சுற்றிலும் உறவுகள், நடுவில் நாம் இருக்கவேண்டும் என்று நினைப்பவனால் அப்படி வாழ முடிந்ததா? - நெலா டிக்கெட் - ரவி தேஜா
நெலா டிக்கெட்
சுட்டு ஜனம் மத்தியில் மனம் என வாழத் தலைப்படும் நாயகன். அவன் தந்தை போல மதித்து பாசம் காட்டிய ஆதரவற்றோர் இல்லப்புரவலர் திடீரென இறந்துபோகிறார். அந்த இறப்பிற்கு காரணமானவர்களை அவர் எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படம்.
ரவிதேஜாவுக்காகத்தான் படம் பார்க்கவேண்டும். வேறு ஆட்கள் யாரும் நடிக்க வாய்ப்பில்லை. கதையில் நடிக்கவும் ஏதுமில்லை. மாளவிகா சர்மாவுக்கு படத்தில் பாட்டுக்கு ஆட மட்டுமே வாய்ப்பு தந்திருக்கிறார்கள். லூசுப் பெண் பாத்திரம்தான். படத்தின் நோக்கம், ஆதரவற்றோர் இல்லம் கட்ட நினைத்தவரை அவரது தத்துபிள்ளை வஞ்சித்து கொன்றுவிட அவரை எப்படி ரவிதேஜா பழிவாங்குகிறார் என்பதுதான். ஆனால் இடையில் வரும் காதல் காட்சிகள் படத்தின் போக்கை திசைமாற்றுகிறது. எரிச்சலூட்டுகிறது.
உள்துறை அமைச்சராக இருப்பவரை எந்த அதிகாரமும் இல்லாத ஒருவர் எப்படி எதிர்க்க முடியும்? நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்லி வாழ்பவர், மருத்துவர் என்று சொல்லி மருத்துவக் கல்லூரிக்கு சென்று காதல் செய்கிறார். உள்துறை அமைச்சரின் பணத்தை கடத்துகிறார் என இயல்பாக வந்திருக்க கூடிய கதைக்கு ஏராளமான பூச்சுற்றல் சமாச்சாரங்களை வைத்திருக்கிறார்கள். படத்திற்கு அதுவே பெரும் சுமை.
படத்தின் பாடல்களை ஏழு வண்ணங்களையும் நிறைத்திருக்கிறார்கள். படத்தின் சூழல்களுக்கும் அவற்றும் எந்த தொடர்புமில்லை. ஒருவரைக்கொல்லாமல் அவரை திருந்தச்செய்யும் கிளைமேக்ஸ் நன்றாக இருக்கிறது. பிறரின் பிரச்னைகளை தீர்த்து வைப்பதில்தான் நமது வாழ்க்கை சந்தோஷமே இருக்கிறது என்று உணர்த்தும் ரவிதேஜா மட்டுமே ஈர்க்கிறார்.
அன்பு செய் மனமே!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக