எதிர்கால வாழ்க்கை எப்படி அமையும் என்று யோசிக்கலாம் வாங்க!
cc |
எதிர்கால வாழ்க்கை இப்படித்தான்!
வீடியோகேம் பாத்திரங்களுக்கு மட்டும்தான் காயங்களை குணப்படுத்திக்கொள்ளும் திறன் இருக்குமா என்ன? வீட்டுச்சுவர்களுக்கும் ஏற்படும் பாதிப்புகளை தற்போது விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ள கோட்டிங் மூலம் எளிதில் சரி செய்யலாம். இதிலுள்ள மைக்ரோகேப்சூல்தான் இப்பணியைச் செய்கிறது. ஸ்டோலோடுசன் என்ற நிறுவனம், நீரை உள்ளேவிடாத பெயின்டை உருவாக்கியுள்ளது. 500 நிறங்களில் கிடைக்கும் இந்த பெயின்ட் மூலம் வீடுகளின் சுவர்கள், தலைமுறைகளுக்கும் பொலிவை இழக்காது.
ஜன்னல்
டெக்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் மின்சாரம் மூலம் சார்ஜ் செய்யும் ஜன்னல் அமைப்பை கண்டறிந்துள்ளனர். அறைக்குள் வெளிச்சம் மூலம் கிடைக்கும் வெப்பத்தை தடுக்கமுடியும். இதிலுள்ள நானோ கிரிஸ்டல்ஸ் அமைப்பு அறைக்குள் வரும் 90 சதவீத புற ஊதாக்கதிர்களைத் தடுக்கிறது. வெளிச்சத்தையும், வெப்பத்தையும் தடுக்கும் வேளையில், நானோகிரிஸ்டல் மின் அமைப்பு வெளிச்சம் மூலம் கிடைக்கும் வெப்ப சக்தியை மின்னாற்றலாக சேமித்துக்கொள்கிறது.
பாதுகாப்பு
இனிமேலும் பாதுகாப்பிற்கு நாய் வளர்க்க அவசியமில்லை. மிடிபி நிறுவனத்தின் கெவின் என்ற சாதனத்தை வாங்கி பொருத்தி, இணைய இணைப்பு கொடுத்துவிட்டால் போதும். உங்கள் போனுடன் நீங்கள் வெளியே சென்றபிறகு, உங்கள் வீட்டிற்கு யார் வந்தாலும் சரி உடனுக்குடன் அவர்களின் முகம் படம்பிடிக்கப்பட்டு உங்களுக்கு செய்தி வந்துவிடும். கதவில் பொருத்தக்கூடிய எஸ்விஷ் வியூவர், முகமறிதல் வசதியோடு வருவதால் அறிமுகம் இல்லாதவர்கள் உங்கள் வீட்டிற்கு வரவே முடியாது.
விளக்குகள்
அறைக்குள் நாம் நுழைந்தால் விளக்கு எரிவது போன்ற தொழில்நுட்பங்கள் முன்பே வந்துவிட்டன. இப்போதைய டிரெண்ட், நாம் கேட்கும் இசைக்கு ஏற்ப விளக்குகளும் நடனம் ஆடுவதுதான். மீபோ நிறுவனத்தின் பிளேபல்ப் இந்த பணியை நிறைவேற்றுகிறது. இதிலேயே வயர்லெஸ் ஸ்பீக்கர் இருப்பதால, தாலாட்டு கேட்டுக்கொண்டே கூட தூங்கலாம்.
ரோபோ சப்ளையர்
சிஇஎஸ் கண்காட்சியில், எல்ஜியின் க்ளோஐ ரோபோ ஒழுங்காக வேலை செய்யாமல் முரண்டுபிடித்தது. ஏயோலக்ஸ் ரோபோ, மோசமில்லாமல் வீட்டுவேலைகளை செய்து நம்பிக்கை அளித்தது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பெர்க், வீட்டுவேலைகளை செய்யும் ரோபோ தயாரிப்பில் இயங்கிவருகிறார்.
உணவு மேலாண்மை
எதிர்காலத்தில் நாம் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டி, முழுக்க நிறைந்தவுடன் அதனை குறித்துக்கொள்ளும். பால் தீர்த்துவிட்டால் உடனே நமக்கு ஸ்மார்ட்போன் வழியே மறக்காமல் பால் வாங்கி வரவும் என செய்தி அனுப்பும். இதற்குத்தான் குளிர்சாதனப்பெட்டியோடு அலெக்ஸா, சிரி, கூகுள் அசிஸ்டெண்ட் ஆகியவற்றை இணைத்திருக்கவேண்டும். இந்த வகையில் எல்ஜியின் இன்ஸ்டாவியு திங்க், சாம்சங்கின் ஃபேமிலி ஹப் 3.0 குளிர்சாதனப்பெட்டிகள் வெளியாகியுள்ளன.
மின்சாரம்
இனி ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய சார்ஜரைத் தேடி அலையவேண்டியதில்லை. வாட்அப் (wattup) நிறுவனத்தின் வயர்லெஸ் சாதனங்களை வாங்கினால் போதும். எளிதாக பிளக் பாய்ண்டிலிருந்து 4.5 மீட்டருக்குள் வயர்லெஸ் முறையில் சார்ஜ் செய்துகொள்ளலாம்.
தகவல்-BBC SF
கருத்துகள்
கருத்துரையிடுக