இடுகைகள்

டயானா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 100- 2024 ஆண்டுக்கான செல்வாக்கு பெற்ற மனிதர்கள் - போராளிகள்

படம்
      டைம் 100 செல்வாக்கு பெற்ற மனிதர்கள் -இறுதிப்பகுதி ரஷ்யாவில் ஒலிக்கும் ஜனநாயக குரல் - யூலியா நாவல்நாயா yulia navalnaya கடந்த பிப்ரவரி மாதம், ஜெர்மனியின் ம்யூனிச் நகரில் பாதுகாப்பு தொடர்பான மாநாடு நடைபெற்றது. அதில் நான் பங்கேற்றேன். சர்வாதிகாரத்திற்கு எதிரான ஜனநாயக மதிப்புகள் பற்றி கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக யூலியா மேடையில் தோன்றி பேசினார். சில மணி நேரங்களுக்கு முன்னர்தான், அவரது கணவரும் எதிர்க்கட்சி தலைவருமான அலெக்ஸ் நாவல்னி சிறையில் இறந்துபோயிருந்தார். அந்த செய்தியைக் கேட்டும் கூட மனம் தளராமல் தனது கணவரின் செயல்பாடுகளை தன்னுடையதாக அவர் எடுத்துக்கொண்டுவிட்டார். அதனால்தான் நம் கண்முன்னே அவர் நிற்கிறார். என்னைப் போன்ற நிலையில் நாவல்னியும் இருந்தால், அவரும் இதே முடிவை எடுத்திருப்பார் என்று யூலியா கூறினார். மேடைப்பேச்சுக்குப் பிறகு நாங்கள் அவரைச் சந்தித்து அவரது குழந்தைகள், குடும்பம் பற்றி பேசி பாதுகாப்பை உறுதிசெய்தோம். யூலியா அவரது கணவர் ஜனநாயக ரஷ்யாவுக்காக, ஊழல் இல்லாத நாட்டிற்காக போராடி வந்த பாதையை தேர்ந்தெடுத்துள்ளார். இந்த வகையில் அவ...