இடுகைகள்

லாஜிஸ்டிக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

லாஜிஸ்டிக்ஸ் வணிகம் எப்படி செயல்படுகிறது என அறிய வாசிக்க வேண்டிய நூல்!

படம்
  லாஜிஸ்டிக்ஸ் பா பிரபாகரன் கிழக்கு பதிப்பகம்   லாஜிஸ்டிக் எனும் ஆங்கிலச் சொல்லுக்கு தமிழியில் பெயர்ச்சியல் என்று பெயர். ஒரு சரக்கை கொண்டு வந்து கொடுப்பதாக நிறுவனம் கூறினால், அதை அவர்கள் கப்பல் வழியாக, ரயில் வழியாக எந்த முறையில் அதை பொதிவு செய்து கொண்டு வந்து வரிகளைக் கட்டி ஒப்படைக்கிறார்கள், பணம் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதே பெயர்ச்சியியல். லாஜிஸ்டிக், சப்ளை செயின் என இரண்டுக்கும் உள்ள வேறுபாடுகளை விளக்குவது தொடங்கி கப்பல், ரயில், விமானம் என மூன்று வகையிலும் பொருட்களை எப்படி கொண்டு வந்து கொடுக்கிறார்கள் என நூலில் விலாவரியாக விவரித்துள்ளார். இந்த நூலை ஒருவர் வாசிப்பதன் வழியாக பெயர்ச்சியியல் என்றால் என்ன என தெளிவாக புரிந்துகொள்ள முடியும். இதற்கு காரணம், நூலை எழுதியவரே பெயர்ச்சியியல் வணிகத்தை செய்வது வருவதுதான். இதனால் அவர் தான் சந்தித்த பல்வேறு அனுபவங்களை கூறும்போது எளிதாக அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. குறிப்பாக கூறவேண்டுமெனில் மாங்கன்றுகளை ஆப்பிரிக்க நாட்டுக்கு கொண்டு செல்லும் பணியைக் கூறலாம். அதை எப்படி கொண்டு செல்வது என்பதை அனுப்புபவர் கூறுவதில்லை. பெயர்ச்சியியல் நிறுவ