புலனாய்வு கட்டுரைகளில் சாதனை படைத்த செய்தியாளர்! - சர் ஹரால்டு ஈவன்ஸ்
சர் ஹரால்டு ஈவன்ஸ் |
புலனாய்வு செய்தியாளர்!
சர் ஹரால்டு ஈவன்ஸ், 92 வயதில் கடந்த புதன்கிழமை அன்று மறைந்தார். பிரிட்டிஷ் அமெரிக்க ஆசிரியரான இவர் இத்துறையில் 70 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர். புலனாய்வு செய்தியாளர், வார இதழ் நிறுவனர், புத்தக வெளியீட்டாளர், ஆசிரியர் என அவரது தலைமுறை சார்ந்து பல்வேறு சாதனைகளை படைத்தவர். இங்கிலாந்தில் வெளிவரும் சண்டே டைம்ஸ் ஆசிரியராக ஈவன்ஸ் பணியாற்றினர். இவரும் இவரது தலைமையின் கீழ் அமைந்த குழுவும், மனித உரிமை மீறல்கள், அரசியல் ஊழல்கள் என பல்வேறு சமூக சீர்கேடுகளை அவலங்களை வெளியே கொண்டு வந்த பெருமை உடையவர்கள்.
தாலிடோமைட் எனும் குறைபாட்டினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு இழப்பீடு வேண்டி, ஈவன்ஸ் எழுதிய கட்டுரை பத்தாண்டுகளுக்குள் அவர்களுக்கு இழப்பீடு பெற்றுத்தந்த்து.
14 ஆண்டுகள் சண்டே டைம்ஸில் பணியாற்றியர் பின்னாளில் டைம்ஸ் பத்திரிகைக்கு மாறினார். ரூபர்ட் முர்டோக் சண்டே டைம்ஸ் பத்திரிக்கையை வாங்கியதுதான் காரணம். அவர் வாங்கியபிறகு ஈவன்ஸ் ஒரு ஆண்டுதான் அங்கு வேலை செய்தார். அதற்குப் பிறகு உரிமையாளருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து அமெரிக்காவுக்கு கிளம்பினார். இவரின் மனைவியும் பத்திரிக்கையாளர்தான். ஈவன்ஸ் தி அமெரிக்கன் சென்சுரி - 1998, தே மேட் அமெரிக்கா 2004 என்ற இரண்டு புகழ்பெற்ற நூல்களை எழுதினார். ஈவன்ஸை முன்வைத்தே சில ஆவணப்படங்களும் பிரச்னைகளும் பேசப்பட்டு இருக்கின்றன. அட்டாக்கிங் தி டெவில் ஹரால்டு ஈவன்ஸ் அண்ட் தி லாஸ்ட் நாஸி வார் கிரைம் என்பது பிறப்புக்குறைபாடுகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் பற்றியது. ராண்டம் ஹவுஸ் நிறுவனத்தின் பதிப்பாளராக 1990 முதல் 97 வரை செயல்பட்டார். இக்காலகட்டத்தில் இந்த நிறுவனம் பொருளாதாரீதியாக சிறப்பாக பயன் பெற்றது. காண்டே நாஸ்ட் டிராவெலர் என்ற இதழை உருவாக்கி அதன் தலைவராக செயல்பட்டார்.
2004ஆம் ஆண்டு இதழியலுக்கு ஈவன்ஸ் ஆற்றிய பணிக்காக இங்கிலாந்து ராணி இவருக்கு விருது வழங்கினார். மேலும் இரண்டு ஆண்டுகள் கழித்து 2006ஆம் ஆண்டு நடைபெற்ற கருத்துக்கணிப்பில் ஆல்டைம் கிரேட்டஸ்ட் நியூஸ்பேப்பர் எடிட்டர் என புகழப்பட்டார்.
இங்கிலாந்தைச் சேர்ந்த கிம் பில்பி என்ற உளவியலாளர், ரஷ்யாவுக்கும் உளவு வேலை பார்த்தாக கட்டுரையை ஈவன்ஸ் வெளியிட்டார். இதற்கு இங்கிலாந்து அரசு கடும் கண்டனத்தை தெரிவித்து, அக்கட்டுரை தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து என்றும் கூறியது.
பிஸினஸ் ஸ்டாண்டர்டு
கருத்துகள்
கருத்துரையிடுக