தானியங்கி கார்கள் உருவாக்கப்போகும் மாற்றம் இவைதான்! - டாக்சி இல்லாத காலமும் வரும்!
ஓட்டுநர் இல்லாத கார்கள் உருவாக்கும் மாற்றம்!
இப்போது வரும் கார்களில் பார்க்கிங் அசிஸ்டென்ஸ் வசதிகள் உண்டு. ஒட்டுநர் இல்லாத கார்களில் நீங்கள் எங்கு இறங்கவேண்டுமோ அங்கு இறங்கிக்கொள்ளலாம். பின்னர் கார் தானாகவே சென்று தேவையான இடத்தில் நின்றுகொள்ளும். அதனை நாமாகவே எடுத்துச்சென்று நிறுத்தவேண்டியதில்லை.
பழகுவது அவசியம்
சாதாரண கார்களில் வண்டியை ஓட்டிப்பழகுவது, நடைமுறைக்குவருவது என ஆறு மாதங்கள் பிடிக்கும். தானியங்கி கார்களை பழகுவதும் அப்படித்தான். உங்கள் குரல் காரில் உள்ள ஏ.ஐக்கு புரியவேண்டும். சென்று வரும் இடங்களின் மேப் பதிவாக வேண்டும். எனவே இக்கார்களை ஓட்ட நன்கு பயில்வது அவசியம்.
நோ டாக்சி
சொந்த கார்களே இனி தானாகவே ஓடும்போது நிறைய வசதிகள் உண்டு. வாடகை கார்கள் ஓட்டும் டிரைவர்கள் இதற்கு தேவை இல்லை. உபர் கூட இந்த வழியில் யோசித்து செயல்பட்டு வருகிறார்கள். உடனே இல்லை என்றாலும் எதிர்காலம் இப்படித்தான் இருக்கப் போகிறது. எனவே, ட்ரைவரிடம் பேசுவது, சண்டை போடுவது எல்லாவற்றையும் மறந்துவிட்டு அமைதியாக பயணிப்பது இனி நடைமுறைக்கு வரலாம்.
உறக்கமா, கலக்கமா?
நீங்கள் தூங்கும்போது கூட காரை கவனிக்கவேண்டியதில்லை. இப்போதல்ல. தானியங்கி கார்கள் நன்கு பயிற்சி பெற்றபிறகு, நீங்கள் காரில் ஏறி பாதுகாப்பு பட்டைகளை அணிந்துகொண்டால் போதுமானது. தூங்கினாலும் விழித்திருந்தாலும் சரி, நீங்கள் சொல்லும் இடத்திற்கு கார் தானே பயணிக்கும்.
அனைத்தும் திட்டப்படி..
நகரங்களுக்கும் லாரி, வேன்கள் வந்து செல்லும் நேரம் தீர்மானிக்கப்படும். இதனால் மக்கள் தானியங்கி கார்களில் பயணிக்கும்போது தேவையில்லாத தொந்தரவு ஏதும் ஏற்படாது. இதனால் எரிபொருள் சிக்கனமாகும்.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக