இடுகைகள்

என் தேசம் இந்தியா! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

குடிராம் போஸ்!- பதினெட்டு வயதில் செய்த அளப்பரிய தியாகம்!

படம்
என்தேசம் இந்தியா! குடிராம் போஸ் வங்காளத்தின் அலிப்பூரிலிருந்த டக்ளஸ் கிங்க்ஸ்ஃபோர்டு தன்னைப் பற்றி விமர்சித்து எழுதிய பத்திரிகைகளை படித்து படித்து மனம் வெந்து போனார். அதிலும் குறிப்பாக ஜூகந்தர் என்ற வங்காளப்பத்திரிகையில் கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான துவேஷ கருத்துகள் வெளியாக பத்திரிகை ஆசிரியர், உதவி ஆசிரியர்களை சிறையில் தள்ளி அடித்து நொறுக்கி ஆசுவாசமானார். தேசபக்தி இளைஞர் கூட்டம் இதற்கு எதிராக திரண்டெழுந்தது. இதில் முன்னணியில் புரட்சிக்கருத்துகளுக்கு பெட்ரோல் ஊற்றி மக்களை வெறி குறையாமல் வைத்திருந்த இளைஞர் சுசில் சென், கிங்க்ஸ்ஃபோர்டை பெரிதும் அச்சுறுத்தினார். உடனே அவரை கைது செய்ய காவலர்களை ஏவி, கசையடி கொடுக்கச்செய்தார். கசையடிகள் இளைஞர்களின் மனதில் ஆ்ங்கிலேயர் மீதான கோபத்தீக்கு நெய்விட்டது போலானது. உடனே டக்ளஸ் உயிருக்கு நாள் குறித்தது இளைஞர் கூட்டம்.அப்போது முசாபர் நகருக்கு மாற்றலாகியிருந்தார் டக்ளஸ். டக்ளஸை கண்காணித்து கொல்லும் பொறுப்பை  குடிராம்போஸ், பிரபுல்லா சக்கி என இரு இளைஞர்கள் ஏற்றிருந்தனர். 1908 ஆம் ஆண்டு ஏப்ரல் 30 அன்று டக்ளஸின் வீட்டுக்கு அருகில் நாட்டு வெட

தன்மான போராளி ராணி லட்சுமிபாய்!

படம்
என் தேசம் இந்தியா! ராணி லட்சுமிபாய் 1858 ஆம் ஆண்டு ஜூன் 17 ஆம் ஆண்டு குவாலியரில் ஆங்கிலேயருக்கு நடந்த போரை அவர்களும் மறக்கமுடியாது. இந்தியர்களும் மறக்கமுடியாது. அப்போரில்தான் மணிகர்ணிகா வீரமாக போரிட்டு தன் ரத்தத்தை இந்தியாவுக்கென அர்ப்பணித்து மரணத்தை தழுவினார். "அழகும் வசீகரமும் பொருந்தி ராணி, புரட்சி தலைவர்களிலேயே மிக ஆபத்தானவர்" என ஜெனரல் சர் ஹ்யூ ரோஸ் தன் குறிப்பில் அன்றே எழுதிவைத்திருக்கிறார். அவர் ராணி எனக் குறிப்பிட்டது மணிகர்ணிகா(மனு) என அழைக்கப்பட்ட ராணி லட்சுமி பாயைத்தான். சிறுவயதிலேயே தன்னை யானைமேல் ஏற்றாமல் தன் மகனை ஆண் என்ற ஒரே காரணத்திற்காக மேலேற்றிய பேஷ்வாவின் மகன் நானா சாகிப்பை எதிர்த்து "எதிர்காலத்தில் உன்னிடம் உள்ளதுபோல பத்து யானைகளை வாங்கி அதில் ஏறி பயணிப்பேன்' என சவால் விடும் தளராத தன்மானம் ராணியின் உடலில் ஆயுள் முழுவதும் குறையவில்லை. எத்தனை சாதித்த பெண்களிடமும் கணவருக்கு உங்கள் கையில் செய்த எந்த உணவு பிடிக்கும் என்று இன்றுவரை மைக்குகளை நீட்டும் பத்திரிகையாளர்கள் உண்டு. ராணி லட்சுமிபாய் மரப்பாச்சி பொம்மைகளை விளையாடும் வயதிலே குதி

இந்தியாவின் முதல் புரட்சி நாயகன்!

படம்
என் தேசம் இந்தியா! பகத்சிங் 1928 ஆம் ஆண்டு சைமன் கமிஷன் இந்தியா வந்தபோது கருப்புக்கொடி காட்டி இந்தியாவே போராடியது. என்ன காரணம்?, அரசியலமைப்பை திருத்தும் அந்த கமிஷனில் ஒருவர் கூட இந்தியராக இல்லை என்பதால்தான். அக்டோபர் 30 அன்று தேசியவாதியான லாலா லஜபதிராய்  சைமன் கமிஷனுக்கு எதிராக போராட்டம் ஒன்றை நடத்தினார். லாகூர் ரயில் நிலையத்தில் நடைபெற்ற அப்போராட்டத்தை போலீசார் என்ன வேடிக்கை பார்த்து்க்கொணடிருப்பார்களா? தூத்துக்குடியில் வண்டியைக் கொளுத்தி துப்பாக்கிச்சூட்டை தொடங்கிய போலீசாருக்கு முன்னோடிகள் அவர்கள். எனவே லத்தியை சுழற்ற பலர் அடிபட்டு வீழ்ந்தனர். அதில் போராட்டத்தை முன்னெடுத்த லாலா லஜபதியும் ஒருவர்.  அடித்த அடியில் மருத்துவமனையில் காயங்களுடன்  படுக்கையில் துவண்டு கிடந்த லாலா, நவம்பர் 17 அன்றே  இறந்துபோனார்.  இந்த சம்பவம் பிறருக்கு கோபம் தந்ததோ  இல்லையோ பகத்சிங் என்ற இளைஞனுக்கு தீராத வன்மத்தை ஆங்கிலேயர்கள் மீது ஏற்படுத்தியது. தோழர்கள் சிவராம் ராஜகுரு, சந்திரசேகர் ஆசாத் ஆகியோருடன் சேர்ந்து லத்தி சுழற்ற உத்தரவிட்ட சூப்பரிடெண்ட் ஜேம்ஸ் ஏ ஸ்காட்டை கொலை செய்ய திட்டமிட்டனர்.