இடுகைகள்

புலனாய்வு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையை வெளிப்படுத்த புலனாய்வு செய்தி முறை! - எதிர்கொள்ளும் விளைவுகள்

படம்
  பத்திரிகையாளர் அவர் நாட்டில் உள்ள சட்டங்களைப் பின்பற்றித்தான் செய்தி சேகரிக்க வேண்டும். ஒருவேளை நாட்டில் ஊடக சுதந்திரம் இல்லை. மக்களுக்கு தெரிய வேண்டிய செய்திகளை அரசு மறைக்கிறது என்றால் அப்போது அதற்கான வழியைத் தேர்ந்தெடுத்து செய்தி சேகரிக்கலாம். இந்த ஒரு சூழ்நிலையைத் தவிர்த்து வேறு எந்த வழியிலும் ஒருவர் சட்டத்திற்குப் புறம்பான வகையில் சென்று செய்தி சேகரிக்கக்கூடாது. அப்படி சேகரித்து வெளியிடுவது மக்களின் நலனுக்காக என்றால் ஏற்றுக்கொள்ளலாம். மற்ற வகையில் பத்திரிகையாளர், வெளியிடும் நாளிதழ், ஊடக நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. புலனாய்வு பத்திரிகையாளர்கள் செயல்பாடு என்பது சட்டத்திற்கு உட்பட்டு இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. அந்த முறையிலும் பத்திரிகையாளர், நிறுவனம்   வழக்குகளை சந்திக்க அதிக வாய்ப்புகள் உள்ளன. செய்திகளை சேகரிப்பதில் விதிவிலக்கான நேரங்களைத் தவிர்த்து பிற சமயங்களில் சட்டத்திற்கு உட்பட்டு செய்தி சேகரிப்பதே நல்லது. அரசு அமைப்பு, அல்லது தனியார் அமைப்பு, அதிகாரிகள், தனிநபரின் போனை ஒட்டுக்கேட்பது, கணினியில் உள்ள தகவல்களைத் திருடுவது ஆகியவற்றைச் செய்து ச

புலனாய்வு கட்டுரைகளில் சாதனை படைத்த செய்தியாளர்! - சர் ஹரால்டு ஈவன்ஸ்

படம்
    சர் ஹரால்டு ஈவன்ஸ்   புலனாய்வு செய்தியாளர்! சர் ஹரால்டு ஈவன்ஸ், 92 வயதில் கடந்த புதன்கிழமை அன்று மறைந்தார். பிரிட்டிஷ் அமெரிக்க ஆசிரியரான இவர் இத்துறையில் 70 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். புலனாய்வு செய்தியாளர்,  வார இதழ் நிறுவனர், புத்தக வெளியீட்டாளர், ஆசிரியர் என அவரது தலைமுறை சார்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். இங்கிலாந்தில் வெளிவரும் சண்டே டைம்ஸ் ஆசிரியராக ஈவன்ஸ் பணியாற்றினர். இவரும் இவரது தலைமையின் கீழ் அமைந்த குழுவும், மனித உரிமை மீறல்கள், அரசியல் ஊழல்கள் என பல்வேறு சமூக சீர்கேடுகளை அவலங்களை வெளியே கொண்டு வந்த பெருமை உடையவர்கள். தாலிடோமைட் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு இழப்பீடு வேண்டி, ஈவன்ஸ் எழுதிய கட்டுரை பத்தாண்டுகளுக்குள் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தந்த்து. 14 ஆண்டுகள் சண்டே டைம்ஸில் பணியாற்றியர் பின்னாளில் டைம்ஸ்  பத்திரிகைக்கு மாறினார். ரூபர்ட் முர்டோக் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையை வாங்கியதுதான் காரணம். அவர் வாங்கியபிறகு ஈவன்ஸ் ஒரு ஆண்டுதான் அங்கு வேலை செய்தார். அதற்குப் பிறகு உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து அமெரிக்காவுக்

பாமா படிக்கலாமா - மயிலாப்பூர் டைம்ஸ்!

படம்
மயிலாப்பூர் டைம்ஸ்! பாமா.... படிக்கலாமா? நம் ஊரைப் பொறுத்தவரையில் பாவம் என்று சொல்வது எல்லாம் பதினெட்டு வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான். சில விஷயங்களை நீங்கள் தெரிந்துகொண்டால் அதற்குப்பிறகு பாவம், புண்ணியங்களை எளிதாக கைவிட்டுவிடுவீர்கள். அல்பன்லீபே சாக்லெட்டை சப்பி சாப்பிட்டு, தமன்னா சாப்பிடச்சொன்ன குச்சி மிட்டாய்க்கு நகர்ந்து இப்போது கோபிகோக்கு நகர்ந்து வருகிறார்களே அப்படித்தான். சினிமா பார்த்து பல விஷயங்களை தெரிந்துகொண்டிருப்பீர்கள். கேன்சர் வந்தால் எப்பாடு பட்டாலும் ரத்தம் கக்கித்தான் சாகவேண்டும். ஏன்? பின்னே புற்றுநோயை எப்படித்தான் பார்வையாளர்களுக்கு கடத்துவது? இப்படித்தான் ராமராஜன் படத்தில் ஒரு காட்சி. அனேகமாக மேதை எனும் படம் என்று நினைக்கிறேன். நாயகனின் திருமண முதலிரவு. ஆனால் அவர் கடமையே நான் கல்யாணம் செய்த பொண்டாட்டி என கர்ம சிரத்தையாக வேலைகளை செய்கிறார். முதலிரவில் வைத்திருக்கும் பால் தயிராக மாறியிருக்கிறது என காட்சி வைத்து மிரட்டியிருப்பார் இயக்குநர். அப்படிப்பட்ட சினிமாவிலும்  அனைவரும் பார்த்து வியந்தது என்னாச்சு என்று கேட்ட சமாச்சாரம் ஒன்று உண்டு. அதுதான்

என்னைக்கொல்பவன் யார்? - பியோம்கேஷை மிரட்டும் புதிய வழக்கு!

படம்
ஹோய்சோய் ஒரிஜினல்ஸ் அனிர்பன் பட்டாச்சார்யா, சுப்ரதா தத்தா, ரிதிமா கோஷ் சக்ரபோர்த்தி நடிக்கும் பியோம்கேஷ் சீசன் 2 இயக்கம் சௌமிக் சட்டோபாத்யாய இம்முறை வித்தியாசமான வழக்கை பியோம்கேஷ் எதிர்கொள்கிறார். தான் இறக்கப்போகிறோம் என்று தெரிந்தே அதனைக் கண்டுபிடிக்க காசு கொடுக்கிறார் ஊதாரி ஸ்த்ரீ லோலரான சத்ய காம்தாஸ். தான் இறக்கப்போகிறோம் என்பதை விட யார் மூலம் இறக்கப்போகிறோம் என்பதை அறியவே அவர் விரும்புகிறார்.  அப்போது பணத்தேவையில் இருந்த பியோம்கேஷ் ஆயிரம் ரூபாயை வாங்கிக்கொண்டு, துப்பு துலக்க சுசித்திரா எம்போரியம் செல்கிறார். அங்கு, அதன் முதலாளியான தாஸின் அப்பாவைச் சந்திக்கிறார். ஆனால் அவர்களின் வருகையைக் கண்டுபிடித்துவிட்ட தாஸ், அவர்களுக்கு அவராகவே கம்பளிக் கோட்டை தேர்ந்தெடுத்து 230 ரூபாய் பில்லை 100 ரூபாயாக குறைத்து தருகிறார். கூடவே என்னை பின்தொடர்ந்து வராதீர்கள் என எச்சரிக்கிறார்.  அப்போது தாஸின் காதலில் விழுந்து, கற்பைப் பறிகொடுக்கிறார் அன்னபூர்ணா தேவி. அவரின் கடையில் வந்து நின்று கல்யாணத்திற்காக கெஞ்சுகிறார். அங்கு கண்ணீர் மல்க நிற்பவருக்கு,  உடனே புடவை ஐந்தைக் க

பெலுடா கதைகள் - பம்பாய் கொள்ளையர் மற்றும் தங்கக்கோட்டை!

படம்
புத்தக விமர்சனம் பம்பாய் கொள்ளையர்கள் - தங்க கோட்டை சத்ய ஜித்ரே பெலுடா தொடர்கதை வரிசை தமிழில்: வீ.பா. கணேசன் பாரதி புத்தகாலயம் இரண்டு நாவல்களும் சந்தேஷ் என்ற பத்திரிகையில் தொடராக வெளிவந்த துப்பறியும் கதைகள்தான்.  பெலுடா, தபேஷ் என்ற இருவர்தான் இதில் நாயகர்கள். பெலுடா  எனும் பிரதேஷ் மித்தர் புகழ்பெற்ற உண்மை ஆய்வாளர். இவரின் உறவினர், சிறுவன் தபேஷ். பம்பாய் கொள்ளையர்கள் கதையில் எழுத்தாளர் லால்மோகன், ஒரு கதை எழுதுகிறார். அதில் மும்பையிலுள்ள சிவாஜி கோட்டை பற்றி பெலுடா தகவல் கொடுக்க, கடத்தல் கும்பல் தங்கியிருப்பதாக எழுதிவிடுகிறார். இதனைப் படிக்கும் கடத்தல்காரர், அவரைப் பின்தொடர்கிறார். அப்போது, அதிர்ஷ்டவசமாக அவரது கதையை படமாக தயாரிக்க மும்பையைச்சேர்ந்த கோரே என்ற தயாரிப்பாளர் இசைகிறார். அதற்கு மும்பைக்குச் செல்லும்போது, அவரின் கையில் சன்யால் எனும் மற்றொரு படத்தயாரிப்பாளர் பார்சல் ஒன்றை கொடுக்கிறார். அதனை மும்பையில் சிவப்பு சட்டைக்கார ரிடம் ஒப்படைக்கிறார். ஆனால் இப்பணியை பெலுடா விரும்பவில்லை. எழுத்தாளர் லால்மோகன் சின்ன உதவிதானே, அடுத்த கதையை சன்யால் வாங்கிக்கொள்கிறார் என

தடுப்பூசிகள் நம்மை நோயிலிருந்து காக்கிறதா?

படம்
goodreads Vaccine Science Revisited: Are Childhood Immunizations As Safe As Claimed? (The Underground Knowledge Series #8) by   James Morcan   (Goodreads Author) ,   Lance Morcan   (Goodreads Author) ,  Elisabet Norris   (Foreword) நீங்கள் கல்வியாளரோ, பத்திரிகை ஆசிரியரோ, டாக்டரோ யாராக வேண்டுமானாலும் இருங்கள். ஆனால் தடுப்பூசி பற்றிய இந்நூல் அதுகுறித்த கவனத்தை உங்களிடம் ஏற்படுத்தும். தடுப்பூசிகளின் தயாரிப்பு, அது அன்றைக்கு ஏற்படுத்திய தாக்கம் ஆகியவையும் இதில் பேசப்படுகின்றன. புலனாய்வு முறையில் தடுப்பூசிகள் எப்படி தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றன என்பதை ஆசிரியர்  வி ளக்கி அதிர்ச்சியை தருகிறார்.  Goodreads The Electric War: Edison, Tesla, Westinghouse, and the Race to Light the World (Gilded Age #1) by   Mike Winchell   (Goodreads Author) மின்சாரத்தை யார் கண்டுபிடித்தது என்றால் என்ன பதிலைக் கூறுவீர்கள்? ஆனால் அக்காலத்தில் அப்போட்டியில் தாமஸ் எடிசன், நிக்கோலா டெஸ்லா, ஜார்ஜ் வெஸ்டிங்ஹவுஸ் ஆகியோர் ஈடுபட்டிருந்