இடுகைகள்

ஒரு துளி மணலில் ஓர் உலகு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலங்கள் கடந்த பின்பும் காயங்கள் ஆறவில்லை. வேதனை தீரவில்லை

படம்
  காலங்கள் கடந்த பின்பும் காயங்கள் ஆறவில்லை. வேதனை தீரவில்லை கடந்த சனிக்கிழமை இரவு எனது போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. ஆங்கிலச்செய்தியை தமிழ்படுத்தி கூறுகிறேன். "அன்பு, தயவு செய்து உதவுங்கள் ஃப்ரீதமிழ் த.சீனிவாசனின் தொடர்பு எண்ணைக் கொடுங்கள்" என செய்தியில் கூறப்பட்டு இருந்தது. ஆங்கிலச்செய்தி அனுப்பும் அளவுக்கு நண்பர்கள் யாருமில்லையே என்று பார்த்தேன். அனுப்பியவர் பெயர் ராமமூர்த்தி.  ஆம். அவரேதான். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் கடித நூல் பற்றிய புகாரை கொடுத்த முன்னாள் நண்பர்தான். இந்த செய்தி வந்ததும் எனக்குத் தோன்றியது. நூல் புகாருக்கு பிறகு அவர் என்னுடன் தொலைபேசியில் பேசவே இல்லை. திடீரென சில மாதங்களுக்கு முன்னர்தான் அவரே தொடர்பு கொண்டு பேசினார். பிறகு பேசுவதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. திடீரென இப்படியொரு குறுஞ்செய்தி என்றதும் எனக்கு மனதில் தோன்றியது. வேண்டுமென்றே ஏதோ பிரச்னையில் நம்மை இழுக்கிறாரோ என்று....  உள்ளுணர்வு சொன்னது சரிதான்.  இரண்டு பக்க கடிதம் ஒன்றை பச்சை மசியில் கையெழுத்திட்டு அனுப்பியிருந்தார் முன்னாள் நண்பர் திரு. ராமமூர்த்தி. அதாவது, விஷயம் என்னவென்றால

மனிதர்கள் இருக்கும் இடத்தில் அரசியல் இல்லாமலா இருக்கும்? ஒ ரு துளி மணலில் ஓர் உலகு!

இனிய தோழர் ராமுவுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? கடிதம் எழுதுவதற்கு சற்று நிதானமான நேரம் கிடைக்கவில்லை . அதனால்தான் அடுத்தடுத்த கடிதங்களுக்கு இடையில் ஏகப்பட்ட நாட்கள் இடைவெளி . பொய் அல்ல உண்மை . நாங்கள் அடுத்து வரும் வாரம் வேறு அலுவலகத்திற்கு மாறுகிறோம் . ராயப்பேட்டை அஜந்தாவில் இனி ஜாகை . இங்குள்ள வயதான ஆட்களுக்கு இசைந்து சொல்ல முடிவது கடினமாக உள்ளது . இங்குள்ள சீனியர்களுக்கு இடமாற்றல் முடிவு பிடிக்கவில்லை . அவர்களுடைய நெடுநாள் நண்பர்கள் பழைய அலுவலகத்தில் இருக்கிறார்கள் . அங்கு போய் என்ன செய்வத ? என விவாதித்து வருகிறார்கள் . நிர்வாகம் எடுக்கும் முடிவு பத்திரிகையின் எதிர்காலத்திற்காகவே என்று நம்புகிறேன் . எனக்கு வேலை சார்ந்துதான் அனைத்து உறவுகளுமே என்று நம்புகிறேன் . அதைத்தாண்டிய உறவுகளை ஏற்படுத்திக்கொள்ள பெரியளவு முயற்சிகளை நான் எடுத்துக்கொள்ளவில்லை . அது அப்படியே இயல்பாக நடப்பதுதான் . வலிந்து எதைச் செய்தாலும் எனக்கு ஒத்துவருவதில்லை . இந்த வார திரைப்படமாக நான் செக்ஸ் அண்ட் ஜென் என்ற படத்தைப் பார்த்தேன் . எரோடிக் வகையைச் சேர்ந்த படம் இது . அஜால் குஜலாக இரு

வாழ்க்கையை நடத்திச்செல்வதற்கான கல்வி நமக்கு கிடைப்பதில்லை! ஒரு துளி மணலில் ஓர் உலகு!

அன்புள்ள நண்பர் ராமுவுக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் . இரண்டே நாட்களில் பொங்கல் . டிக்கெட் , புக்கிங் என எங்கள் இதழுக்கான ஆசிரியர் குழு முழுவதும் ஊருக்கு கிளம்ப ஆயத்தமாகிவிட்டது . நீங்கள் பெரும் பணத்தை பங்குச்சந்தையில் விட்டது எனக்கு பெரிய அதிர்ச்சி . உங்களது புதிய முயற்சி , பரிசோதனைகளை நான் எப்போதும் ஆதரித்து வந்திருக்கிறேன் . நீங்கள் இதுபற்றி என்னிடம் ஆலோசனையாவது கேட்டிருக்கலாம் . சரி எதுவாக இருந்தாலும் உங்கள் அம்மாவிடம் இதுபற்றி விளக்கினீர்களா ? துறைசார்ந்தவர்களிடம் இதுபற்றி இன்னும் தீர விசாரித்திருக்கலாம் . இனி நான் என்ன சொன்னாலும பிரயோஜனமில்லை . காலம் கைமீறிவிட்டது . பணத்தை திரும்ப பெறுவது உங்களது சாமர்த்தியத்தில்தான் உள்ளது . நண்பர் கார்ட்டூன் கதிரின் வீட்டுக்கு இன்று சென்றேன் . தி இந்து தமிழில் வேலை கிடைத்திருக்கிறது . எனவே ஒண்டு குடித்தனவீடு , பொது கழிப்பறை அவதியிலிருந்து விடுதலையாகி இருக்கிறார் . புதிய வீடு கிடைத்த கையோடு அவருக்கு பெண் பார்த்திருக்கிறார்கள் . விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார் . அவருக்கு கல்யாணம் செய்த கையோடு அவரது பெற்

நிறுவனங்களை வளர்ப்பதை விட விற்பதற்கே முயல்கிறார்கள்! - ஒரு துளி மணலில் ஓர் உலகு!

படம்
அன்புத்தோழர் ராமமூர்த்திக்கு , வணக்கம் . நலமாக இருக்கிறீர்களா ? கடந்த வாரமே நான் இந்த கடிதத்தை எழுதியிருக்கவேண்டும் . ஆனால் இடையில் வந்த கல்யாணம் ஒன்று சிக்கலை ஏற்படுத்திவிட்டது . இஸ்லாமிய நண்பரின் வீட்டுக்கு கல்யாணச் சாப்பாடு வெறியில் போய்விட்டேன் . பிரியாணியை அள்ளி திணித்த வேகத்தில் செரிமானத்தின்போது வயிறு விண்டோஸ் போல ஷட்டவுண் ஆகிவிட்டது . வயிறைக் காலி செய்ய நேரமாகிவிட்டது . அலுவலகத்தில் கடிதம் எழுதிவிடலாம்தான் . ஆனால் வாட்ஸ்அப் காலத்தில் கடிதமா என அதிசயப் பிறவி போல பார்க்கிறார்கள் . என்னடா பிரச்னை உங்களுக்கு என வாய்க்கு வந்த விஷயங்களைப் பேசினால் சண்டை வந்துவிடும் . இரவில் மட்டும்தான் சொந்த வேலைகளை , எழுத்து வேலைகளைப் பார்க்கிறேன் . இந்த ஆண்டு தீபாவளி மலரில் எங்கள் ஆசிரியர் கே . என் . சிவராமன் எதுவுமே எழுதவில்லை . எனக்கு இதில் பெரும் வருத்தம் . அவருக்கு எழுதுவதில் இப்போதெல்லாம் விருப்பமில்லை . அனேகமாக வேலைகள் அழுத்தம் காரணமாக இருக்கலாம் . தினசரி ஆறு மணிக்கு மேல் அவரை இருக்கையில் பார்ப்பது கடினம் . நாம் உட்கார்ந்திருந்தால் கோபம் வந்துவிடும் . மெல்ல அதட்டுவ