல் கொடுத்ததில் பிரெண்டா முக்கியமானவர். பல்வேறு பேரணிகளை அம்மக்களின் உரிமைகளுக்கான நடத்தியுள்ளார். 2005 ஆம் ஆண்டு காலமானார். சியோஸெட் பள்ளியிலும் மன்ஹாட்டன் கம்யூனிட்டி கல்லூரியிலும் படித்தார். நர்சிங் படிப்பில் பட்டம் பெற்றார். அப்போது வியட்நாம் போர் நடைபெற்றது. அதற்கு எதிராக நின்று குரல் கொடுத்தவர், பெண்ணிய இயக்கங்களிலும் பங்கு பெற்றார். ஓரினச்சேர்க்கையாளர்களுக்கான அமைப்புகளிலும், சங்கத்திலும் இடம்பிடித்தார். 1970 ஆம் ஆண்டு மாற்றுப்பாலினத்தவருக்கான முதல் பேரணியை நடத்தி அவர்களுக்கு அமெரிக்க அம்மா வானார். ஆம் மதர் ஆஃப் பிரைடு என்று இவரை அன்றும் இன்றும் நாளையும் உலகம் அழைக்கும். மேடமின் அர்ப்பணிப்பான உழைப்பு அப்படி. பாலின உறவுகள் பற்றி மிக வெளிப்படையாக பேசி இயங்கியவர் புற்றுநோயால் காலமானார். மாற்றுப்பாலினத்தவருக்கான சட்டங்க

கருப்பர் என்று நினைக்க வற்புறுத்தாதீர்கள்! - ஜேம்ஸ் பேல்ட்வின்

படம்
மாற்றுப்பாலின சாதனையாளர்கள் ஜேம்ஸ் பேல்ட்வின்! அமெரிக்காவின் ஹர்லேமில் 1924 ஆம் ஆண்டு பிறந்த பேல்ட்வின் எழுத்தாளர், சமூகச் செயற்பாட்டாளர். ஓவியரான பியுஃபோர்டு டெலனி, கருப்பினத்தில் எதிர்பார்க்காத கலைஞன் என்று இவரைப் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். இவரது படைப்புகள் 1947 ஆம் ஆண்டில் முதன்முறையாக  வெளியாகின. பின்னர், கட்டுரைகள் வெளியாகி கவனம் பெற்றன. பின் நோட்ஸ் ஆஃப் நேட்டிவ் சன் என்ற நாவல் (1950) வெளியானது. ஜியோனிஸ் ரூம் என்ற இரண்டாவது நாவல் இவரை உலகறிய வைத்தது. காரணம் அதிலிருந்த பாலுறவு பற்றிய விஷயங்கள்தான். இதில் ஓரினச்சேர்க்கை விவகாரங்கள் ஏராளம் இருந்த்தால் சர்ச்சைகள் சுழன்றடித்தது. அதனால் நூலை வெளிநாடுகளில்தான் வெளியிட்டார்.  இருபதாம் நூற்றாண்டுகளில் மழை, பனி என சக கவிஞர்கள் எழுதி பிரசவிக்க, கருப்பினத்தவர்களின் வாழ்க்கை பற்றி எழுதி மிரட்டியவர் ஜேம்ஸ் பேல்ட்வின். இன்றும் அக்கால வாழ்க்கை பற்றி அறிய இவரது கட்டுரைகளைப் படித்தால் போதும்.  பேல்ட்வின் பிறக்கும்போது, தாய் தனியாக வாழ்ந்து வந்தார். அவருக்கு மூன்று வயதாகும்போது டேவிட் பேல்ட்வின் என்பவரை மணந

மாற்றுப்பாலினத்தவருக்கு மரியாதை!

இன்று விளம்பரங்கள் என்பவை திரைப்படங்களை விட கனமான விஷயங்களை இரண்டு நிமிடங்களில் சொல்லிவிட்டு சென்றுவிடுகின்றன. இதன் தாக்கத்தை நாம் லீவர், பிஅண்ட் ஜி ஆகிய நிறுவனங்களில் விளம்பரங்களில் பார்க்கலாம். தற்போது ஃபேஸ்புக்கில் பிஅண்ட்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள ஜில்லெட் ஷேவிங் ரேஷர் விளம்பரம் , பொருளை விட எடுத்துக்கொண்ட கான்செஃப்டில் மனம் கவர்கிறது. மாற்றுப்பாலினத்தவராக உள்ள மகனுக்கு தந்தை ஷேவிங் செய்வதைக் கற்றுக்கொடுக்கிறார். இவ்வளவு அழகாக தந்தை மகனுக்கான பாசத்தைக் கூறமுடியுமா என ஆச்சரியப்பட வைக்கிறது இந்த விளம்பரம். பொதுவாக ரேஷர் விளம்பரம் என்றால் ஆண்மையின் மேன்மையாகவே அதனைக் காட்டுவார்கள். பெண்கள் கூட ஷேவ் செய்த ஆண்கள்தான் தங்களின் விருப்பம் என கன்னம் தடவி செல்வார்கள். இப்படித்தானே விளம்பரங்களைப் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த விளம்பரம் மிக யதார்த்தமாக எடுக்கப்பட்டுள்ளது. உண்மையில் பாராட்ட வேண்டியது பிராண்ட் இமேஜூக்காக யோசித்த விளம்பரக்கம்பெனி ஆட்களைத்தான். விளம்பரத்தைக் கான சொடுக்குங்கள். https://www.good.is/articles/gillette-trans-shaving-ad?utm_source=thedailygood&u

மாற்றுப்பாலினத்தவரை ஒடுக்கும் ஜப்பான் அரசு!

படம்
ஜப்பானில் அரசின் சட்டத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுப்பாலினத்தவர் மாற்றுப் பாலினத்தவர்களுக்கு கட்டாய அறுவை சிகிச்சை! - ஜப்பானின் புதிய விதி! நேர்காணல்: கனோ டோய் மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஜப்பானில் மாற்றுப்பாலினத்தவர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது? ஜப்பானில் வாழும் மாற்றுப்பாலினத்தவர்கள் இன்னும் வெளிப்படையாக அடையாளம் காணப்படவில்லை. முறையான அரசு, அங்கீகாரமும் கிடைக்கவில்லை. மேலும் அரசு, மாற்றுப்பாலினத்தவர்களுக்கு எந்த சலுகைகளையும் வழங்க முன்வரவில்லை. அரசின் ஆவணங்களில் தங்களுடைய பாலினத்தை மாற்ற முயல்பவர்களுக்கு பாலின அடையாள குறைபாடு கொண்டவர் என்ற பிரிவில் அவர்களுக்கு விதிகளை மீறிய அறுவைசிகிச்சை செய்யும் ஜப்பான் அரசு முயற்சிக்கிறது. ஜிட் சட்டம் என்ன சொல்கிறது? இச்சட்டம் அமலாகி பதினைந்து ஆண்டுகளாகின்றன.  இதன் மூலம் மாற்றுப்பாலினத்தவர் தன் பாலினத்தை மாற்றிக்கொள்ள முடியும். அதை இச்சட்டம் அனுமதிக்கிறது. அது சரிதானே? என்ன பிரச்னை உள்ளது? பிரச்னை சட்டம் அல்ல; சட்டத்தின் உள்ளே உள்ள கட்டுப்பாடுகள்.  இப்பிரிவில் தற்போது மாற்றுப்பாலினத்தவர்களுக்கு கருத்தடை