பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட சத்யமேவ ஜயதே ! மோனிகா செர்ஜில்
மோனிகா செர்ஜில் |
இம்பேக்ட் இதழில் முக்கியமான சில பெண்கள்!
தொடரில் 50 பெண்களைப் பற்றி எழுதினோம். இதில் தேர்வாகாத சில பெண்களும் ஊடகத்துறையில் உள்ளனர். அவர்களைப் பற்றிய சிறு குறிப்பு இது.
மோனிகா செர்ஜில்
இயக்குநர் இன்டர்நேஷனல் ஒரிஜினல்ஸ், நெட்பிளிக்ஸ் இந்தியா
பத்திரிகையாளர், டிவிகளில் ஆக்கத்தலைமை என பொறுப்பேற்று ஜீடிவி, ஸ்டார் பிளஸ், வெப் நிறுவனமான வூட் ஆகியவற்றில் பணியாற்றிய 20 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். வயகாம் 18 நிறுவனத்திலும் பணியாற்றியவரின் சிறப்பு, சீரியல் அல்லாத நிகழ்ச்சிகளை சிறப்பாக ஆலோசனைகளை வழங்கி உருவாக்குவதுதான். அதனால்தான் நெட்பிளிக்சில் அவருக்கு இன்டர்நேஷனல் ஒரிஜினல்ஸ் இயக்குநர் பொறுப்பை அளித்திருக்கிறார்கள். இவர் தயாரித்த சத்யமேவ ஜயதே தொடர், மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற தொடர் ஆகும். இதில் இந்தி நடிகர் அமீர்கான், நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் விதத்தையே மாற்றினார். பின்னாளில் இது பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமை கொண்டது. வூட் வெப் நிறுவனத்தில் இவர் தேர்ந்தெடுத்து உருவாக்கிய தொடர்கள், நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் எண்ணிக்கையை 30 சதவீத த்திற்கும் மேல் உயர்த்தியது.
கருத்துகள்
கருத்துரையிடுக