இடுகைகள்

அகராதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

2024 ஆம் ஆண்டில் புழக்கத்தில் உள்ள காதல் சொற்கள், அதற்கான அர்த்தம்!

படம்
  பொதுவாக ஆண்டுதோறும் தமிழ் வார இதழ்கள் காதலர் தினத்தை விரும்புகிறார்களோ வெறுக்கிறார்களோ அதெல்லாம் அதன் எடிட்டர் சம்பந்தப்பட்ட விஷயம், ஆனால் மறக்காமல் எதையாவது எழுதி அதை விற்று காசு பார்த்துவிடுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு ஆனந்த விகடன் வார இதழ் எப்போதும் போல காதல் ஸ்பெஷல் எல்லாம் செய்தார்கள் என்றாலும் அதில் எந்த புது அம்சமுமில்லை. குமுதம் வார இதழோ, காதலர் தினத்தை ஒரு வாரம் தள்ளி வைத்து அதற்கான ஸ்பெஷல் இதழை வெளியிட்டது. இந்த நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் இளமை புதுமை எதிலும் முதன்மை என்ற அதன் கேப்ஷன் வேறு நினைவுக்கு வந்து தொலைக்கிறது. எடிட்டர் சஞ்சீவிகுமார் அதை பார்த்துக்கொள்வார். நமக்கு எதற்கு வம்பு? காதல் உறவில் புழங்கும் சொற்கள், வார்த்தைகள், அதன் பொருள் எல்லாம் தெரிந்துகொண்டால் வாழ்க்கை சிறக்கும். இன்றைய காதலை பெரும்பாலும் இடைமுகமாக இருந்து நடத்தி வைப்பது சமூக வலைதளங்கள்தான். டிண்டர், பம்பிள் என்ற ஆப்களும் இன்றைக்கு பலரும் பயன்படுத்துகிறார்கள்.  GHOSTING ஒருவர் காதல், நட்பு என உறவுகளில் இருப்பார். திடீரென பார்த்தால் அவர் எங்கே போனார் என்றே யாருக்கும் தெரியாது. சமூக வலைத்தள கணக்கு,

புவியியல் சார்ந்த அருஞ்சொற்கள்! - வரைபடம், மின்காந்தப்புலம், பூமியின் காந்தப்புல ஆய்வு, வேளாண்மை ஆய்வு

படம்
அருஞ்சொற்கள்!  ஏரோலாஜிகல் டயகிராம் (Aerological Diagram) பாறைகளின் தன்மையை அறிய உதவும் வரைபடம். இதில் வெப்பநிலை, அழுத்தம். ஈரப்பதம் ஆகிய தகவல்களை அறியலாம்.  ஏரோமேக்னடிக் சர்வே (Aeromagnetic Survey) பூமியின் மின்காந்தப்புலம் பற்றிய ஆய்வு. விமானங்களில் இணைக்கப்பட்ட மேக்னட்டோமீட்டர் (Magnetometer) மூலம் ஆய்வு நடைபெறுகிறது.  ஏயோலியானைட் (Aeolianite) காற்றால் அடித்துக்கொண்டு வரப்படும் மணல் துகள்களால் உருவாகும் பாறைகள் .  ஏஎஃப்எம்ஏஜி இஎம் அமைப்பு (AFMAG EM) இயற்கை நிகழ்வான புயல், மழையின் பிறகு பூமியின் இயற்கையான மின்காந்தப் புலத்தில் ஏற்பட்ட மாறுதல்களை அளவிடும் முறை.  அக்ரோமெட்ராலஜி (Agrometeorology) வேளாண்மைக்கு ஏற்ற தன்மையில் வானிலை மற்றும் நிலத்தின் அடுக்குகள் உள்ளதா என ஆராயும் முறை. 

அசத்தும் ஜப்பான் மலையாள அகராதி! - அரசு அதிகாரி சாதனை

படம்
Add caption பெருமை பேசும் உழைப்பு -  ஜப்பான் மலையாள அகராதி கொச்சியைச் சேர்ந்த கேபிபி நம்பியார், அரிய சாதனை ஒன்றை செய்துள்ளார். ஏறத்தாழ 1500 பக்கங்களுக்கு ஜப்பான் மலையாள அகராதியை தொகுத்துள்ளார். ஆறு லட்சம் வார்த்தைகளைக் கொண்ட இந்த அகராதி, பதினைந்து ஆண்டுகள் உழைப்பில் தயாரானது. இதிலுள்ள மலையாள வார்த்தைகளின் எண்ணிக்கை 53000. அனைத்து வார்த்தைகளையும் கையில் எழுதியிருக்கிறார் மனிதர். மொத்தம் கையெழுத்தி பிரதியாக 3 ஆயிரம் பக்கங்கள் வந்திருக்கிறது. எழுதியவுடன் அதனைப் பதிப்பிக்க பல்வேறு பதிப்பகங்களை நாடியுள்ளார். ஆனால் ஜப்பான் எழுத்துரு யாரிடமும் இல்லை என்பதால் உடனே நிராகரித்துள்ளனர். உடனே ஜப்பானின் டோக்கியோவுக்கு சென்றவர், டோக்கியோ அயல் உறவுகள் பல்கலைக்கழகத்தின் உதவியை நாடினார். அங்கு மொழி சார்ந்த மென்பொருளை பேராசிரியர்கள் ஜூன் தகாசிமா, மகாடோ மினேகிஷி ஆகியோர் உருவாக்கி உதவினர். அப்போதுதான் நம்பியார் செய்த தவறு ஒன்று தெரிய வந்திருக்கிறது. ஜப்பான் - மலையாள அகராதிக்கு அவர் பயன்படுத்திய ஜப்பான் அகராதி அறுபது ஆண்டுகள் பழமையானது. உடனே தினசரி ஏழு மணிநேரம் உழைத்து, அக