பெருந்தொற்று காலத்தில் தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றமுடியும்? ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முதல்வர்
ஹேமந்த் சோரன்
ஜார்க்கண்ட் முதல்வர்
கடந்த ஓராண்டாக உங்கள் அரசின் செயல்பாடுகளை எப்படி மதிப்பிடுவீர்கள். என்ன சவால்களை சந்தித்தீர்கள்.
வெளிமாநிலத்திற்கு வேலைக்குச் சென்ற தொழிலாளர்களை மாநிலத்திற்கு அழைத்துக்கொண்ட மாநிலங்களில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளோம். கோவிட் -19 தொற்றை வெற்றிகரமாக சமாளித்து மீண்டுள்ளோம். சிறப்பாக செயல்பட்டு நோய்த்தொற்றை குறைத்த மாநிலங்களில் நாங்களும் முக்கியமான மாநிலம். தினமும் பல்வேறு சவால்களை சந்தித்து வெற்றிகரமாக அதற்கு தீர்வு கண்டு வருகிறோ்ம்.
எதிர்க்கட்சிகள் கடந்த ஓராண்டாக உங்கள் அரசு ஏதும் செய்யவில்லை என்று பிரசாரம் செய்து வருகிறார்களே?
பெண்கள், சமூகப் பாதுகாப்பு, சுகாதாரம், கல்வித்துறைக்கான சட்டங்களை உருவாக்கியுள்ளோம். மேலும் கோவிட் -19 சமாளிப்பதற்கான உதவிகளை வழங்கியுள்ளது. நிதித்துறையை மேம்படுத்துவதற்காக பல்வேறு கொள்கைகளை மாற்றியுள்ளோம். சுற்றுலா, விளையாட்டு தொடர்பான புதிய விஷயங்களையும் மாற்றங்களையும் ஏற்படுத்தியுள்ளோம்.
ஜிஎஸ்டி வருவாய் வழங்குவது தொடங்கி மத்திய அரசுடன் பல்வேறு விதமாக குற்றச்சாட்டுகளை கூறி வருகிறீர்கள். இதை தீர்க்க என்ன வழி வைத்திருக்கிறீர்கள்?
நாங்கள் கூட்டாட்சி முறையில் நம்பிக்கை கொண்டுள்ளோம். ஆனால் கடந்த ஓராண்டாக மத்திய அரசின் செயல்பாட்டில் எங்களுக்கு கசப்பான அனுபவமே கிடைத்துள்ளது. மின்சாரம் வழங்குவது, ஜிஎஸ்டி வரி இழப்பீடு, வேறு திட்டங்கள் தொடர்பான மத்திய அரசின் உதவி ஆகியவையும் சிக்கலாக மாறிக்கொண்டு வருகிறது. நாங்கள் மத்திய அரசை அனைத்து விஷயங்களுக்கும் சார்ந்திருக்க விரும்பவில்லை. நாங்கள் எங்கள் ஜார்க்கண்ட் மாநிலத்து சுயசார்பு கொண்டதாக மாற்றவேண்டும் என நினைக்கிறோம். கடந்த இருபது ஆண்டுகளில் இதற்கு எந்த முயற்சியும் செய்யப்படவில்லை. எங்களுக்கு தரப்பட்ட 250 கோடி ரூபாய் நிதி கூட மிக குறைவானது.
பாபுலால் மராந்தி என்பவரை எதிர்கட்சி தலைவராக அரசு அங்கீகரிக்கவில்லை என்று குற்றச்சாட்டு எழுப்ப ப்படுகிறதே?
எதிர்கட்சி தலைவர் என்பது அரசு செயல்பாட்டில் முக்கியமானது. ஆனால் பாஜக எங்கள் செயல்பாடுகளைத் தடுக்கவே இதுபோல தேவையில்லாத விஷயங்களை பிரசாரம் செய்து வருகிறது. எங்கள் அரசு குதிரைப்பேரங்களுக்கு பயப்படாது. கடந்த இருபது ஆண்டுகளில் உருவான அரசுகளில் இது பலம் பொருந்தியது. தலைவர்களே இல்லாத பாஜக கட்சி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை எங்கள் மீது சுமத்தி வருகிறது.
தேர்தல் வாக்குறுதிகளை நீங்கள் நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சிகள் கூறுகின்றனவே?
கொரோனா பரவிக்கொண்டிருக்கிற சூழ்நிலையில் நீங்கள் எந்த செயல்பாடுகளை,மேம்பாட்டு பணிகளை செய்வீர்கள்? நாங்கள் அரசு தேர்வுகளை சிக்கல்களையும் பொருட்படுத்தாமல் நடத்தினோம். அதன் முடிவுகளையும் வெளியிட்டோம். முந்தைய அரசு ஏற்படுத்திய சீரழிவுகளை சரிசெய்யவே எங்களுக்கு நேரம் சரியாக இருக்கிறது. அதையும் மீறி கிடைத்த வாய்ப்புகளில் நாங்கள் எங்கள் பணிகளை செய்துகொண்டுதான் உள்ளோம்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
3.1.2021
முகேஷ் ரஞ்சன்
கருத்துகள்
கருத்துரையிடுக