டீசல்கார்களுக்கு எதிர்காலத்தில் வாய்ப்பு குறைவு! - ஹைபிரிட் கார்களுக்கு ஆதரவு பெருகலாம்!

 

Car, Sports Car, Luxury, Model, Auto, Automobile
cc

 

எதிர்கால கார்கள்

டீசல்கார்களை நகரங்களுக்கும் கொண்டுவருவதற்கு ஐரோப்பிய நாடுகளில் தடை விதிக்கப்படலாம். டீசலுக்கான வரிகள் உயர்த்தப்படலாம் இதனால் பல்வேறு கார் தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்காலத்தில் டீசல் கார்களின் தயாரிப்பை கைவிடுவது உறுதி. மெர்சிடிஸ் நிறுவனம், டீசல் கார்கள் முழுக்க அழிந்துவிடாது என்று கூறியிருக்கிறது. மெர்சிடிஸ் சி300 போன்ற ஹைபிரிட் கார்கள் சந்தையில் வலம் வரலாம். இதற்கு நிறைய மவுசு பெறலாம்.

எலக்ட்ரிக் கார்கள்

டெஸ்லா இந்த பிரிவில் சிறப்பான தலைவராக எலன் மஸ்கை கொண்டிருப்பதால் வேகமாக முன்னேறி வருகிறது. இதற்காக மற்றவர்கள் பின்தங்குகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். ஜாக்குவாரின் ஐ பேஸ் என்ற கார் இதற்கு போட்டி தரக்கூடியது. போர்ச், ஆடி, பிஎம்டபிள்யூ ஆகிய நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரித்து வருகிறார்கள். இதில் ஹூண்டாயின் கோனா எலக்ட்ரிக் கார் சிறப்பாக இருக்கிறது.

வேகம் வேகம்

மணிக்கு 482 கி.மீ வேகத்தில் செல்லும் காரை கற்பனை செய்து பார்த்திருக்கிறீர்களா? ஹென்னஸி என்ற கார் நிறுவனம் இந்த வகையில் கார்களை தயாரித்து வருகிறது. ஜான் ஹென்னசி என்பவர்தான் இந்நிறுவனத்திற்கு உரிமையாளர்.  வெனோம் எஃப் 5 என்ற கார் 1600 ககுதிரைசக்தி திறன் கொண்டது. வி8 எஞ்சின் ஆகிய அம்சங்கள் காரை வேகப்படுத்துகின்றன. விரைவில் நமது இந்தியாவிலும் காரை ஓட்டி மக்களை மிரட்டுவார்கள்.

சந்தா கட்டுங்க காரை ஓட்டுங்க

வோல்வோ நிறுவனம் இந்த ஐடியாவை கண்டுபிடித்துள்ளது. அதாவது நூலகத்தில் ஆண்டு சந்தா ஐந்து ரூபாய் கட்டிவிட்டு புத்தகத்தை எடுத்து சென்று படிப்போம்  அல்லவா? அதேதான். இம்முறையில் காசை உங்கள் போனிலிலுள்ள செயலி மூலம் செலுத்திவிட்டு அதனை சாவியாக பயன்படுத்தி காரை இயக்கலாம். சந்தா தொகையை செலுத்தும்வரை கார் உங்களுக்கு சொந்தமாக இருக்கும். கட்டாதபோது கம்பெனி குழு வந்து எடுத்து சென்றுவிடுவார்கள். 

bbc
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்