மாட்டிறைச்சியின் வரலாறு! - நூல் விமர்சனம்
பீப் - எ குளோபல் ஹிஸ்டரி லோர்னா பியாட்டி ஃபார்னெல் கட்டுரை நூல் மாட்டிறைச்சி என்பது உலகளவில் பல கோடி மக்கள் உண்ணும் உணவு. மக்களில் அதிகம் எதை பயன்படுத்துகிறார்களோ, அதையே அரசியல்வாதிகள் தங்களுடைய ஆயுதங்களாகப் பயன்படுத்துவார்கள். அந்த வகையில் தேசியவாத தன்மையில் மாட்டிறைச்சியும் கூட முக்கிய அடையாளமாக பயன்படுத்தப்பட்டது. இந்த நூலில், மாட்டிறைச்சியின் வரலாறு, அதை ஏன் ஃபீப் என ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள்,இறைச்சியை சமைக்கும் விதம்,இறைச்சியைச் சுற்றிச் சுழலும் அரசியல், கோழி இறைச்சி கடைகள், மாட்டிறைச்சியை வைத்துஎப்படி விளம்பரம்செய்து கல்லா கட்டின என ஏகத்துக்கும் ஏராளமான தகவல்கள் உள்ளன. மாட்டிறைச்சி பற்றிய ஓவியங்கள், இலக்கியங்கள் என நிறைய தகவல்களை ஆராய்ச்சி செய்து எழுத்தாளர் எழுதியிருக்கிறார். மாட்டிறைச்சி என்பது கால்நடைகள் அதிகம் வளர்க்கும்நாடுகளில் எப்போதுமே இருக்கிற ஒன்று. நியூசிலாந்தில் மாட்டிறைச்சி வளர்ப்பு பற்றி எழுதியுள்ளது சிறப்பானது. பொய்யான போலியான சுயநல அரசியலுக்குள் மாடுகளை இழுத்துவிட்டு மக்களை ஏமாற்றுவது இந்தியாவில் சாத்தியமாகிறது. உலக நாடுகளில் அப்படி தந்திரங்கள் ...