சாதி அரசியல் செய்து மக்களைப் பிரிப்பது பாமகவும், பாஜகவும்தான்! - தொல்.திருமாவளவன்

 

 

 

 

 

Elections 2019: VCK's Thol Thirumavalavan trailing in ...

 

 

 

தொல்.திருமாவளவன்

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர்


சாதி அரசியல் தமிழ்நாட்டை பிரித்துவிடும் என்பதை உணர்ந்திருக்கிறீர்களா?


ஆம். நாங்கள் சாதி அரசியலுக்கு எதிரானவர்கள்தான். சாதி அரசியல் செய்யும் கட்சிகளான பாமக, பாஜக ஆகியவற்றை இதற்குள் உள்ளடங்கியவையாக குறிப்பிடுகிறோம். இக்கட்சிகள் மிக ஆபத்தானவை. பாஜக கட்சி, பிற்படுத்தப்பட்டவர்கள்., தாழ்த்தப்பட்டவர்கள் ஆகியோருக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்தும் செயல்பாடுகளை செய்து வருகிறது.


வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


அவர்கள் வன்னியர் வாக்கு வங்கியை குறிவைத்து இப்படி கோரிக்கையை எழுப்புகிறார்கள். இப்படி கோரிக்கையை வைத்து கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு நெருக்கடி கொடுத்து தாங்கள் நினைத்த சீட்டுகளை பெற நினைக்கிறார்கள். இந்த தந்திரமான நடவடிக்கை ஏறத்தாழ நடைமுறைக்கு ஏற்ற கோரிக்கையல்ல. இது மிரட்டல் அரசியலாக உள்ளது. அவர்கள் கோரிக்கைக்கு நாங்கள் எதிரியல்ல. ஆனால் அவர்கள் வன்னியர்களை முதன்மைப்படுத்துவதாக கூறுவது போலியானது.


நீங்கள் ஈழத்தில் நடைபெற்ற போர்க்குற்றம் பற்றி குரல் எழுப்பினீர்கள். அவை இன்று அமைதியாகிவிட்டன?


உண்மைதான். அதைப்பற்றி அரசு பேசாவிட்டாலும் நாங்கள் அதனை எங்கள் செயல்பாட்டில் முக்கியமானதாகவே கருதுகிறோம்.

1982ஆம் ஆண்டு கட்சி தொடங்கியது முதல் கட்சி வெற்றிகரமாக வாக்குகளைப் பெற்று வளர்ந்து வருகிறதா?


நாங்கள் அரசியலில் தவிர்க்கமுடியாத கட்சி. நாங்கள் இன்னும் தனியாக போட்டியிடவில்லை என்பது உண்மை. நாங்கள் தலித்துகள், பழங்குடியினரில் வாக்குகளைப் பெற்று வருகிறோம். 2009ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நாங்கள் திமுக கூட்டணியில் நின்றோம். அதில் இலங்கை பிரச்னை காணமாக பெரும் சரிவு ஏற்பட்டது. பிற கட்சிகள் அனைத்தும் அதிமுகவின் பின்னே அணிவகுத்தன.

இதில் எங்கள் பங்களிப்பு முக்கியமானது. 1999இல் நாங்கள் மூப்பனாரின் பின்னே இருந்தோம். அதில் நான் சிதம்பரம் தொகுதியில் நின்று 1.25லட்சம் வாக்குகளைப் பெற்றேன். 2001ஆம் ஆண்டு நாங்கள் திமுகவுடன் இணைந்து தேர்தலைச் சந்தித்தோம். இக்கூட்டணி ஐந்து இடங்களை ஒன்பது தொகுதிகளில் பெற்றது. 2004இல் நாங்கள் தனிக்கட்சிகள் அனைத்தும் ஒன்றாக நின்று போட்டியிட்டோம். அதில் கூட விடுதலை சிறுத்தைகள் மட்டுமே அதிக வாக்குகளைப் பெற்றது. 2011ஆம் ஆண்டு தேர்தலில் பாமகவும் நாங்களும் ஒரே அணியில் இருந்தோம். அந்த தேர்தலில் நாங்கள் சரியான முடிவைப் பெறவில்லை. ஆனால் பாமக கட்சி தலைவர், அவர்கள் மூ்ன்று இடங்களை வென்றதற்கு தலித்துகள் வாக்குகள் காரணம் என்று கூறினார்.


evilboydavid (David Livingston) | DeviantArt

உங்கள் கட்சிக்கு எதிர்காலம் உண்டு என நினைக்கிறீர்களா?


நாங்கள் தேர்தல் கால செயல்பாடுகள் கடந்து சமூக பிரச்னைகளுக்கும் போராடி வருகிறோம். பெண்கள், சாதி, தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரான புறக்கணிப்பு ஆகியவற்றுக்கு நீதி கேட்டு வருகிறோம். நாங்கள்ள் இந்துத்துவா சக்திகளுக்கு எதிராக போரிட்டு வருகிறோம். நாங்கள் எங்கள் கட்சியை கொள்கை சார்ந்து வடிவமைத்துள்ளோம்.


டைம்ஸ் ஆப் இந்தியா

ஜெயாமேனன்



 

கருத்துகள்