சீன அதிகாரியைக் கொன்றது இன்பத்தை தூண்டும் மேஜிக் சூப்தானா? மேட் இன் இந்தியா - ராஜ்குமார் ராவ்
மேட் இன் சீனா
ரகுவீர் மேத்தா என்று குஜராத்தி வியாபாரி, தன் சிறுமூளை பெருமுளை என அனைத்திலும் உதிக்கும் யோசனைகளை தொழிலாக செய்கிறார். ஆனால் ஒன்றுமே அவருக்கு லாபம் தரமாட்டேன்கிறது. அவரது தந்தை அவருக்கு கொடுக்கும் யோசனை சீனாவுக்கு போ,எதையாவது கத்துக்கிட்டு வந்து தொழில் செய் என்கிறார். தனது அண்ணனுடன் அங்கு செல்பவர், சிறப்பான தொழில் ஒன்றுடன் இந்தியா வந்து சேர்கிறார். அதுதான் டைகர் சூப். புலியின் ஆண்குறியை கரைத்து செய்யும் உத்வேக செக்ஸ் மருந்து அது.
அதனை எப்படி இந்தியாவில் ரகுவீர் விற்றார், வணிகத்தில் வென்றார் என்பதுதான் படத்தின் முக்கியமான காட்சி.
பொதுவாக இந்தியாவில் செக்சைப் பற்றி நேரடியாக யாரிடமும் பேசும் பழக்கம் கிடையாது. இதனால் செக்ஸ் சூப்பை எப்படி வியாபாரம் பேசுவது எனும்போது தன்மய் என வணிகர் ரகுவீருக்கு உதவுகிறார். அவர்தான் இந்திய மக்கள் பற்றிய அடிப்படையை சொல்லிக்கொடுக்கிறார். இதனால் அவரின் யோசனைப்படி சிறந்த செக்ஸ் மருத்துவரை தேடி அலைகிறார் ரகுவீர். அப்படி கிடைத்தவர் மருத்துவர் வாரி. இவருக்கு ஆடு மட்டும்தான் துணை. மற்றபடி செக்ஸ் பற்றிய விழிப்புணர்வை உருவாக்கவே நினைக்கிறார் இவர். ஆனால் மருந்து தராத மருத்துவரை மக்களுக்கு பிடிக்குமா அதேதான். யாரும் மருத்துவர் வாரியின் பேச்சைக் கேட்பதில்லை. இவரின் அறிமுகம் கிடைத்தால்தான் சீனாவில் வந்து குவியும் மருந்து விற்கமுடியும். அதனை எப்படி சாதித்து இந்தியர்களின் கூச்ச சுபாவத்தை மாற்றி வணிகத்தில் வெற்றி பெறுகிறார் என்பதுதான் படம்.
படத்தில் ராஜ்குமார் ராவ்தான் ரகுவீர் மேத்தா. இவருக்கு முன்பே திருமணம் ஆகி பள்ளியில் படிக்கும் பையன் இருக்கிறான். எனவே ரிலாக்சுக்கு அவரின் மனைவி நாகினி மௌனிராயே ஆடினால்தான் உண்டு. அவரும் மலைக்க வைக்கும் ஆட்டம் போடுகிறார். ஆனால் படத்திற்கும் ஒட்டவேயில்லை. அவரின் அழகிற்கும் ராஜ்குமாருக்கும் பொருத்தம் இருப்பதாகவே தெரியவில்லை.
படத்தில் சீன அதிகாரி திடீரென அறையில் இறந்துகிடக்கிறார். அவர் இறப்பு சர்வதேச பிரச்னையாகிறது. அதில் ரகுவீர் மேத்தா மாட்டிக்கொள்கிறார். உடனே காவல்துறை, சிபிஐ விசாரிக்கிறது. படத்தின் கதை இப்படித்தான் பலர் சொல்லும் தகவல்கள் மூலம் நகர்கிறது. உண்மையில் மேஜிக் சூப்பில் என்னதான் கலக்குகிறார்கள் என்பதை அரசு அதிகாரிகள் கேட்கிறார்கள். ஆனால் இதனை ரகு சொல்லவிரும்பவில்லை. என்ன காரணம் என்பதுதான் படத்தின் ட்விஸ்ட். அதில்தான் அவரது நிறுவனத்தின் வணிக வெற்றியே அடங்கியுள்ளது. எப்படி நிறுவனத்தை காப்பாற்றினார், தன்னையும் வழக்கிலிருந்து மீட்டுக்கொண்டார் என்பதுதான் இறுதிக்காட்சி.
படத்தில் நடித்துள்ள அனைவருமே சிறப்பாக நடித்துள்ளார்கள். பொம்மன் இரானி, அமைரா தஸ்தூர், சூப்பர் ஸ்லோ உறவினர் என அனைவருமே சிறப்பாக பங்களித்திருக்கிறார்கள். படம் நேர்கோட்டிலேயே போய் முடிகிறது. இதனால் பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் போகிறது. நாவலை தழுவி படம் எடுக்கிறார்கள். தியேட்டரில் பார்ப்பதற்கான சுவாரசியத்தை இயக்குநர் உருவாக்கவில்லை.
பிளாசிபோ சூப்
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக