வெறுப்பு பேச்சுகளை ஊக்கப்படுத்தும் சமூக வலைத்தளங்கள்! - வணிகத்திற்காக எல்லைமீறும் கார்ப்பரேட் நிறுவனங்கள் சந்திக்கும் வழக்குகள்!

 

 

 

 

 Shield, Prohibitory, Note, Ban, Sign, Ranting, Argue

 


சமூக வலைத்தளங்களில் அதிகரிக்கும் வெறுப்புவாதம்!



வெறுப்பு பேச்சுகளை ஊக்குவிப்பதாக எழுந்த புகார்களின் பேரில் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய சமூகவலைத்தள நிறுவனங்கள் பல்வேறு வழக்குகளை சந்தித்து வருகின்றன.


கடந்த ஆண்டு நவம்பர் 17 அன்று அமெரிக்க செனட் கமிட்டி முன் ஃபேஸ்புக் நிறுவனர் மா்ர்க், டிவிட்டர் இயக்குநர் ஜேக் டோர்ஸி ஆகியோர் ஆஜராயினர். அவர்களது நிறுவனத்தில் பகிரப்படும் வெறுப்புவாத செய்திகள் பற்றிய விசாரணையை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தினர். பேச்சு சுதந்திரம் அல்லது வெறுப்பு வாதங்கள் என்று பகிரப்படும் செய்திகளால் நாட்டில் நடைபெறும் பதற்றமான நிகழ்ச்சிகள் காரணமாகவே மேற்கண்ட நிறுவனங்கள் மீது விசாரணை நடைபெற்றது.


அமெரிக்காவில் மட்டுமல்ல உலக நாடுகளிலும் சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டால் அரசியல் நிலை சீரற்றதாகி வருகின்றன. இந்தியாவில் நவம்பர் 21 அன்று கேரள அரசு, 118 ஏ என்ற சமூகவலைத்தள பதிவுகளுக்கா ன தடுப்புச்சட்டத்தை அமல்படுத்தியது. பெண்கள், குழந்தைகள் இணையத்தில் கேலி, கிண்டல் செய்யப்படுவதைத் தடுக்கும் சட்டம் என மாநில அரசு கூறியது. ஆனால் ஆளும்கட்சி உறுப்பினர்களே கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என விமர்சிக்க இச்சட்டம் உடனே திரும்ப பெறப்பட்டது. உணர்ச்சிமயமாக பகிரப்படும் பதிவுகளை சமூக வலைத்தள நிறுவனங்களின் அல்காரிதம் அதிகம் பகிரும்படி செய்கின்றன என்பது பலரின் குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பிட்ட அரசியல் கட்சிகளின் கொள்கை, கருத்தியல் சார்ந்து சமூக வலைத்தளங்கள் செயல்படுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் புகார்களை முன்வைக்கின்றனர். இதுபற்றி இந்தியாவின் மக்களவையிலும் விவாதம் எழுந்தது.


2020ஆம் ஆண்டில் சமூக வலைத்தளங்களில் பகிரும் பதிவுகளைக் கட்டுப்படுத்த அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய வல்லரது நாடுகள் புதிய சட்டங்களை உருவாக்கியும், திருத்தங்களை உருவாக்கியும் உள்ளன. இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் கலவரங்களை தூண்டியதாக எழுந்த புகாரின் பேரில் ஃபேஸ்புக்கின் கொள்கை குழு தலைவர் அங்கில் தாஸ் பதவி விலகினார். அமெரிக்காவின் ஈக்குவாலிட்டி லேப்ஸ் நிறுவனம் செய்த ஆய்வில், ஃபேஸ்புக்கி்ல வெறுப்பு வாத பகிர்வுகள் நீக்கப்படாமல் 93 சதவீதம் உள்ளதாக கூறியுள்ளது. கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்து இன்றி சட்டங்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களை உள்ளடங்குமாறு மத்திய, மாநில அரசுகள் முடிவெடுக்கவேண்டும்.


தகவல்


ET magazine


Economic times magazine venkat ananth


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்