இடுகைகள்

பெரியார் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சாதி அரசியல் செய்து மக்களைப் பிரிப்பது பாமகவும், பாஜகவும்தான்! - தொல்.திருமாவளவன்

படம்
                தொல் . திருமாவளவன் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் சாதி அரசியல் தமிழ்நாட்டை பிரித்துவிடும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா ? ஆம் . நாங்கள் சாதி அரசியலுக்கு எதிரானவர்கள்தான் . சாதி அரசியல் செய்யும் கட்சிகளான பாமக , பாஜக ஆகியவற்றை இதற்குள் உள்ளடங்கியவையாக குறிப்பிடுகிறோம் . இக்கட்சிகள் மிக ஆபத்தானவை . பாஜக கட்சி , பிற்படுத்தப்பட்டவர்கள் ., தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்து வருகிறது . வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? அவர்கள் வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து இப்படி கோரிக்கையை எழுப்புகிறார்கள் . இப்படி கோரிக்கையை வைத்து கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து தாங்கள் நினைத்த சீட்டுகளை பெற நினைக்கிறார்கள் . இந்த தந்திரமான நடவடிக்கை ஏறத்தாழ நடைமுறைக்கு ஏற்ற கோரிக்கையல்ல . இது மிரட்டல் அரசியலாக உள்ளது . அவர்கள் கோரிக்கைக்கு நாங்கள் எதிரியல்ல . ஆனால் அவர்கள் வன்னியர்களை முதன்மைப்படுத்துவதாக கூறுவது போலியானது . நீங்கள் ஈழத்தில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி கு

பெரியார் சொன்னதை அன்றே மக்கள் ஏற்கவில்லை!

படம்
ஹரிஹரன் ராஜா சர்மா என்றால் பலருக்கும் புரியாது . ஹெச் . ராஜா என்றால் அனைவரும் புன்னகை பூப்பார்கள் . அந்தளவு பா . ஜ . கவின் புகழை தமிழகத்தில் பரப்ப பாடுபட்டு வருபவர் இவர் . பெரியாரை அவதூறு செய்வது , உயர்நீதிமன்றத்தை ஏக வசனத்தில் திட்டுவது என எப்போதும் சர்ச்சையின் மையத்தில் இருப்பது இவரது பாணி . அவரிடம் பேசினோம் . உள்ளாட்சித் தேர்தலில் பா . ஜ . க சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறவில்லையே . தமிழகத்தில் ஏன் உங்கள் கட்சி இன்னும் தடுமாறி வருகிறது ? இது கற்பனையான வாதம் . நாங்கள் சில இடங்களில் மட்டும்தான் போட்டியிட்டோம் . நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் பெற்றுள்ள வாக்குகளைப் பார்த்தாலே தெரியும் . நாங்கள் மெல்ல முன்னேறி வருகிறோம் . தமிழகத்தில் பா . ஜ . கவிற்கு எதிராக இருக்கும் மனநிலையைப் பற்றி .... அது உண்மை அல்ல . நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் அப்படி ஒரு மனநிலை இருப்பதாக தோற்றத்தை உருவாக்கினார்கள் . இது மாறிவிடும் தன்மை கொண்டதுதான் . பெரியார் இறந்து நாற்பது ஆண்டுகளுக்கும் பிறகு அவரைச்சுற்றி அரசியல் அமைந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் ?

ரஜினியை பின்னாலிருந்து இயக்குகிறார்கள்! - கே.வீரமணி

படம்
சாதி பிரிவினைகளை ஆதரிக்க ராமாயணத்தை அடையாளம் காட்டுகிறார்கள்! பிரிவினையின் லாபம் அடையும் கட்சிகள் அதற்காக நவீன இந்திய சிற்பிகளை அவமானப்படுத்துவதும், அதற்காக பாடநூல்களை கூட மாற்றுவதும் நடந்து வருகிறது. இப்போது கூடுதலாக, பிரபலமாக உள்ள நபர்களை தூண்டிவிட்டு ஒட்டுமொத்த மக்களையும் பிரிவினைப்படுத்த மதவாத கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இதற்கான செயல்பாடுகளில் பெரியார் சிலைகள் உடைப்பு, அவரது கருத்துகள் திரிக்கப்படுவது என நடந்து வருகிறது. பிரபல நடிகரான ரஜினிகாந்த் துக்ளக் வார இதழில் பெரியார் பற்றி பேசிய கருத்து சர்ச்சையானது. ரஜினி தவறான தகவல்களை ஊடகங்களுக்கு தருகிறார் என்று இதற்கு பதில் சொல்லுகிறார்   திராவிடர் கழக பொதுச்செயலாளரான கி.வீரமணி. மக்களிடையே பிரிவினை விதைக்கும் பிளவு செயல்பாடுகள் தொடரும் என்று நினைக்கிறீர்களா? எனக்கு ஜோதிடம் தெரியாது. இதுபோன்ற யூக கேள்விகளுக்கு என்னிடம் பதில் கிடையாது. ரஜினி மறக்கப்பட வேண்டிய சம்பவம் என்று கூறியதற்காக பெரியாரிஸ்டுகள் மன்னிப்பு கேட்கவேண்டுமென நினைக்கிறீர்களா? இல்லை. அவசியம் கிடையாது. ரஜினி போன்ற நபர்கள் இப்ப