இடுகைகள்

ஆத்மாநிர்பார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கிழிந்து தொங்கும் சுயசார்பு இந்தியா திட்டம்!- ஆக்சிஜன் கொடுப்பது எப்படி?

படம்
                ஆத்மா நிர்பாரத மிஷன் கடந்த ஆண்டு மே 12 இல் பிரதமர் மோடி , ஐந்து அம்சங்களைச் சொல்லி ஆத்மாநிர்பாரத திட்டத்தை அறிமுகப்படுத்தினார் . உலகம் நமக்கு கற்றுத்தந்துள்ள பாடங்களில் சுயசார்பும் ஒன்று . இதனை ஈஷாபந்தா என்ற நூலில் கூட கூறியிருக்கிறார்கள் . தன்னிறைவு பெற்ற இந்தியா என்பது அதுதான் என பேசினார் . அதற்குப்பிறகு மத்திய அரசு அறிவிக்கும் நிதிசார்ந்த திட்டங்களுக்கு சுயசார்பு , தன்னிறைவு ஆகிய வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டன . அக்டோபர் , நவம்பரில் மானியத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன . பிறகு கொரோனா பாதிப்பு ஒருநாளுக்கு மூன்றரை லட்சம் பேரை பாதித்தவுடனே ஆத்மாநிர்பார் கோஷங்கள் தடுமாறத் தொடங்கின . உடனே இந்திய அரசு தனது சொந்த நாட்டு பெருமைகளை ஒரம்கட்டிவிட்டு அமெரிக்க வழங்கிய நூறு மில்லியன் டாலர்கள் மதிப்பிலான உதவிகளைப் பெற்றது . இதில் ஆயிரம் சிலிண்டர்கள் , 15 மில்லியன் என் 15 மாஸ்குகள் , ஒரு மில்லியன் சோதனைக் கருவிகள் உள்ளடக்கம் . இருபது முதல் முப்பது மில்லியன் தடுப்பூசிகள் ஆஸ்ட்ராஜெனகாவும் அடங்கும் . இதோடு சீனாவும் இந்தியாவுக்கு பல்வேறு உதவிகளை வழங்க முன்வந்தது . எல்லை

கிராமத்திலுள்ளவர்களை திறமைசாலிகளாக உருவாக்கி வருகிறோம்! - ஶ்ரீதர் வேம்பு, ஜோகோ

படம்
            ஶ்ரீதர்வேம்பு ஜோகோ கிராமத்தில் நிறுவனத்தை தொடங்கி நடத்தும்போது எது சரியாக இருக்கும் , எது வேலைக்கு ஆகாது என நினைக்கிறீர்கள் ? பைபர் ஆப்டிக் வயர்கள் இணையத்தை இணைப்பதால் வீடியோ தரம் சிறப்பாக உள்ளது . அதேசமயம் ஆங்கிலம் சிறப்பாக பேசும் ஆட்களை கிராமத்தில் தேடிப்பிடிப்பது கடினமாக உள்ளது . நிறைய ஜெர்மன் , ஜப்பானிய நிறுவனங்கள் எப்படி ஆங்கிலம் இல்லாமல் கூட உலக சந்தையை அணுகுகிறார்களோ அதேவழியில் நாமும் இந்திய தொழில்வளத்தை உயர்த்தவேண்டும் .    ஸ்டார்ட்அப் என்றாலே நிறைய போட்டிகள் உள்ளன . ஒப்பீடுகள் வருகின்றன . எப்படி சமாளிக்கிறீர்கள் ? நான் நேற்று கூட என் கிராமத்தினருடன் சேர்ந்து 12 கி . மீ . தூரம் நடந்து சென்றேன் . இப்போது என்னை பில்கேட்ஸூடன் ஒப்பிடுவீர்களா ? இந்த எலிப்பந்தயம் மீது எனக்கு விருப்பமில்லை . உங்களுக்கு மிகப்பெரும் ஆதாயம் தரும் விஷயம் இதிலிருந்து நீங்கள் விலகி வாழ்வதுதான் . உங்களுக்கு அரசியலில் சேரும் எண்ணம் உண்டா ? நான் அடுத்த பத்தாண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடவேண்டும் என்ற நினைக்கவில்லை . ஜோகோவில் செய்யவேண்டிய பணிகள் நிறைய உள்ளன . இதற