செயற்கை நுண்ணறிவு நம்மை விட சிறந்ததா?

 

 

 

Woman, Skin, Portrait, Face, Model, Futuristic, Ai
கிகா

மிஸ்டர் ரோனி

செயற்கை நுண்ணறிவு நம்மை விட சிறந்ததா?

இது பதில் சொல்லுவதற்கு மிக கடினமான கேள்வி. இன்றுவரை செயற்கை நுண்ணறிவு ஆறுவயது சிறுவனின் அறிவை விட அதிகமாக கற்றுக்கொள்ளவில்லை. மனிதர்களின் உதவியின்றி தானியங்கி கார்களை சாலையில் விட்டால் விபத்துகள் ஏற்படும். அதைப்போலத்தான் பாத்திரங்களை கழுவது போன்றவையும் உள்ளது. முன்பை விட இன்று நம்மிடையே ஆற்றல் வாய்ந்த கணினிகள், நிறைய தரவுகள் உள்ளன. கோடிக்கணக்கான அல்காரிதம்கள் உள்ளன. தானியங்கி கார்களை ஓட்டுவதில் செயற்கை நுண்ணறிவு இன்னும் மனிதர்களைப் போல நிபுணத்துவம் பெறவில்லை. ஒரு படத்தில் ஒளிந்துள்ள பூனையின் ஒருபகுதி போன்ற செயல்களை மனிதர்களை விட வேகமாக திறமையாக செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிக்கிறது என்பது உண்மை. மனிதர்களின் உதவியின்றி செயற்கை நுண்ணறிவு எப்படி திறன் பெற்றதாக உருவாகும் என்று தெரியவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அதற்கான வாய்ப்பு உள்ளது. மனிதர்களைப் போன்ற திறன் பெற்ற ஏ.ஐ எதிர்காலத்தில் நம்மோடு போட்டிபோடும்படி உருவாகும் வாய்ப்பு உள்ளது.

தினசரி வாழ்க்கையில் செயற்கை நுண்ணறிவு பயன்படுகிறதா?

நீங்கள் இணையத்தில் வாங்கும் அனைத்து பொருட்களின் விவரங்களையும் இ விற்பனைத்தள நிறு்வனத்தின் ஏ.ஐ கவனித்துக்கொண்டுதான் உள்ளது. அதனால் நீங்கள் என்ன எதிர்பார்ப்பீர்களோ அந்த பொருட்கள் சந்தைக்கு வந்தவுடன் உங்களுக்கு குறுஞ்செய்தி வருகிறது. மேலும், உங்கள் போனில் உங்கள் முகத்தை எப்படி ஸ்கேன் செ்யது உள்ளே நுழைகிறீர்கள், உங்கள் கேமரா எப்படி உங்கள் முகத்தை தெளிவாக எங்கிருந்தாலும் கண்டுபிடித்து படம் எடுக்கிறது? தானியங்கி கார் சோதனை எப்படி நடைபெறுகிறது? இதற்கு ஒரே பதில்தான். ஏ.ஐ. இன்று கூகுள், அலெக்ஸாவிடம் கேள்வி கேட்டால் கூட உங்கள் குரலை வைத்து யார் தன்னை அழைப்பது என புரிந்துகொள்ளும். அந்தளவுக்கு புத்திசாலித்தனமாக ஏ.ஐ வளர்ந்துள்ளது.
பிபிசி
 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்